தனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி 

2012 ஆம் ஆண்டு முதல் சிரியா புரட்சியின் ஆதரவாளராக இருந்துவந்த எனக்கு இப்படி ஒரு தலையங்கத்தில் கட்டுரை எழுத வேண்டிவரும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. போராட்டத்தின் பின்னணி, அதன் சரி பிழைகளுக்கு அப்பால் சர்வாதிகார அசாத் அரசாங்கம் அகற்றப்பட்டு சிரியா மக்கள் விரும்பிய ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்படல் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்து வந்தது.

2012 ஏற்பட்ட மோதல் 2013 ஆம் ஆண்டு கடைசி பகுதிகளில் போராளிகளுக்கு சார்பாக அதியுட்ச நிலையடைந்தது. அனைத்து நகரங்களையும் போராளிகளிடம் பறிகொடுத்திருந்த அசாத் அரசு, எந்தநேரமும் தலைநகர் டமாஸ்கசையும் இழந்து விடும் என்ற ஒருநிலை கூட இருந்தது.

பின்னர் போராளி இயக்கங்களுக்கு இடையிலான உள்மோதல்கள், காட்டிக்கொடுப்புக்கள், வேறருப்புக்கள், பயங்கரவாத இயக்கங்களின் உருவாக்கம் என்று போராட்டம் வேறு பல திசைகளில் பயணிக்க துவங்கி இறுதியில் அசாத் அரசுக்கு எதிரானவர்களே தமக்கு தாங்களே முக்கிய எதிரிகளாக உருவகுத்து கொண்டது ஒருபக்கமும், 2015 ஆம் ஆண்டு ரஷ்யா நேரடியாக களத்தில் இறங்கியதால் ஏற்பட்ட இராணுவ மேலாதிக்கமும் இணைந்ததால் புரட்சி உடைந்து உருக்குலைந்து சிதைந்து தற்போது தனது இறுதி தருவாயை அடைந்திருக்கிறது.

தற்போதைய நிலையில் சிரியாவின் நிலப்பரப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தரப்புக்களை நோக்கினால் …

 சிரியா அரசாங்கம்- தலைநகரம் டமாஸ்கஸ் உட்பட சிரியாவின் பெரும்பாலான நகரங்கள் மற்றும் நிலப்பரப்புக்கள் சிரியா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. (முதலாவது படத்தில் சிகப்பு நிறம்)

 அரசுக்கு எதிரான போராளிகள் – இவர்களிடம் இருவேறு கட்டுப்பாட்டு நிலங்கள் இருக்கின்றன.

ஒன்று- சிரியாவின் வடக்கில் இத்லீப் மாகாணம் மற்றும் அலெப்போ மாகாணத்தின் (அலெப்போ நகரத்தின் அல்ல) சில பகுதிகளோடு துருக்கிய எல்லையோடு அமைந்திருக்கும் பகுதிகள். இந்த பகுதியில் இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரேயொரு முக்கிய நகரம், இத்லீப் (Idlib)ஆகும்.

இரண்டு – சிரியாவின் தெற்கில் தர்ஆ மாகாணத்தின் சில பகுதிகளாக ஜோர்தானிய எல்லையோடு அமைந்திருக்கும் பகுதிகள். இந்த பகுதியில் இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரேயொரு முக்கிய நகரம், தர்ஆ (Daraa) ஆகும்.
( முதலாவது படத்தில் பச்சை நிறம்)

 குர்திய போராளிகள் – சிரியாவின் வடக்கில் துருக்கிய எல்லைக்கும் யூப்ரடீஸ் நதிக்கும் இடையில் அனேகமாக அனைத்து பகுதிகளும் இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த பகுதியில் இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய நகரம் ரக்கா (Raqqa)ஆகும்.
( முதலாவது படத்தில் மஞ்சள் நிறம்)

 ஐஸ்ஐஸ் – குர்திய போராளிகளால் முற்றுமுழுதாக சூழப்பட்ட ஈராக்கின் எல்லையோடு அமைந்திருக்கும் ஒரு பகுதியும். சிரியாவின் தெற்கில் இஸ்ரேலிய எல்லையோடு அமைந்திருக்கும் இன்னுமொரு பகுதியும் இவர்களின் கட்டுப்பாட்டு பகுதிகளாகும் . குறிப்பிடத்தக்க எந்தவொரு நகரமும் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. (முதலாவது படத்தில் கருப்பு நிறம் மற்றும் இரண்டாவது படம் )

இரண்டு மாதங்களுக்கு முன்னர், கிழக்கு கூத்தாவில் (Eastern Ghouta) யுத்தம் முடிந்த கையோடு ஜோர்தானிய எல்லையில் போராளிகளிடம் எஞ்சியிருக்கும் தர்ஆ பகுதியை கைப்பற்றுவதற்கு சிரியா இராணுவம் முயற்சிக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. காரணம்

1️⃣ தர்ஆவை கைப்பற்றிவிட்டால் இதற்கு மேலாக போராளிகளுக்கு என்று எஞ்சியிருப்பது வடக்கில் இருக்கும் இத்லீப் மாகாணம் மட்டுமே. இத்லீப் பகுதிகளில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருப்பதால் தற்போது எதுவும் சாத்தியம் இல்லை. எனினும், எதாவது ஒரு காரணத்தால் போர் நிறுத்தம் முறிவடைந்தால் தனது முழு இராணுவ பலத்தையும் பயன்படுத்தி இந்த பகுதிகளை கைப்பற்றி தமது இறுதி வெற்றியை பெற்றுவிடலாம் என்ற சிரியா அரசின் அரசியல் மற்றும் இராணுவ மூலாபாய நோக்கம்.

2️⃣️ஜோர்தானின் எல்லையில் இருக்கும் தர்ஆவை கைப்பற்றிவிட்டால் ஜோர்தானுக்கான தரைவழி பாதை திறக்கப்பட்டு ஜோர்தான் நாட்டுடன் வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம் என்ற பொருளாதார நோக்கம்.

தெற்கில் இருந்த போராளிகளை பொறுத்தவரை ஆரம்பம் முதலே அரசியல் மற்றும் ஆயுத உதவிகளை ஜோர்தானிடம் இருந்து பெற்றுவந்தவர்கள். இதன் பின்னண