அணுகுமுறை அனுபவம்

பங்களாதேஷின் தலைநகர் டாக்கா, 90 வீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் நகரம். 10,000க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் டாக்காவில் மாத்திரம் இருக்கின்றன. இந்த அத்தனை பள்ளிவாசல்களிலும் மலசல கூட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் மக்கள் பாதையோரங்களிலும் பொது இடங்களிலும் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக இங்கு சிறுநீர் கழிப்பது தடை என்று பெங்காளி மொழியில் எழுதப்பட்டிருந்த இடங்களில் மிக மிக அதிகமானவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதனால் பொது இடங்கள் எங்கிலும் அனைவரும் மூக்கைப் பொத்திய நிலையிலேயே செல்ல வேண்டிய கட்டாயத் தேவை இருந்தது.பங்களாதேஷின் Ministry of Religious Affairs இதற்கு நூதனமான ஒரு தீர்வைக் கண்டுபிடித்து செயல் படுத்தி நூறு வீதம் வெற்றியும் கண்டது.

அறபு மொழி பங்களாதேஷெங்கும் புனிதமாகக் கருதப்படக்கூடிய மொழியாகும். பொருள் தெரியாவிட்டாலும் அறபு எழுத்துக்களைக் கண்டாலே அதற்கு மரியாதை செய்யக்கூடிய பழக்கம் அங்கு வழக்கமாக இருக்கின்றது. இந்த மக்கள் வழக்கத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய இந்தக் கெட்ட பழக்கத்தை ஒழிப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டது.
இரவோடிரவாக ‘இங்கு சிறுநீர் கழிப்பது தடை’ என்று பெங்காளி மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் யாவும் அழிக்கப்பட்டு அதே விடயம் அறபு மொழியில் சுவர்களெங்கும் எழுதப்பட்டது.

விளைவு அடுத்த நாள் காலையிலிருந்தே வெளித்தெரியத் தொடங்கியது.
தமது மொழியில் எழுதப்பட்டிருந்த போது நின்று கொண்டு அந்த வாசகங்களுக்கு மேலேயே சிறுநீர் கழித்தவர்கள் தமக்குப் புரியாத மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைக் கண்டதும் அதைத் தொட்டு முத்தமிட்டு விட்டு சிறுநீர் கழிக்காமல் விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.

அதன் பின்னர் மக்கள் மூக்கைப் பொத்தாமல் பாதையில் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
ஓஹோ நல்ல ஐடியாவே இங்கும் அமுல்படுத்தினால் என்ன என்று யாராவது கிளம்பினால் இது பங்களாதேஷ் அல்ல ஸ்ரீலங்கா என்பதை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

ஸ்மார்ட் திங்கிங் என்பது இதனைத்தான். எது ஓர்க் அவுட் ஆகும் என்பதை சரியாகத் தெரிந்து அதனை நடைமுறைப்படுத்துவதில் இருக்கின்றது வெற்றி.இந்த மாதிரி விடயங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சிந்திக்கும் முறையையே அன்றி எடுக்கப்பட்ட முடிவுகளையல்ல.15107424_10208612542495445_2408001165795012570_n