Featured Category

இறைவன் ரெடி…! நாம ரெடியா..?

உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் தனது ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார்.  அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அவரது ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அதில்தான் அவரது உணவும் பானமும் இருந்தன.
அவர் தனது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்பிக்கை இழந்து, கவலையுடன் ஒரு மரநிழலில் படுத்திருந்தார். அப்போது, அந்த ஒட்டகம் திடீரென வந்து தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார்.

பிறகு மகிழ்ச்சிப்பெருக்கில் அவர்,
‘இறைவா! நீ என் இறைவன்;
நான் உன் அடிமை’
என்று சொல்வதற்குப் பதிலாக
‘இறைவா! நீ என் அடிமை;
நான் உன் இறைவன்’
என்று அவசரத்தில் சொல்லிவிட்டார்.

இந்த உருவக, உவமான நிகழ்வை நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களிடம் கூறிவிட்டு,
‘தோழர்களே! காணாமல் போன ஒட்டகம் திரும்பக் கிடைத்ததை எண்ணி அந்த மனிதர் மகிழ்ச்சி யடைந்தது போல, இன்னும் அதைவிடவும் அதிக மாக ஓர் அடியான் பாவமன்னிப்புக்கோரி தன்னி டம் மீளும்போது இறைவன் மகிழ்ச்சியடைகிறான்’ என்று விளக்கி னார்கள். [• அனஸ் (ரளி) • ஸஹீஹ் முஸ்லிம் – எண் : 5300]
▪ இறைவன் இவ்வாறு மகிழ்ச்சியடைகிறான்,
இன்புறுகிறான் என்பதெல்லாம் சரி…!

ஆனால், பாவமன்னிப்புக்காக இறை சந்நிதியில்
நாம் மீளுகிறோமா?

▪ ஓர் அடியான் பாவமன்னிப்புக்காக கையேந்தி
விட்டால், அதை வெறுங்கையுடன் திருப்பி
அனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான்.

ஆனால், பாவம் செய்வதை எண்ணி, பாவம்
செய்த பிறகும் இறைவனிடம் கையேந்தாமல்
இருப்பதை எண்ணி நாம் வெட்கப்படுகிறோமா?

▪ பகல் குற்றவாளிகளுக்காக இரவிலும் இரவு
குற்றவாளிகளுக்காக பகலிலும் தமது தவ்பா
(பாவமன்னிப்பு) வாசலை இறைவன் அகலத்
திறந்து வைத்துள்ளான்.

ஆனால், அந்த வாசலில் நுழைய நாம் ஆவல்
கொள்கிறோமா..?

ஆக, இறைவன் ரெடி, ஆனா, நாம ரெடியா..?

ரஹ்மத்துல்லாஹ் மஹ்லரி

error: Content is protected !!