இந்தியாவில் ஷரியத்திற்கு எதிரான ஓலங்கள் நியாயமா ?

காவல்துறையினர் எவ்வாறு குடும்பப்பிரச்சனைகளை தீர்க்கமுடியும். நீதிமன்றங்கள் குடும்பப்பிரச்சனைகள் எங்ஙனம் தீர்க்கப்போகின்றன. எதை அடிப்படையாக வைத்து தனியார் சட்டங்களுக்கு எதிராக அவ்வப்போது நீதிபதிகள் புதுப்புது சட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். கொலை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கும் வேளையில் தமிழகத்தில் மட்டும் தற்போது 19ஆயிரத்து 157 பணியிடங்கள் காவல்துறையில் காலியாக உள்ளன தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றங்களும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளும்

இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றானது நீதிமன்றம் ஆகும். நம்நாட்டு அரசியல் சாசனத்தில் மாவட்டநீதிமன்றம், தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 21 உயர்நீதிமன்றங்களும் தலைநகர் டெல்லியில் ஒரு உச்சநீதிமன்றமும் உள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பர். ஒரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் உடனடியாக தீர்க்கப்படுகின்றனவா என்பதை கீழுள்ள புள்ளிவிவரங்களிளிருந்து பார்ப்போம்.

கடந்த ஏப்ரல் 2016 வரையுள்ள புள்ளிவிபரப்படி நம்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும் 2.18 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. National Judicial Data Grid (NJDG[1]) என்ற ஒரு ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைப்படி இதில் மூன்றில் இரண்டு பங்கு வழக்குகள் குற்றவியல் சார்ந்தவை ஆகும். மேலும் பத்தில் ஒரு வழக்கு 10 வருடங்களாகியும் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளது. இந்திய மக்கள்தொகையில் 73000 பேருக்கு ஒரு நீதிபதி என்ற விகிதத்தில்தான் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது அமெரிக்காவைவிட ஏழுமடங்கு குறைவாகும். சராசரியாக, ஒரு நீதிபதியிடம் 1350 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஒருமாதத்திற்கு 43 வழக்குகளுக்கு மட்டுமே அவர்களால் தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.

இதே கணக்கின்படி மாவட்டநீதிமன்றங்கள் வழக்குகளை கையாளுமானால் குடும்பநலம் சார்ந்த சிவில் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்குவதற்கான சாத்தியமே இல்லை என்பது மட்டுமல்லாது குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதற்கோ 30 வருடங்களுக்கும் மேலாகலாம். Indian Express நாளிதழில் வெளிவந்த தகவல்படி நீதிமன்றங்களில் மொத்தம் நிலுவையில் உள்ள வழக்குகளில் 20 லட்சம் (10 சதவீதம்) வழக்குகள் மட்டுமே பெண்களாலும் அதில் 3 சதவீதம் மூத்த குடிமக்களாலும் தொடுக்கப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள அதிகமான மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு நீதிமன்றங்களை நெருங்காமல் உள்ள நிலையிலேயே இவ்வளவு மோசமான சூழல் உள்ளது. மேலும் பெண்கள் நீதிமன்றங்களுக்கு செல்வதில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகளும் கணிசமாக உள்ளன.

பொதுவிழாக்களிலும் தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் நீதிபதிகள் பலர் மக்களுக்கு அறிவுரைகள் கூற வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் சமூகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு ஊர் தலைவர்கள் மற்றும் படித்தவர்கள் பண்பாளர்கள் மீதுதான் உள்ளது என்பதை தவறாமல் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிந்தனைக்கு ஒரு சம்பவம்

பெருவாரியான முஸ்லிம் மக்கள் வாழும் அருகருகிலுள்ள இரண்டு ஊர்கள். பல்லாண்டு காலமாக கொடுக்கல் வாங்கல் நடத்தியும் சம்பந்தம் செய்தும் பரஸ்பரம் அதில் உள்ளவர்கள் அனைவருக்கும் எதாவது ஒரு உறவுக்காரர் அடுத்த ஊரில் இருப்பார்.

எல்லாமே நல்லவிதமாக சென்றுகொண்டிருந்த நிலையில் ஒருநாள். ஒருதம்பதிக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு ரோடுவரை வந்து அது இரண்டு ஜமாஅத்தார்களுக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்சனையாக ஆகியிருந்தது. ஒருவரை முகம்பார்க்க விரும்பாத அளவு இன்னொருவர் மாறிவிட்டார் என்ற அளவிற்கென்றால் நிலைமையின் உக்கிரத்தை புரிந்துகொள்ளுங்கள்.

கடைசியாக இரண்டு ஊராருக்கும் மத்தியில் உள்ள இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டுமென ஒரு ஜமாஅத் நிருவாகி அவ்வூரை சுற்றியிருந்த வட்டார ஜமாஅத்தை அணுக இரண்டு ஊர் ஜமாஅத்தாரையும் அழைத்து இரண்டு குடும்ப உறுப்பினர்களையும் வரச்சொல்லி விசாரிக்கப்பட்டது. அதுவரை இரண்டு ஊர்க்காரர்களும் ஒருவரை ஒருவர் இன்னும் முகம் பார்க்காமலும் பேசாமலுமே இருந்தனர்.

அவ்வூர்ரார்களுக்கிடையில் காலம் காலமாக இருந்துவரும் கொடுக்கல் வாங்கல், சம்பந்தம் பற்றி எடுத்துக்கூறிய போதுதான் இருசாராரின் முகம் சற்று மாறத்துவங்கியது. பிறகு மலர்ந்த முகத்துடன் ஒருவரைப் பார்த்து மற்றவர் பேச ஆரம்பித்தார். இவர் மாமா என் தங்கையை தான் திருமணம் செய்துள்ளார் என ஒருவரும் வேறொருவர் என் மகளை இவரது அண்ணன் மகனுக்குத்தான் கட்டிக்கொடுத்துள்ளோம் எனக்கூறி இரு ஊராரும் ஒரே ஊரார் போல சிறிது நேரத்திலேயே மாறிவிட்டிருந்தனர்.

பிறகு வட்டார ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் கணவன் மனைவி என்ற ஒரு தம்பதிக்கிடையில் நடைபெற்ற சில மனக்கசப்பு என்ற அளவில் மட்டுமே இதை நாம் அணுகவேண்டும் என்றும் இது ஜமாஅத்துகளுக்கு இடையில் பிரச்சனையாகும் அளவிற்கு வலியதொரு பிரச்சனையல்ல என்பதையும் அல்-குர்ஆன் மற்றும் நபிவசனங்களை முன்வைத்து பேசியதை அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னால் அப்பிரச்சினை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது.

கோடாரிக்கம்புகள்

குடும்ப பிரச்சனைகள் காவல்நிலையம் வரை வருவதை காவல்துறை அதிகாரிகள் அவ்வளவாக விரும்புவதில்லை. தங்களுக்கு அறிமுகமான ஜமாஅத்தாரிடம் எடுத்துக்கூறி பிரச்னையை சுமூகமாகத் தீர்த்துவைக்கும்படி அறிவுறுத்துகின்றனர். மேலும் காவல்நிலையங்களுக்கு பல்வேறு குற்றங்கள் புரிந்தவர்கள் வந்துபோவதால் இதையெல்லாம் உங்கள்பகுதியில் உள்ள ஜமாஅத்தாரிடமே சென்று தீர்த்துக்கொள்ளும்படி கூறுகிறார்கள்.

 

ஜமாஅத்துகள் செய்துவைக்கும் மத்தியஸ்தத்தில் தனக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்காமல் போகும்போது வெகுசிலரே அதை எப்படியாவது பெற்றேயாக வேண்டும் என்ற நோக்கில் பிரச்னையை நீதிமன்றம்வரை இழுத்துச் செல்கின்றனர். மேலும் தனக்கு ஒருகண் இல்லாமல் போனால் தனது எதிரிக்கு இரண்டு கண்களும் இல்லாது போகவேண்டும் என்ற முனைப்பில் அதற்காகத் தன்னிடமுள்ள சொத்துக்களைக்கூட விற்று இறுதிவரை போராடுகின்றனர்.

பெரும்பாலும் கோடாரிக்கம்புகளே மரங்களுக்கு எதிரிகளாவது போல் இப்பிரச்சையை நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றவர், வழக்காடுபவர் இருவருமே முஸ்லிம்கள்தான்.

அடுத்தவரை பழிதீர்க்க வேண்டுமென்ற தீயஎண்ணத்தில் தனியொருவரால் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள் வழங்கிய இடைக்கால உத்தரவில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் எனக்கூறியுள்ளார்.

வழக்கின் விசாரணை இன்னும் முடியாத நிலையில் நீதிபதி கூறிய இக்கருத்து மசூதிகளின்  மீதான அவரது தவறான புரிதலையே காட்டுகிறது. இந்தியாவில் எங்குமே மசூதிகள் நீதிமன்றங்களாக செயல்படுவது கிடையாது. நிர்வாகத்துறை மற்றும் காவல்துறை முதலானவற்றின் அதிகாரபலமும் அவை கொண்டிருக்கவில்லை.

மசூதிகள்  ஏன்?

வெறும் ஐங்காலத்தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக மட்டும் மசூதிகள்  ஏற்படுத்தப்படவும் இல்லை. வாழ்க்கை முழுவதற்கும் வழிகாட்டிய இறைத்தூதர் அண்ணலார் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்கள் மசூதிகளை சமூகநல மையங்களாகவே பயன்படுத்தி வந்துள்ளார்கள். மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம்பெயர்ந்த நபியவர்கள் அவரைப்போன்றே பாதுகாப்பு இல்லாமல் சொந்த நகரைவிட்டும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட எண்ணற்ற தோழர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) அடிப்படைத்தேவையான தங்கும்வசதிகள் ஏற்படுத்துவதற்கு முன்பாக முதன்முதலில் மசூதியையே கட்டினார்கள்.

அம்மசூதியில்  இருந்தவாறே தனது நண்பர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான பணிகளையும் மனித நாகரிகத்தை கட்டியெழுப்பும் பணிகளையும் செய்துவந்தார்கள்.

இறைநம்பிக்கை, தொழுகையை நிலைநாட்டுதல், நலிந்தோருக்கு உதவிசெய்தல் ஆகிய இறைக்கட்டளைகளை நபியவர்கள் மஸ்ஜிதிலிருந்தே செயல்படுத்தி வந்தார்கள். அதுமட்டுமல்ல. கல்விகற்கும் பாடசாலையாகவும், திருமணம் புரியும் மண்டபமாகவும் சமத்துவம் சகோதரத்துவத்தை போதிக்கும் கேந்திரமாகவும் உதவிகள் புரியும் நலமன்றமாகவும் அறிவைப் புகட்டும் கலாசாலையாகவும் கல்விகற்பவர்கள் தங்கிப்பயிலும் விடுதியாகவும் வட்டியில்லாமல் கடன் வழங்கும் கருவூலமாகவுமே அண்ணலார் நபிகள் நாயகம் அவர்கள் மசூதிகளை  பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

ஏழை, பணக்காரன், அரசன், அடிமை, வெள்ளையர், கறுப்பர், அரேபியர்; பிறமொழி பேசுபவர் என்ற பாகுபாடுகளற்ற சமத்துவக்கூடமாகவும் மஸ்ஜிதுகளை நிலைப்படுத்தினார்கள் அண்ணல் நபியவர்கள்.

குர்ஆனில் கூறப்பட்டுள்ள சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மஸ்ஜிதுகளையே அண்ணலார் பயன்படுத்தினார்கள்.

அவ்வாறிருக்க, கல்வி, நலஉதவிகள், திருமணம், குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டுதல் போன்ற அண்ணலார் வழிகாட்டிய எண்ணற்ற வாழ்க்கை வழிகாட்டுதல்களிலிருந்து மிகக்குறைவான செயல்களை மட்டுமே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களது மசூதிகளில் செய்து வருகின்றனர்.

மத்தியஸ்தம் மற்றும் சமரசம் (Conciliation and Mediation) என்ற அடிப்படையில் மட்டுமே திருமணம், விவாகரத்து, சொத்துப்பிரச்சனைகள் மற்றும் வாரிசுரிமை முதலான குடும்ப பிரச்சனைகளில் மசூதி நிருவாகிகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஈடுபட்டு சுமூகமாகத் தீர்த்துவைக்க பெருமுயற்சி மேற்கொள்கின்றனர். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் விதிகளின்படியே இப்பிரச்சனைகள் கையாளப்படுகின்றன.

உரத்த சிந்தனை 

ஓரிருவர் தொடுக்கும் வழக்குகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமூகமும் தங்களது உயிரைவிடவும் மேலாக மதிக்கும் ஷரீஅத் சட்டத்தை மாற்றமுனைவது சிறுபான்மை மக்களுக்கு எதிராக புரியப்படும் கொடுங்கோன்மை (Tyranny against Minority) ஆகும். இந்தியாவில் உள்ள 25கோடி முஸ்லிம்கள் ஒருபோதும் இதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

அரசியல் சாசனத்தின் பிரிவு 44-ஐ வைத்துக்கொண்டு கொல்லைப்புற வழியாக காவிபயங்கரவாதத்தை திணிக்க நினைப்பது அப்பட்டமான அறிவீனமாகும். ஆங்கிலேயர் காலம் முதலே பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவில் எல்லா மதங்களையும் உள்ளடக்கியே தனியார் சட்ட வாரியங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களும் அனைவரது மதசுதந்திரத்துக்குமான பாதுகாப்பை உறுதிசெய்தபின்னரே குடியரசாக இந்நாட்டை நிறுவினார்கள் என்பது குன்றின்மேலிட்ட விளக்குப்போல யாவரும் அறிந்த உண்மையாகும்.

முஸ்லிம்கள் இந்நாட்டின் பூர்வீக குடிமக்களே ஒழிய வந்தேறிகள் அல்ல. 1000 ஆண்டுகாலம் இந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள். வேண்டுமென