Featured Category

சல்லிக்கட்டு விளையாட்டு  அறிவோமா ?

முதலில் நாம் சல்லிக்கட்டு விளையாட்டுப் பற்றி சில அடிப்படை விடயங்களை தெரிந்துக் கொள்ளவேண்டும். சல்லிக்கட்டு தடைகளுக்கு பின்னே உள்ள காரணங்களை தற்போது விளங்கிய தமிழக நவீன யுவன்கள் சல்லிக்கட்டு விளையாட்டின் விதிகளை தெரிந்துகொண்டால் அதன் அறியாமை நீங்கும் .
சல்லிக்கட்டிற்க்கு தயாராகும் காளைகள்

மிருக வதை என கூறி தடை செய்யப்பட்ட சல்லிக்கட்டு விளையாட்டின் உண்மை விதிமுறைகள் என்ன ? எங்கே மாடுகள் எங்கு வதைக்கப் படுகின்றன ? எங்கு கொம்புகள் உடைக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை.

மேலும் இதில் ஈடுபடுகின்ற காளைகளும் காளையர்களும் இதற்காக பயிற்சியளிக்கப்பட்டவர்கள் ஆவர். சாதாரண காளைகளுக்கோ பொதுமக்களுக்கோ அங்கே களத்தில் வேலை இல்லை .காட்சிகளை காண்பதற்கு  மட்டுமே அவர்கள் நிற்கின்றார்கள்.

இதற்காக வளர்க்கப்படும் காளைகளுக்கு மற்ற காளைகளைப் போல அல்லாமல் ஆரோக்கியமான, சத்துள்ள ஆகாரங்கள் உண்பதற்கு அளிக்கப்படுகின்றன. உறுதியாக இருப்பதற்கு நீச்சல் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு பயிற்சிகள் உதாரணத்திற்கு கயிற்றைத் தாண்டக்கூடாது, கூட்டத்தை கண்டு மிரளாமல் இருப்பதற்கான பயிற்சிகள், யாருக்கும் பிடிபடாமல் சாதுர்யமாக ஓடுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய காளைகள் மிக விலையுயர்ந்தவை. இவைகளை காயப்படுத்துவதற்கு அதன் உரிமையாளர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதன் உரிமையாளர்கள் ஒன்றை இழந்தால் மற்றொன்றை வாங்குவதற்கு செல்வந்தர்கள் இல்லை . மேலும் அதனுடன் அதன் வளர்ப்பில் விலைமதிப்பில்லாத அன்பினால் ஒன்றியவர்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது குடும்பமே அந்தக் காளையின் வளர்ப்பில் ஒன்றியது. (இதை ஆடு, மாடுகளை வளர்ப்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

வாடிவாசல்:

ஏறுதழுவுதல் காளைகளை வாடிவாசல் வழியாக மட்டும் களத்திற்கு அனுப்ப வேண்டும்.

திமில்:

வீரர்கள் காளையின் திமிலைப் பிடித்து மட்டுமே தொங்க வேண்டும். ஒரே சமயத்தில் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ காளையின் திமிலைப் பிடித்து தொங்க கூடாது.

எல்லைக் கோடு:

காளையின் திமிலை பிடித்து தொங்கியப்படி வரையறுக்கப்பட்ட எல்லை கோடு வரை செல்ல வேண்டும். இந்த தூரம் ஏறத்தாழ ஐம்பது மீட்டர் வரை இருக்கும்.

காளை வெற்றி:

காளை தனது திமிழில் தொங்கும் வீர்ர்களை உதறிவிட்டு அந்த எல்லைக்கோட்டை அடைந்துவிட்டால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.காளையை யாரும் பிடிக்க முடியாமல் போனாலும் அந்த காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

வீரர் வெற்றி:

களத்தில் ஓடும் காளையின் திமிலை பிடித்து குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் வீரர் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார்கள்.

விதிகள்:

திமிலை ஒருவருக்கு மேல் ஒரே நேரத்தில் பிடித்து தொங்கக் கூடாது.
திமிலை தவிர காளையின் வால் அல்லது கழுத்து பகுதியை பிடித்து தொங்கக் கூடாது.திமிலை தவிர காளையை வேறு இடத்தில் பிடித்து தொங்கினால் அந்த வீரர் நீக்கப்படுவார்.காளையை வீரர்கள் சீண்டவோ, அடிக்கவோ, காயப்படுத்தவோ கூடாது.

ஏறுதழுவுதல் , தமிழர் பாரம்பரியம், என்ற சொல்லாடல் தாண்டி சல்லிக்கட்டு விளையாட்டு குறித்து பொதுமக்கள் அடிப்படை அறிவை தெரிந்து கொள்வது இந்த ஆக்கத்தின் நோக்கம் ஆகும்.

-நெல்லை ஏர்வாடி S. பீர் முஹம்மத்.

பீர் முஹம்மத்

error: Content is protected !!