ஃபலஸ்தீன தேசம் யாருக்குரியது, இஸ்ரேலியர்களுக்கா? முஸ்லிம்களுக்கா?

ஃபலஸ்தீனத்திற்காக நீண்டநெடுங்காலமாக ஃபலஸ்தீனிய முஸ்லிம்களும் யூதர்களும் போராடி வருகின்றார்கள். போரினால்ரத்த ஆறு ஒட்டப்பட்டு இருக்கின்றது . தலைமுறை தலைமுறையாக
உயிர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் பலரும் தங்கள் இன்னுயிர்களை ஈந்திருக்கிறார்கள்.

ஃபலஸ்தீனம் தங்களுடைய பகுதி என்கின்றார்கள் யூதர்கள். ஆனால், அரை நூற்றாண்டுகளுக்கு முன்பாக வரலாற்றின் எந்த காலகட்டத்திலும் அவர்கள் அப்பகுதியை ஆண்டதாகவோ ஆளுமையோடு தங்கியிருந்ததாகவோ குறிப்புகள் இல்லை. அதற்கான காரணங்களும் விடைகளும் வரலாற்று தேடலில் விடைகளாக இருக்கின்றன.
இதற்கு மாறாக, முஸ்லிம்களுக்கும் அதற்கும் இடையிலான தொடர்பும் உறவும் வரலாறு நெடுக – இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் இருந்தே – தொடர்ந்து வந்துள்ளது. அவற்றை ஆய்வாளர்கள் வேத வெளிப்பாட்டின் மூலமும், வரலாறுகளின் மூலமும் மிகத் துல்லியமாக அறிய முடியும்.

திருக்குர்ஆனின் குறிப்புக்கள் :
***************************************

திருக்குர்ஆனின் 17 ஆம் அத்தியாயத்தின் முதல் வரியே இப்பகுதியைப் பற்றி இவ்வாறு பேசுகின்றது

‘மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத் துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவன், பார்ப்பவன்’. (திருக்குர்ஆன் 17:1)

வெகுதொலைவில் உள்ள பள்ளிவாசல் என்பது ஜெருசலத்தில் வீற்றிருக்கும் பைத்துல் முகத்தஸ் இறை ஆலயத்தைக் குறிக்கின்றது. அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகம் முழுவதற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதையும் இது உணர்த்துகின்றது. மக்காவில் உள்ள கஅபாவோடு அண்ணலாருக்கு என்ன தொடர்பு உள்ளதோ அதே தொடர்பு ஜெருஸலே மில் உள்ள பைத்துல் முகத்தஸோடும் உள்ளது. கூடிய விரைவில் கஅபாவின் சாவியும் பைத்துல் முகத்தஸின் சாவியும் அண்ணலாரின் கரங்களுக்கு வந்து சேரும் என்னும் முன்னறிவிப்பும் இவ்வசனத்தில் அடங்கியுள்ளது.
மக்கா வெற்றியின்போது கஅபாவின் சாவிகள் அண்ணலாரின் கரங்களுக்கு வந்துவிட்டன. அண்ணலார் மறைந்து ஆறு ஆண்டு களுக்குள் இரண்டாம் கலீஃபா, உமர் ஃபாரூக் அவர்களுடைய காலத்தில் பைத்துல் முகத்தஸுடைய சாவிகளும் வந்து சேர்ந்தன. ஆக, அண்ணலார் உயிரோடு இருந்தபோது கஅபாவின் சாவிகளும் மறைந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் அண்ணலாரின் உயிர்த்தோழர்களின் கரங்களில் பைத்துல் முகத்தஸ் சாவிகளும் வந்துவிட்டன.

ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் ஃபலஸ்தீனத்தை வென்றார்கள். ஜெருஸலம் நோக்கி இரண்டாம் கலீபா ஆட்சியாளர் உமர் அவர்கள் பயணித்தார். வரலாற்று சிறப்பு மிக்க பயணம் அது. கிறித்துவ பாதியார்கள் உமர் அவர்களின் கரங்களில் அதன் சாவிகளை ஒப்படைத்தார்கள். அப்போது உமர் அவர்கள் நடந்துகொண்ட முறையும் வெளிப்படுத்திய பண்புகளும் இஸ்லாமிய பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் வரலாற்று ஆதாரமாக இன்றும் ஆவணப் பதிவில் இருக்கின்றது.

அக்கிறித்துவ பாதிரியார் களின் உள்ளங்கள் அன்று, கொள்ளைபோயின! அந்த நிமிடமே அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமை பின்பற்றும் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.பைத்துல் முகத்தஸோடு அன்று முஸ்லிம்களுக்கு உருவான தொடர்பு பல நூற்றாண்டுகளாக தொடர்கின்றது. இஸ்லாமியப் பண்பாட்டின் மையமாகவே அது மாறிவிட்டது.

சலாஹுதீன் அய்யூபியின் காலத்தில் :
*********************************************************
இடைக்காலத்தில் 1096 ஆம் ஆண்டுகளில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக கிறித்துவர்கள் சிலுவைப் போர்களைத் தொடங்கிய போது, சில காலம் அது மற்ற பகுதிகளைப் போன்று ஃபலஸ் தீனமும் கிறிஸ்துவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. முஸ்லிம்கள் ஃபலஸ்தீனத்தை விட்டு வெளியேறினர். ஆனால், இந்த தோல்வியும் வெளியேற்றமும் ஒருசில காலங்கள் மட்டுமே ஆகும்.விரைவில் தங்கள் தோல்வியை வெற்றியாக மாற்றிக் கொண்டார்கள்.

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி என்றொரு மாவீரர் தோன்றி முஸ்லிம்களுக்கு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்தார். குர்து இனத்தை சேர்ந்த முஸ்லீம் ஆவார். மறு படியும் அவர்களை ஃபலஸ்தீனத்தில் குடியமர்த்தினார். இந்தத் தோல்வி கிறித்துவர்களின் முதுகெலும்பையே முறித்துவிட்டது. அதன்பின் பல்லாண்டுகளுக்கு அவர்களால் எழவே முடிய வில்லை.

ஃபலஸ்தீனத்தை மட்டுமல்ல அவர்கள் வசமிருந்த வேறுபல பகுதிகளையும் ஸலாஹுத்தீன் அய்யூபி மீட்டெடுத் தார். கடைசியில்
90 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அடியோடு அகற்றி கிறித்துவ ஆட்சியை வேரோடு பிடுங்கியெறிந்தார். அதன்பின் உஸ்மானிய கிலாஃபத் வீழும் வரை பன்னூற்றாண்டு காலம் ஃபலஸ்தீன புனித பூமி முஸ்லிம்களின் அடைக்கலத்தில் அமைதியாக இருந்தது.மேலும், இஸ்லாமியப் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் உலகம் முழுக்க கொண்டு சேர்த்தது

தேசத்திற்கான திட்டத்தில் யூதர்கள் :
*******************************************
அதன்பின், முதலாம் உலகப்போரின் போது, 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் தங்கள் படை பரிவாரங்களோடு ஆங்கிலேயர் ஃபலஸ்தீனத்தில் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டனர்.

சிறிது காலத்திற்குள்ளாக வேறுபல நாடுகளிலிருந்து விரண் டோடியதைப் போன்று ஃபலஸ்தீனத்தை விட்டும் அவர்கள் விரண்டோட நேர்ந்தது. மத்திய ஆசியாவில் தங்கள் ஆதிக்கம் தொடர வேண்டும் என்றால் அங்கே இஸ்ரவேலர்களுக்கென்று ஒரு தேசம் இருந்தாக வேண்டும் என்னும் முடிவிற்கு யூதர்கள் வந்தனர்.

இஸ்ரேல் என்னும் பெயரில் ஒரு நாட்டை உருவாக்க ஃபலஸ்தீனம்தான் சரியான பகுதி என முடிவெடுத்தனர். அவர்களுடைய ஏகாதிபத்திய கனவை நனவாக்க, அந்நாள் முதல் ஃபலஸ்தீன முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு கேடுகெட்ட சதித் திட்டங் களை செயற்படுத்தலாயினர். கொடூரமாக முஸ்லிம்களை கொன்று குவிப்பது, பன்னூற்றாண்டுகளாக அங்கு குடியிருந்து வருவோரை விரட்டி அடிப்பது, நாடுகடத்துவது போன்ற நட வடிக்கைகளை தொடங்கினர். ஐக்கிய நாடுகள் சபை இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் இருந்தது.மேலும் இஸ்ரேலுக்கு உதவி புரிய பல ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. சிறிதும் மனிதநேயமே இல்லாமல் இன்றுவரை தொடர்ந்து அவர்களுக்கு ஒத்தாசை புரிந்து வருகின்றது.

முஸ்லிம்களின் போர் கலாச்சாரம் :
************************************************
இங்கே ஒரு விடயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஒரு காலத்தில் மற்றவர்களைப் போன்று, முஸ்லிம்களும் பல் வேறு நாடுகளை வெற்றி கொண்டுள்ளார்கள். ஆனால் முஸ்லிம் கள் அடைந்த வெற்றிகளுக்கும் மற்றவர்கள் அடைந்த வெற்றிகளுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உள்ளன.

நாடுகளை கொள்ளையடிக்கவும் சூறையாடவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவாக்கவும்தான் மற்றவர்கள் நாடுகளை வெற்றி கொண்டிருக்கின்றார்கள். ஆகையால், அந்நாட்டு மக்களை கொன்று குவிப்பது, அடிமைப்படுத்துவது, பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவது, மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது, அவர்களை முற்றிலும் வலுவற்றவர்களாக்குவது, அவர்களின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை தயக்கமே இல்லாமல் செய்திருக்கின்றார்கள்.

இதற்கு நேரெதிராக, முஸ்லிம்கள் வெற்றி பெற்றவிடங்களில் கொடுங்கோல் மன்னராட்சியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக போரிட்டிருக்கின்றார்கள். குடிமக்கள் மீது எத்தகைய அராஜகத்தையும் புரியவில்லை, முதியோர் பெண்கள் குழந்தைகள் மீது கைவைக்கவில்லை. எந்த வகையிலும் அவர்களுக்கு இழப்போ இழுக்கோ நேராமல் பார்த்துக் கொண்டார்கள். குடிமக்களோடு பெருந்தன்மையோடும் தாராள மனப்பான்மையுடனும் நடந்துகொண்டார்கள். அவர்களது உடைமைகளைக் கொள்ளையடிக்கவோ சூறையாடவோ அல்லது அவர்களை இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றவோ நாடுகடத்தவோ அடிமைகளாக்கி தங்கள் நாடுகளுக்கு கொண்டுசெல்லவோ செய்யவில்லை.

அவர்களது மனிதாபிமானத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. போர் முடிந்தபிறகு, எதிர்த்துப் போரிட்ட எதிரிப்படை வீரர்களில் படுகாயமுற்ற வீரர்களை கொன்று தள்ள எண்ணாமல் தங்கள் கைகளால் சிகிச்சை அளித்தார்கள். அவர்களுக்குத் தேவையான உணவையும் மருந்துகளையும் ஏற்பாடு செய்தார்கள். அது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒழுக்கத்தை போதித்தார்கள். தாங்கள் கடைப்பிடித்த உன்னத வாழ்வியல் கோட்பாட்டை அவர்களுக்கு அறிமுகம் செய்தார்கள். எனவே தான் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள்மேல் பொழியப்பட்ட அருள்மழையாகவே முஸ்லிம் படைவீரர்களை எண்ணினார்கள்.

தங்களோடு தங்கள் நாட்டிலேயே தங்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் அங்கிருந்து வெளிக்கிளம்ப முயற்சித்தபோது வெளியேறக் கூடாது என வற்புறுத் தினார்கள். அது கைகூடாதபோது கண்ணீர் வழிய சோகத்தோடு விடை கொடுத்தார்கள். முஸ்லிம் சமூகம் பெற்ற வெற்றிகளுக் கும் மற்ற சமூகங்கள் பெற்ற வெற்றிகளுக்கும் இடையிலான வேறுபாடு என்பது ஆச்சரியப் படத்தக்க உண்மைகள் ஆகும். இந்த வேறுபாட்டை கவனத்தில் கொள்ள மறந்துவிடக்கூடாது.

முஸ்லிம்கள் தொடுத்த தாக்குதல்கள் அருளாக இருக்க, மற்றவர்கள் தொடுத்த தாக்குதல்களோ வேதனையாக அமைந்தன. காட்டில் வாழும் கொடிய விலங்குகளும், பொந்துகளில் மறைந்துறையும் பாம்புகளும் அவர்களைக் கண்டு அஞ்சின.ஆக, முதலாம் உலகப்போருக்கு முன்புவரை ஃபலஸ்தீனத்தில் யூதர்கள் எக்காலத்திலும் குடியிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் இல்லை.

 

-அபூஷேக் முஹம்மத்.

4 thoughts on “ஃபலஸ்தீன தேசம் யாருக்குரியது, இஸ்ரேலியர்களுக்கா? முஸ்லிம்களுக்கா?

 • December 10, 2017 at 7:35 am
  Permalink

  Well I definitely enjoyed reading it. This article procured by you is very practical for correct planning.

  Reply
 • December 12, 2017 at 3:25 pm
  Permalink

  I was discussing with a friend of my own about this article and even about mesothelioma law too. I do think you made a number of great points in this case, we’re also excited to continue reading information from you.

  Reply
 • December 14, 2017 at 5:51 pm
  Permalink

  I like what you guys are up also. Such smart work and reporting! Keep up the excellent works guys I’ve incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my website 🙂

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X

Pin It on Pinterest

X