செலாவணி நோட்டுக்கள் செயலிழக்கம் கதைக்கு உதவுமா ?

சீனாவின் நான்கு பூச்சிகள் இயக்கம்

அது 1958. சீனாவை ஆட்சி செய்த மாசேதுங் நான்கு பூச்சிகள் இயக்கம் (Four Pests Campaign) ஒன்றை அறிவித்தார்.அதாவது சீனாவில் வாழும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெருந்தொல்லை தருவதாகவும் பயிர்களை உண்டு அழிப்பதாகவும் கூறி எலி, ஈ, கொசு, சிட்டுக்குருவி ஆகியவற்றை அழிப்பதே நான்கு பூச்சிகள் இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.

இதில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெற்பயிருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் சிட்டுக்குருவிகள் இருந்து வருவதால் அவற்றை ஒன்றும் விடாமல் அழித்துவிட எண்ணி கண்டஇடமெல்லாம் அதன் கூடுகள், குஞ்சுகள், முட்டைகள் உட்பட கூண்டோடு அழிக்கும் வேலையை 1958 துவங்கி 1962 வரை மும்முரமாக செயல்படுத்தி வந்தனர் சீன மக்கள்.

பீகிங்கில் உள்ள போலந்து தூதரகத்தில் கொஞ்ச நஞ்சம் குருவிகள் உயிர்காக்க ஓடிஒளிந்து தஞ்சமடைந்தனவாம். அவற்றை அழிக்கக் கூறும் சீனாவின் உத்தரவை அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டதால் சீனாவின் காவல்துறை எவ்வளவோ முயன்றும் அவர்களால் அதைமட்டும் ஒன்றும் செய்ய முடியாதிருந்தது..

இறுதியாக சீன மக்களிடம் அந்த தூதரகத்தைச் சுற்றி இரண்டுநாட்களாக தொடர்ந்து அதிக சப்தத்துடன் முரசு கொட்டச் சொன்னதன் விளைவாக அந்த சப்தத்தை தாங்க முடியாமல் பயந்து நடுங்கி தூதரகத்தின் எல்லாப்பகுதிகளிலும் உதிர்ந்த இலைகள் போல செத்துக் கிடந்தனவாம்.

அடுத்த சில மாதங்களிலேயே சீனாவில் கடும் பஞ்சம் (Great Chinese Famine) ஏற்பட்டது. அதன் காரணாமாக 20-45 மில்லியன் மக்கள் மாண்டுபோயினர். பஞ்சத்திற்கு காரணமென்னவென ஆராய்ந்த போதுதான் சிட்டுக்குருவி உண்மையிலேயே விவசாயிகளின் நண்பன் என்பதையும், நெல்மணிகளை உண்பதைக் காட்டிலும் பயிர்செடிகளில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து அவற்றைத் தின்றழிக்கும் வெட்டுக்கிளிகளை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்காக (இப்பிரபஞ்சத்தை படைத்தவனால்) நிலைப்படுத்தப்பட்ட ஓர் இயற்கை சமநிலை விதியே சிட்டுக்குருவியின் செயலாக்கம் என்பதையும் சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துகொண்டனர்.

கள்ளநோட்டு ஒழிப்புக் கோட்பாடு
மத்தியில் ஆட்சி செய்துவரும் மோடி அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற செயலிழக்க அறிவிப்பின் (Demonetisation) பின்புறத்திலுள்ள கள்ளநோட்டு ஒழிப்பு கோட்பாடும் சீனாவின் நான்கு பூச்சிகள் இயக்கம் போன்ற இயற்கை சமநிலைக்கு முற்றிலும் மாற்றமான செயல் என பொருளாதார வல்லுநர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

இதே போலத்தான் 38 ஆண்டுகளுக்கு முன் 1978 –ல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாவும் கள்ள நோட்டு ஒழிப்பு திட்டத்தை கொண்டு வந்தார். 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதே அத்திட்டம். அதுவும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான திட்டம் என்றே அறிவிக்கப்பட்டது. அன்றைய நிலையில் புழக்கத்தில் இருந்த ருபாய் நோட்டுக்களில் வெறும் 0.76 சதவீதமே இருந்து வந்த நிலையில் கூட அத்திட்டம் பெருந்தோல்வியைச் சந்தித்தது.

மொரார்ஜியின் இந்த திட்டத்தை அவரது அரசின் நிதியமைச்சராக இருந்த ஹெச்.எம்.படேல் மற்றும் அன்றைய மந்திய ரிஸர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ஐ.ஜி.பட்டேல், முன்னாள் மத்திய அமைச்சரும் அப்போதைய திட்டக் கமிஷனில் பணியாற்றியவருமான ஒய்.கே.அலக் முதலானவர்கள் ஆதரிக்காததோடு மட்டுமல்லாது சிலகாலத்திற்கு பிறகு தாம் எழுதிய நூல்களில் அதை கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.

GATT ஒப்பந்தமும் கார்ப்பரேட் ஆதிக்கமும்

90 களில் மத்திய அரசு சட்டமாக கொண்டு வந்த பன்னாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தமான General Agreement on Tariffs and Trade 1994 (GATT) என்ற சட்டத்திற்குப்பின் நம்நாட்டின் பொருளாதாரத்தின் மீது கார்ப்பரேட் முதலாளிகளின் பிடி கடுமையாக இறுகிவிட்டுள்ளது.
நாட்டின் பெரும் பணக்காரர்கள், பல்வேறு ஊழல்களின் மூலம் கருப்பு பணத்தை கையூட்டாக பெற்ற ஆட்சியாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் உட்பட எவருமே அவர்கள் நேர்மையற்றமுறையில் பெற்ற நோட்டுக்களை இழவு காத்த கிளி போல தம்கையிலும் தலையணை அடியிலும் படுத்துறங்கும் மெத்தைகளின் கீழும் ஒழித்து வைத்துக்கொண்டு உறங்காமல் இருந்ததில்லை. மாறாக சொத்துக்கள், நிலத்தில் முதலீடுகள், அமெரிக்கன் டாலர்கள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளாகவே அவைகளை பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் அங்குள்ள பணக்காரர்களுடன் கூட்டாக கம்பெனிகள் தொடங்கி, இங்கிருந்து கொண்டுபோன கள்ளப்பணத்தை இவர்களின் வசதிக்கேற்றார்போல இருந்துவரும் அந்நாட்டு சட்டங்களைப் பயன்படுத்தி, நல்லபணமாகவும் மாற்றி விடுகிறார்கள்.

பிறகு அதிலிருந்து பெறப்பட்ட லாபம் எனக்கூறி நம்நாட்டில் மீண்டும் அவற்றை கொண்டுவந்து தொழில் செய்து இந்நாட்டின் பேறுபெற்ற குடிமகன்களாகவும் விருதுகள் பல வாங்கி செழுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

சர்வாதிகாரத்தை நோக்கி

இறையாண்மை கொண்ட, சமதர்மவாத, மதசார்பற்ற ஜனநாயக குடியரசாக (sovereign socialist secular democratic republic) இருந்த இந்நாட்டை தற்போதைய காவி பாசிச பயங்கரவாத மத்திய அரசு அரசியல் சாசனத்தின் சந்து பொந்துகளிலுள்ள ஓட்டைகளிலெல்லாம் ஊடுருவி வேதகால இந்துத்துவ பாசிச சர்வாதிகார நாடாக மாற்றி வருகிறது.

அரசின் பக்கச்சார்பான போக்கை நோக்கும்போது இந்நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு கூறிய கருத்தாகிய பெரும்பான்மை மதவாதமென்பதே இந்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை நிகழ்கால