கூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி!

“சஞ்சீவ் ராம் மிகவும் ஆபத்தானவன்” என்று நான் சிறு வயதிலேயே நினைத்தேன். அந்த காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவர் பயம்காட்டிக்கொள்ள விரும்பினால் சஞ்சீவ் ராமின் பெயரைத்தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் சஞ்சீவ் ராம்
பக்கர்வால் பெண்களிடம் அவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்.”

அன்று ஆசிஃபா தன் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்த உடன் அந்த புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்கு சென்று காவல்துறை விசாரித்துள்ளனர்.

அப்போது சஞ்சீவ் ராம்,”நான் அந்த சிறுமியை பார்க்கவே இல்லை ” என்று கூறிஇருக்கின்றான்.

காவல்துறை அதிகாரி கூறுகையில் , ” விசாரிக்கும் நேரத்தில் நேரத்தில் கோவில் பூட்டப்பட்டிருந்தது. சஞ்சீவ் ராம் ஆசிஃபாவை கோவிலின் உள்ளே ஒரு மேஜைக்கு அடியில் பிளாஸ்டிக் பாய்களைக் கொண்டு மறைத்து வைத்திருந்திருந்திருக்கின்றான்”.

” சஞ்சீவ்ராம் மற்றும் எட்டு பேர்கள் கொண்ட குழு அவளின் கழுத்தைப் பிடித்து தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அவளை அருகில் உள்ள ஒரு கோவிலில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள்.”

“அதன் பின் அடுத்த மூன்று நாட்களுக்கு அவளை தொடர்ந்து மாறி மாறி கற்பழித்துள்ளனர்.கடைசியாக அவள் கற்பழிக்கப்பட்ட போது அவள் இறந்து போனதால், கற்பழித்தவன் கத்தினான்.

மறுநாள், ஆசிஃபாவின் சிதைக்கப்பட்ட உடல் அந்தக் காட்டுப்பகுதியில் அதே ஊதா நிற உடையில் இரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது.என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

புலனாய்வுத் துறையினரின் கூற்றுப்படி;
+++++++++++++++++++++++++++++++++++++++

“அவர்கள் ஆசிஃபாவை கற்பழித்ததற்கான நோக்கம் அவளின் நாடோடி சமூகத்தின் மீது இருந்த வெறுப்புணர்வே ஆகும்.

“இந்த வழக்கு சம்பந்தமாக எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு நபர்களும் ஹிந்துத்வாவினர் ஆவர். குற்றவாளிகளில் இருவரை வழக்கில் இருந்து விடுவிக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 15 வயது சிறுவன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையின் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு 19 வயது இருப்பதாக கூறுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுபோல பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக கூறுகின்றனர்.

பலவீனமான ஒரு சிறுமியை மிருகக் குணம் கொண்ட சில ஆண்கள் அரங்கேற்றிய கற்பழிப்பு வன்முறை பாரத தேசத்தில் பாலியல் வன்முறைகளின் மாற்று முகத்தை காட்டியுள்ளது. மேலும் இந்த வழக்கு இந்தியாவின் மதங்களுக்கு எதிரான போர்களில் மாற்றுப் போர்களமாக இருக்கின்றது.

ஆசிஃபாவின் நாடோடி சமூகமான பக்கர்வால் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் ஆவர். ஹிந்துத்துவாவினர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஹிந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவு தந்து காப்பாற்ற போராடுகின்றார்கள். ஆனால் ஆசிஃபாவிற்கான நீதியைப் பற்றி அவர்கள் கவலைக் கொள்ளவில்லை. இது தான் இந்தியாவின் மனுநீதி உருவாக்கும் சமூக நீதி ஆகும்.

இந்த வாரம் ஹிந்துத்துவ வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வந்த காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பின் அந்த அதிகாரிகள் மாலையில் நீதிபதியின் இல்லத்திற்கு சென்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் பரவி வருகின்றன. புதன் கிழமையன்று வட இந்தியாவின் சிறிய நகரமான கத்துவா பகுதி போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டது. இந்த நகரம் ஆசிஃபா கொல்லப்பட்ட பகுதியை ஒட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல ஹிந்து பெண்களும் கலந்து கொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டக்காரர்களை ஆதரித்துள்ளனர்.

“பக்கர்வால் சமுதாய மக்கள் எங்கள் மதத்திற்கு எதிராக உள்ளனர். என்று எதிர்ப்பாளர்களில் ஒருவரான பிம்லா தேவி கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவிக்காவிட்டால் நாங்கள் “தீக்குளிப்போம்” என்றும் கூறினார்”

இந்த வழக்கை விசாரிக்கக் கூடிய அதிகாரிகளில் சிலர் முஸ்லிம்களாகவே உள்ளனர். அதனால் எங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை என்று ஹிந்துத்வாவினர் கூறுகின்றனர்”

ஆனால் காவல் துறை ஆய்வாளர்களோ ஆசிஃபாவின் கொலைக்கு அவர்கள் தான் காரணம் என்பதற்கு உடற்கூறுகளின் சாட்சியங்கள், மரபணு பரிசோதனை மூலம் கிடைத்த சாட்சியங்கள் என்று 130 க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் உள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்துத்துவ மேலாதிக்கத்தை இலட்சியமாக கொண்ட பாரதீய ஜனதா கட்சி இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து கையகப்படுத்தி மத்திய புலனாய்த்துறையிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றது. அவர்கள் நடு நிலையாளர்கள் என்பதே பா.ஜ.க வின் வாதம். ஆனால் மத்திய அரசு. குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துத்துவவாதிகளுக்கு சாதகமாகவே இந்த முடிவை முன்னெடுக்கிறது மத்திய புலனாய்வுத்துறை ஆளும் மத்திய அரசின் கட்டுப்பாடில் இருப்பதால் குற்றவாளிகளுக்கு சாதகமான சூழ்னிலையை உருவாக்க பா.ஜ.க முயல்கிறது.

ஆசிஃபா கொலை வழக்கில் ஒரு ஹிந்து கோவில் மையமாக உள்ளது. இந்த கோவிலின் பாதுகாவலனான சஞ்சீவ் ராம் என்பவன், பக்கர்வால் சமூகத்தின் மீது வன்முறைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். அதற்காகத்தான் அவனுடைய நண்பர்களின் உதவியைக் கொண்டு ஆசிஃபாவை கடத்தி கற்பழித்து கொன்றுள்ளனர். என்று காவல்துறை கூறுகிறது

மிக எளிமையாக ஆசிஃபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாள்.
பககர்வால் சமுதாய மக்கள் வட இந்தியாவின் சமவெளிகளிலும், மலைகளிலும் உள்ள தங்களது மந்தைகளோடு நகர்ந்து செல்லும் நாடோடிகள் ஆவர். குளிர் காலங்களில் தங்கள் விலங்குகள் மேச்சல் கொள்ள இந்து விவசாயிகளிடமிருந்து நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் சமீப ஆண்டுகளாக கத்துவா பகுதியில் சில இந்துக்கள் நாடோடிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மேலும் அந்தக் கிராமத்தில் உள்ள இந்துக்கள்
திரு. சஞ்சீவ் ராம் மிகச்சிறந்த எழுச்சியாளர் என்றும் கூறுகின்றனர்.

“என் மகள் கொல்லப்பட்டதற்கான காரணம் பகர்வால் முஸ்லிம் சமூகம் இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும்.

“ஆனால் இது தான் எங்கள் வாழிடம் . இங்கு தான் எங்கள் வாழ்க்கை. மேலும் இது தான் எங்கள் வீடு என்கின்றார்.

“அவளுக்கு சகோதர்கர்கள் இருக்கின்றனர். அவள் எப்போதும் பள்ளியில் இருந்ததில்லை. அவளுக்கு புல்வெளிகளில் மந்தைகளை மேய்ப்பதுதான் பிடித்தமான செயல்” என்று ஆசிஃபாவின் தந்தை முஹம்மது யூசுஃப் புஜ்வாலா ஆழ்ந்த சோகத்தில் சோர்வாக பதில் கூறினார்.

இனவாத வெறுப்பில் மக்களை நசுக்கும் குழுக்களை வெகுண்டு எழுந்து அடக்கும் காலங்களும் மிலேச்சத்தனமான அரக்கன்களை நடுவீதியில் வைத்து வதம் செய்யும் சட்டங்களும் விரைவில் மலருமா ? பொறுத்திருந்து பார்ப்போம்!

Source – Newyork times

அபூஷேக் முஹம்மத்

28 thoughts on “கூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest