நாக்கை வெட்டினால் ஒரு கோடி

இந்திப் பட இயக்குநர் நாராயண் சிங்கின் நாக்கை வெட்டினால்
ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று மதுரா சாதுக்களின் மகா பஞ்சாயத்து அறிவித்துள்ளது .

உலகின் ஏதோ ஓர் இடத்தில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றால் உடனே “இந்திய முஸ்லிம்கள் அதை ஏன் கண்டிக்கவில்லை?” என்று இங்குள்ள அறிவுஜீவிகளும் அறிவில்லாத ஜீவிகளும் சேர்ந்து குதிப்பார்கள்..

இதோ, நம் நாட்டிலேயே சாதுக்களின் மகா பஞ்சாயத்து  இயக்குநரின் நாக்கை அறுக்கும்படி அறிவித்துள்ளது.எத்தனை அறிவுஜீவிகள் இதைக் கண்டித்துள்ளார்கள்? எத்தனை பேர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்?

இத்தனைக்கும் இயக்குநர் நாராயண் சிங் எடுக்கின்ற படம் மோடியின்
தூய்மை இந்தியா திட்டத்தை மையப்படுத்திய கதைதான்…டாய்லட் ஏக் பிரேம் கதா.

கண்ணனும் ராதையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படியிருக்க, கண்ணனின் நந்தகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த கதாநாயகனும் ராதையின் பர்ஸானா கிராமத்தைச் சேர்ந்த கதாநாயகியும் காதலிப்பது போல் கதை இருக்கிறதாம்.அது அந்தக் கிராமங்களின் மரபுக்கு மாற்றமானதாம்.அதனால் சாதுக்களின் எதிர்ப்பும்  நாக்கை அறுக்கும்படி தீர்ப்பும் பிறந்துள்ளது

இந்த சாதுக்களும் சாமியார்களும் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்..செய்வார்கள்..

“தலையை வெட்டு” என்பார்கள்…
“நாக்கை அறு” என்பார்கள்…

சட்டம் குனிந்து பணிந்து பவ்யமாய் வாலாட்டும்.

அதே சமயம் மனித நேயத்தையும் மார்க்க நேயத்தையும் எடுத்துரைக்கும்

அழைப்பாளர்களைத் துன்புறுத்தி, அவர்களின் சேவைகளைச் சீர்குலைக்க அதே
சட்டம் பாயும்..

-சிராஜுல்ஹஸன்