Featured Category

அல் அக்ஸாவை அழிக்கும் யூதர்களின் சதி!

லகமெங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளும், இனசுத்திகரிப்புகளும் நடப்பதற்கான பிரதான காரியங்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு நீதிக்கான மக்களின் மிக முக்கியக் கடமை ஆகும்.
அந்த முக்கியக் கடமைகளுள் உலக முஸ்லிம்களின் தலையாய பிரச்சினையான மஸ்ஜித் அல் அக்ஸா என்ற இறை இல்லத்தை மையமாக வைத்து, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையில் நடக்கும் யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான பிரச்சினை அதி முக்கியமானது ஆகும்.

பசித்த ஓநாய் மீடியா உலகிற்கு இரையாக மஸ்ஜித் அல்அக் ஸா மக்களின் போராட்ட ரத்தம் குறிவைக்கப்படும் தற்போதய சூழலில்
அதன் யதார்த்த நிலை என்னவென்பதை புரியும் வகையில் பார்ப்போம்

யார் இந்த யூதர்கள் 

வேதங்களின் கூற்று படி, இறை தூதர் யாக்கோப் அவர்ளின் 12 மகன்களின் வழித்தோன்றல்கள் இஸ்ரேலிய சமுதாயத்தினர்( பனூ இஸ்ராயீல்) என்றே அழைக்கப்படுகின்றனர். இந்தச் சமூகத்தில் சீரழிவுகளையும், அதற்கு மூல காரணமான சிலை வணக்க கொளகைகளையும் களையும் பொருட்டு, இதன் தொடர் வம்சத்தில் பல இறை தூதர்கள் வருகை புரிந்தனர்.இறை கட்டளைக்கு கட்டுபட்டு தூதர் வழிமுறையை பின்பற்றியவர்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்டனர். கட்டுப்படாதோர் தனது சிந்தனையின் மதத்திலும் இருந்தனர்.
இறைத் தூதர் சாலமன் பிறகு, யாக்கோபின் பன்னிரண்டு சந்ததிகளின் வம்சாவளியினர் பிற்காலத்தில் தங்களுக்குள் மோதிகொண்டமையால் பாலஸ்தீன பகுதியை வடக்கு தெற்கு எந்த இரு கூறாகப் பிளந்தனர். அந்த வகையில் சமாரியா என்ற பகுதியை தலைநகரமாகக் கொண்டு பாலஸ்தீனத்தின் வடபகுதி இஸ்ரேல் என்றும் ,ஜெருசலம் என்ற பகுதியைக் கொண்டு பாலஸ்தீனத்தின் தென் பகுதி யூதேயா என்றாக்கப்பட்டது.

இரண்டு ராஜ்யங்களிலும் உள்ள மக்கள் இறை சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு தங்களை மனோ சிந்தனைகளையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்படுத்திவிட்டு, தவ்ராத் என்ற வேதங்களில் உண்மைகளை மறைத்து இருட்டடிப்பு செய்தவர்கள் பிறகு யூதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

கவனத்தில் கொள்ள வேண்டிய குத்ஸ் நகரமும் மஸ்ஜித் அல் அக்ஸாவும் 

பாலஸ்தீன நாட்டில் மேற்குக்கரை பகுதியில் உள்ள பல நகரங்களில் அல் குத்ஸ் என்ற நகரமும் ஓன்று ஆகும் .அது வரலாற்று சிறப்பு மிக்க பகுதி ஆகும். அதற்கு காரணம் அங்கே வீற்றுஇருக்கும் மஸ்ஜித் அல் அக்ஸா என்ற இறை இல்லமே.சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா மற்றும் மதினா நகரில் உள்ள இறை இல்லம் எவ்வாறு புனிதமோ அதே போல குத்ஸ் நகரில் உள்ள மஸ்ஜித் அல் அக்ஸா புனித நகரமாக பார்க்கப்படுவது அதற்கு காரணம் ஆகும்.

மஸ்ஜித் அல் அக்ஸா மற்றும் அதனை ஒட்டி உள்ள இன்னொரு பள்ளி வாயில் குப்பத்து ஸஹ்ரா ( dome of the rock ) என்று அழைப்பார்கள்.
தங்க நிறத்தில் அதன் அதன் மேற்கூரை ஜொலிப்பதை தற்போதும் புகைப்படங்களில் பார்க்க முடியும்.

பிறகு கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி ஹாயிதுல் மப்கி என்ற பகுதி ஆகும் . சாலமன் தூதர் காலத்தில் ஹைக்கல் சுலைமானை கட்டி ஒழுங்கப்படுத்திய சமயம் அதன் கிழக்கு பகுதியில் எஞ்சி இருக்கும் இடம் ஆகும்.வரலாறு ரீதியாக நிரூபணமாகாத விடயம் இது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .அத்தகைய இடத்தை யூதர்கள் தங்களின் வழிபாட்டுக்குரிய இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இது தற்போதைய பிரச்சினைக்குரிய அம்சத்தில் கவனிக்கப்படவேண்டியவை ஆகும் .

மஸ்ஜித் அல் அக்ஸாவில் மொத்தம் 14 வாயில்கள் இருக்கின்றன.
அதில் மிக முக்கியமான வாயிலான பாபுல் மகாரிப் என்ற நுழைவாயில் மிக விசேடமான ஒன்றாக யூதர்கள் கருதுவதால் தங்கள் கரங்களில் அதன் உரிமையை வைத்து இருக்கின்றனர். மேலும் 13 நுழைவாயிலின்
உரிமையும் சாவியும் ஜோர்டான் நாட்டின் (AWQAF ) பள்ளிவாயிலை நிர்வகிக்கும் அமைச்சகத்திடம் உள்ளது. பாபுல் மகாரிப் தற்போதைய பிரச்சினையில் கவனிக்க பட வேண்டிய இன்னொரு அம்சம் ஆகும் .

ஹரம் மஸ்ஜித் அல் அக்ஸா என்பது குப்பத்து ஸஹ்ரா ( dome of the rock ) மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸா இரண்டும் இணைந்த பகுதிகள் ஆகும் என்பது ஆகும்.

இஸ்ரேலியர்களின் அதி முக்கிய இலக்கு 

மஸ்ஜித் அல் அக்ஸாவை இடித்து விட்டு ஹைக்கல் சுலைமானை கட்டுவதும், வரலாற்று சிறப்புமிக்க குத்ஸ் நகரை இஸ்ரேலிய தலைநகரமாக மாற்றுவதும் என்பது இஸ்ரேலியர்கள் அதிமுக்கிய வாழ்வியல் இலக்குகளில் ஒன்றாகும். இந்த நோக்கத்தை மையப்படுத்தியே சர்வதேச அரசியலை இஸ்ரேலும் , அமெரிக்க ஐக்கிய நாடுகள் இயக்குகிறது என்பதை வளரும் அரசியல் அவதானிகள் இனி தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

அல் அக்ஸாவைக் கையகப்படுத்தும் கால கட்டம்

அடுத்தாக ,அரபு மல்லிகைப் புரட்சியின் எழுச்சி அடங்கிய பிறகு, குறிப்பாக எகிப்தில் அதிபர் முர்சி கைது மற்றும் இஃவான்களின் மூத்த தலைவர்களின் சிறைவைப்பிற்குப்பிறகு இஸ்ரேலின் மேற்சொன்ன இலக்குகளை அடைவதற்கான காலம் கனிந்ததாக இஸ்ரேலிய அரசு தற்போது பார்க்கின்றது.

மேலும் ஏமன், சிரியா, லிபியா, எகிப்து நாட்டில் தொடர்ந்து உள் நாட்டு போர்கள் நடக்கின்றன. மேலும் ஐசிஸ் போன்ற கடும் போக்குவாத இயக்கங்களின் நாசகார செயல்களும், அரபு தேசத்தின் உள்ளே வாழும் மக்களின் சிந்தனை திசை திருப்பல்களும் பாலஸ்தீனம் மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸா பிரச்சினையைக் குறித்து சிந்திக்க விடாமல் தடுக்கின்றன. இவை இஸ்ரேல் மஸ்ஜித் அல் அக்ஸாவை வைத்து பிரச்சினையை உருவாக்க சரியான தருணமாக கருதுகின்றது.

இதன் படியே ,2014 ஆம் ஆண்டின் காஸாவின் போர் மற்றும் அதன் கால கட்டம் முதல் தற்போது வரை மேற்கு கரையில் இஸ்ரேலியர்கள் பலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தாக்குதல்களையும், அடக்கு முறைகளையும் தொடுக்கின்றனர்.

இந்த நிலையில் மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய அடக்குமுறைக்கு எதிராக காஸாவை போல ஆயுதம் ரீதியான தாக்குதல்களை தொடுக்கவில்லை மாறாக ஆர்ப்பாட்டங்களை முன் எடுக்கின்றார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அகன்ற இஸ்ரேலும் ஹைக்கல் சுலைமானியும் 

சியோனிஸத்தின் தந்தை தியோடர் ஹெர்சலின் திட்டமான அகன்ற இஸ்ரேல் என்பது எகிப்தின் நைல் நதி முதல் யூப்ரடீஸ் நதி வரை பாரிய இஸ்ரேலிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவது ஆகும். 1967 ஆம் ஆண்டு முழு பாலஸ்தீனம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை யூதர்கள் அபகரித்துக் கொண்டு இஸ்ரேலை உருவாக்கியது.

இவ்வாறு அபகரித்தாலும் இந்த நிலப்பரப்பை சுற்றிச் இருக்கும் கொலோன் குன்றுகள், சினாய் பாலைவனம், தெற்கு லெபனான், மற்றும் காஸாவை திருப்பிக் கொடுக்கும் நிலைக்கு இஸ்ரேலிய அரசு ஆளானது. காரணம் பாலஸ்தீன மக்களின் போராட்ட சிந்தனையும் மற்றும் தொடர் போராட்ட யுக்திகளுமே என்று சொல்ல முடியும் .

அகன்ற இஸ்ரேல் பூகோள அரசியல் ரீதியாக தற்போது சாத்தியம் இல்லை என்றாலும் தனது சூது அரசியல் மூலம் சாத்தியப்படுத்த இஸ்ரேல் முனைகின்றது . அந்த வகையில் திட்டத்திற்கு மிக நெருக்கமாக உள்ள ஹைக்கல் சுலைமான் என்ற யூதக்கோவிலை கட்டுவது என்பது அதன் அதி முக்கிய தற்போதைய இலக்காக கொண்டு தனது காய்களை நகரத்து கின்றது .

அக்ஸாவிற்கு எதிராக இஸ்ரேலிய அரசின் திட்டங்கள்

பைத்துல் முகத்தஸ் முழுமையாக ஒழித்து விடுவதும். யூதர்களுக்கும் சொந்தமானது என்று பிரச்சாரம் முன் எடுப்பது ஆகும்.

வரலாற்றைக் காரணப்படுத்தி புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கட்டிடங்கள் சுற்றி சுரங்கங்கள் தோன்றுவதும் அதன் மூலம் கட்டிடங்களை சேதம் உண்டாக்கி இடித்து தரைமட்டம் ஆக்குவதும் அடங்கும்.

2020 ஆம் ஆண்டிற்குள் குத்ஸ் பூமி முழுமையாக யூதமயமாக்கப்பட வேண்டும். பாலஸ்தீன அரபிகள் முழுமையாக துரத்தப்படவேண்டும்.

80 % குத்ஸ் பிரதேச நிலங்கள் யூதர்கள் கைகளுக்கு செல்வது.

யூதர்களின் மக்கள் தொகை 88 % ஆகவும் , முஸ்லிம்களின் மக்கள் தொகை 12 % ஆக மாற்றுவது ஆகும் .

அந்த அடிப்படையில் இஸ்ரேலிய அரசு குத்ஸ் பகுதியை சுற்றி இருக்கின்ற 28 கிராமங்களில் உள்ள வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி அதில் உள்ள செங்கல்கள் மூலம் யூத குடியிருப்புகளை ஏற்படுத்தி உள்ளது .

இது வரை கடந்த வருடம் கணக்கெடுப்பின் படி 54000 -57000 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டில் குடியிருப்புகள் அதிகம் ஏற்படுத்தப்படுகின்றன.

ஒரு இனத்தை ஓரிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு,கொன்று விட்டு இன்னொரு இனம் ஆக்கிரமிப்பது பாலஸ்தீனியர்கள் விடயத்தில் மட்டும் வரலாற்றில் மிகப்பெரிய இனச்ச்சுத்திகரிப்பு ஆகும்.

இதன் அடிப்படையில் மேற்கு கரை பாலஸ்தீன மக்களின் மீதான அடக்குமுறையை ஏற்படுத்துதல், பாலஸ்தீன குடியேற்ற பகுதிகளில் யூத குடியேற்றங்களை ஏற்படுத்துதல் மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸாவின் உள்ள செல்ல தடுத்தல் ஆகும்.

அல் அக்ஸாவை கைப்பற்றும் செயல்பாடுகள்

வரலாற்றுக்குறிப்பில் 1967 ஆம் ஆண்டு ஜெனரல் முர்தகா
என்பவர் பாலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றிய சமயம், மஸ்ஜித் அல் அக்ஸாவினுள் படைகளுடன் நுழைந்து யூதர்களின் கொடியை பறக்க விட்டார்.முஸ்லிம்களின் வேதமான குர்ஆனை எரித்தார். ஒரு நாள் பாங்கு கொடுத்து தொழுகை நடைபெற தடுத்தார். அல் அக்ஸாவின் 14 நுழைவாயிலின் உரிமைகளையும் தனது கரத்தில் வைத்துக் கொண்டார்.

பிறகு இஸ்லாமிய உலகம் கிளர்ந்த போது மஸ்ஜித் அக்ஸாவின் பொறுப்பு ஜோர்டான் நாட்டின் கீழ் வந்தது. அப்போது மஸ்ஜித் அல் அக்ஸாவின் 13 வாயில்கள் உரிமைகளை இஸ்ரேல் ஜோர்டான் AWQAF வழங்கியது. அதன் உரிமை இன்று வரை ஜோர்டான் அரசிற்கு இருக்கின்றது. பிறகு யூதர்கள் புனிதமாக கருதும் வாயிலான பாபுல் மகாரிப் மட்டும் இஸ்ரேலிய அரசு வைத்துக் கொண்டது.
மஸ்ஜித் அல் அக்ஸாவை முஸ்லிம்கள் , யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மூவரும் தங்களின் புனித நகரமாக கருதும் வேளையில் அவர்கள் அவ்விடத்தை தரிசிக்க வரும் பொழுது அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்பது நியாயம் ஆகும். இந்த வழமை இஸ்லாமிய கலீபா உமர் அவர்கள் காலம் தொட்டே இருந்து வருகிறது . இதன் அடிப்படையில் ஜோர்டான் AWQAF பார்வையாளர்கள் நேரமாக காலை 7 மணி முதல் 10 மணி வரை மற்றும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது.

யூதர்கள் மஸ்ஜித் அல் அக்ஸாவின் உள்ளே ஹாயிதுல் மப்கி என்ற பகுதியில் பிரார்த்தனை புரிந்து வருவதை அறிந்தோம். அவர்கள் தற்போதுமஸ்ஜித் அல் அக்ஸாவின் உள்ளே சென்று வணங்குவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவதும், கால சூழலில் யதார்த்தமாக மாற்றுவதும் அவர்கள் அண்மைக்கால திட்டமிடல் ஆகும். அந்த வகையில் அல் அக்ஸாவின் உள்ளே வணங்குவதற்கு உரிமை உண்டு என்று கோஷங்களை முன்வைக்கும் இயக்கங்களை உருவாக்குகின்றனர்.

மேற்கு கரையை சேர்ந்த மோசே வீக்லின் என்பவர் “யூத தலைமை” மற்றும் “எங்கள் பூமி” என்ற இரு இயக்கங்களை உருவாக்கினார். யூதர்கள் மஸ்ஜித் அக்ஸாவின் உள்ளே சென்று வணங்குவதற்கு உரிமை உண்டு என்று பிரச்சாரம் செய்கிறார். இவர் இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவரது இயக்கங்கள் மஸ்ஜித் அல் அக்ஸாவை ” நேரம்” மற்றும் “இடம்” என்ற அடிப்படையில் பிரித்து தரவேண்டும் என்ற யுக்தியை வலுவான கோரிக்கையாக வைத்து வருகின்றது

மஸ்ஜித் அல் அக்ஸாவினுள் நுழையும் யூத தந்திரம் 

1976 ஆம் ஆண்டில் இஸ்ரேலியர்கள் மஸ்ஜித் அல் அக்ஸாவினுள் உள்ளே தொழுவதற்கான அனுமதியை நீதிமன்றம் மூலம் பெற்றனர். பிறகு 1980 ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஹைக்கல் சுலைமானியை கட்டுவதற்கு சில யூதத் தலைமைகள் அடிக்கல் நாட்டினர், இதனால் பாலஸ்தீனியர்கள் வெகுண்டு எழுந்தனர் . இதில் 27 பேர் வீரமரணம் அடைந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர் . இந்த காலம் முதல் இன்திபாதா என்ற கற்புரட்சியை உருவாக்கியது.

2000 ஆம் ஆண்டுகளின் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன் யூதப் படைகளின் பலத்த பாதுகாப்போடு மஸ்ஜித் அல் அக்ஸாவின் உள்ளே சென்று வணங்கினார்.இது மீண்டும் ஒரு இன்திபாதாவை உருவாக்கியது .2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டில் பிப்ரவரி ,மார்ச், செப்டம்பர் களங்களில் பலவந்தமாக உள்ளே சென்றனர்.

2014 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பலவந்தமாக இஸ்ரேலியர்கள் மஸ்ஜித் அல் அக்ஸாவினுள் உள்ளே செல்வதும், வணங்குவதும், முஸ்லிம்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதும் தொடர்கின்றது.

யூதர்கள் பரக்கத் ஆகாமத் என்ற வணக்கத்தை நிறைவேற்ற 1000 கணக்கான யூதர்கள் பெரும் வல்லமையோடு வந்தனர். அந்த நேரத்தில் பாலஸ்தீனியர்கள் எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். அந்த தருணத்தி இருந்து முஸ்லிம்களை தொழுகைக்கு விடமால் தடுக்கின்றனர் .
50 வயதுக்கு கீழ் உள்ள மக்களை உள்ளே விடாமல் தடுக்கின்றனர். பெண்களை குழப்பம் விளைவிப்போராக கடுமையாக தடுக்கின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 1,331 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களும், 617 யூத மாணவர்களும் 91 இஸ்ரேலிய இராணுவ போலீசார்களுடன் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் நுழைந்தனர்.
அவர்கள் முக்ராபி வாசல் மூலமாக நுழைந்து சில்சிலா வாசல் வழியே வெளியேறினர். வாசலில் நின்று கொண்டு தல்மூது சடங்குகளை செயல்படுத்தி பாடல் பாடுவது , நடனமாடுவது, ஹனுகாஹ் மெழுகுவர்த்திகளை ஏற்றுவது போன்ற காரியங்களை செய்து வந்தனர். இதுபோன்ற நிகழ்வுகளின்போது அக்ஸாவின் கதவுகள் கட்டிடங்களை தாக்கி இராணுவத்தினர் சேதத்தை ஏற்படுத்துவார்கள்.

பாங்கு தடை மசோதா

பாலஸ்தீனத்தில் ஹெப்ரான் மற்றும் மேற்கு கரைப் பகுதியில் அவ்வப்போது தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்படும் அழைப்போசையை ( பாங்கை) தடை செய்வதும் அண்மையில்
தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜனவரி 2014 ஆம் ஆண்டில் 49 தடவையும் , டிசம்பர் 2015 ஆம் ஆண்டில் 52 தடவையும், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் 83 முறையும் தொழுகைக்கான அழைப்போசையை நிறுத்தி உள்ளார்கள். இந்த வழக்கம் தற்போது ஜெருசலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஜெருசலத்தில் பிஸ்காத் ஸீவு (Pisgat Zeev) பகுதியில் வாழும் சட்ட விரோத குடியேறிகள் மேயர் நீர் பார்காதிடம் ஒலி மாசுபடுகிறதென்றும் ( Noise pollution ) அருகிலுள்ள பள்ளி வாசலில் இருந்து தாங்க இயலாதா அளவிற்கு சப்தம் வருகிறது என்றும் புகார் அளித்ததின் பேரில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த பிரச்சனையை பெரிது படுத்தி ஒரு மசோதாவாக வரையப்பட்டு
இஸ்ரேலிய பாராளுமன்றமான நெஸ்ஸட்டில் ( knesset ) முன்மொழியப்பட்டது. அதனையடுத்து இந்த விடயம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக முஸ்லீம் நாடுகள் மற்றும் அமைப்புகள் கடும் கண்டனத்தை இதற்காக பதிவு செய்தனர். இதன் பிறகு, நேர முறைமைகளை சற்று மாற்றி இரவு 11:௦௦ மணி முதல் காலை 7:00 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்து மசோதா வரையப்பட்டது. இந்த மசோதாவிற்கு பெயரே முஅத்தின் மசோதா ( Muezzin Bill ) ஆகும்.

பெஞ்சமின் நெதன்யாஹு இதனை சட்டமாக்க துடித்து கொண்டுள்ளார்.தற்போது இது இஸ்ரேலிய அமைச்சர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு 22-2- 2017 அன்று பாராளுமன்றத்தில் மூன்று
சுற்று வாக்கு பெற உள்ளது. மூன்று சுற்றும் கடந்து விட்டதென்றால் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்டு விடும். பிறகு அந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது அபராதமும் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது.

உலகம் உற்று நோக்கும் ஜூலை மாத அல் அக்ஸா பிரச்சினை 

கடந்த ஜூலை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் மஸ்ஜித் அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பலஸ்தீன முஸ்லிம்கள் மூவருக்கும் மத்தியில் துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல் தெரிவிகின்றார்கள். அதன் அடிப்படையில் இரண்டு இஸ்ரேலியக் காவல் படையினரும், மூன்று பாலஸ்தீன இளைஞர்களும் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு அன்றைய வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்கான அனுமதி மறுக்கப்பட்டு மஸ்ஜித் அல் அக்ஸா வளாகத்தை சுற்றிலும் தடுப்புகளை ஏற்படுத்தியது . மேலும் ஜெருசலத்தின் முக்கிய பகுதிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி மக்களை முடக்கியது. இந்த சம்பவம் பாலஸ்தீனத்தில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை கொந்தளிப்பிற்கு உள்ளாகியது.

1969 ஆம் ஆண்டிற்குப் பிறகு பள்ளிக்குள் சென்று தொழுகைக்கு வருபவர்களை தடுத்தது இதுவே முதன் முறை ஆகும் .மக்கள் ஒவ்வொரு வேளை தொழுகையையும் வளாகத்திற்கு வெளியே வீதியில் தொழுது வந்தார்கள். இரண்டு நாட்கள் கழிந்த பின் ஞாயிறு அன்று அல் அக்ஸா நுழைவாயில்களில் சோதனைக்கு உள்ளாக்கப்படும் மெட்டல் டிடெக்டர்கள் (Metal Detectors) புதிதாக பொருத்தப்பட்டு, அதன் வழியே சோதனைக்கு உட்பட்டு, தொழுபவர்கள் பள்ளிக்குள் சென்று தொழுது கொள்ளலாம் என தனது சதி வேலையை நெதன்யாஹுவின் அரசு அறிவித்தது.

நடந்த அசம்பாவிதத்திற்கு ஈடாக பாதுகாப்பு நிமித்தமே இந்த மெட்டல் டிடெக்டர் என்று நரித்தனத்தில் ஈடுபட்டது இஸ்ரேல்.
“ஒரு போதும் இந்த சோதனை கருவிகளுக்கு உட்பட்டு தொழுவதற்கு நாங்கள் உள்ளே செல்லமாட்டோம் இந்தக் கருவிகளை எல்லாம் நீக்கும் வரை நாங்கள் வீதியிலே தொழுது எங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்துவோம் என ஜெரூசலத்தின் மூத்த மார்க்க தீர்ப்பாளார் ஷேக் ஹுசைன் அவர்கள் அதிரடி பிரகடனம் செய்தார்கள்.

வீதிக்கு வந்த மக்கள் போராட்டமும் மூவர் மரணமும்

அதைத் தொடர்ந்து ஒரு வாரமாக பல நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வீதியில் தொழுது வந்ததை முழு உலக மீடியாக்கள் கண்டு வந்தார்கள். பலஸ்தீன் விடுதலைக்கு பாடுபடும் எதிர்ப்பு இயக்கங்களான ஹமாஸ், ஜிஹாத் அல் இஸ்லாமி போன்ற அமைப்புகள் கடும் கண்டனங்களையும் காஸா, மேற்கு கரை என பல இடங்களில் தொடர்ந்து பேரணிகளையும் , ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தார்கள்.

இறுதியாக அடுத்த வெள்ளிக்கிழமையம் வந்தது. ஜெருசலத்தின் எல்லா பள்ளிகளுக்கும் அழைப்பை விடுத்து இந்த வெள்ளி ஜூலை 21 ஆம் நாள் அக்ஸாவிற்கு வெளியே தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நாளை Day of Rage ஆத்திரத்திற்கான நாள், வெறுப்பிற்கான நாள் என்று ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா முஸ்லிம் உலகிற்கும் அரபுலகிற்கும் பலஸ்தீனியர்களின் எதிர்ப்பு குரலை கேட்டு அழைப்பு விடுத்து இருந்தார்.

ஜூலை 21 ஆம் நாள் வெள்ளி அன்று ஆயிரக்கணக்கான மக்கள் மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு தொழுகைக்கு வந்தனர். அக்ஸா வளாகத்தில் புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் மெட்டல் டிடெக்டர் மற்றும் பலமான பாதுகாப்பிற்கு உட்பட்டு உள்ளே சென்று தொழ மறுத்து வெளியே தொழுவதற்கான தயாரிப்புகளோடு வந்திருந்தனர். இஸ்ரேல் இராணுவமோ பலத்த வெடிபொருட்கள், புகை குண்டுகள், தண்ணீர் டாங்குகள் என்று மக்களை விரட்டி அடிக்க அவர்களும் ஆயத்தமாகவே வந்திருந்தனர். அமைதியாக தொழுகை நடத்தி எதிர்ப்பை தெரிவித்த மக்களை சூறையாடியது இஸ்ரேலிய இராணுவம்.

அவர்கள் மட்டுமின்றி யூதக் குடியேறிகளான சியோனிஸ்டுகளும் ஆயுதங்களுடன் பெருவாரியாக வந்திருந்தனர். புகை குண்டுகளை வீசி ரப்பர் புல்லட்களைக் கொண்டு கொடூரமாக தாக்கியதில் 3 நபர்கள் உயிரிழந்தார்கள் 450 கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டார்கள். தொழுது கொண்டிருந்த ஒருவரை பலமாக எட்டி உதைத்த இஸ்ரேலிய படையின் காட்சியை உலகமே கண்டு அதிர்ந்தது. இறந்தவர்களில் முஹம்மத் ஷரஃ ப்(18) முஹம்மத் அபு கண்ணூம்(21) மற்றும் மூன்றாவது நபரின் பெயர் அறிவிப்பு வரிசையில் இல்லை.

யூத பயங்கவரவைத்த அமைப்பு TMF
பாதுகாப்பு நிமித்தம் என்ற பெயரில் அல் அக்ஸாவை சன்னம் சன்னமாக கைப்பற்றி அழித்தொழிப்பதே இவர்களின் சதி ஆகும். அல் அக்ஸாவை இடித்து யூத கோவிலைக் கட்டுவோம் என பகிரங்கமாக முழங்கும் யூத பயங்கரவாத குழுக்களில் ஒன்றான Temple Mount Faithful என்ற அமைப்புகளுக்கு சாதகமான செயல் இந்த மெட்டல் டிடெக்டர்கள் ஆகும்.

முஸ்லிம் இனப்படுகொலைகளை ஆதரித்து பேசும், புனிதத் தளங்களை இடிக்க கோரும் இந்த தீவிரவாத அமைப்புகளை, மத சுதந்திரம் என்ற அடிப்படையில் அக்ஸாவிற்குள் ஆயுதங்களுடன் நுழைய விடும் இஸ்ரேலை என்ன வென்று சொல்வது?

கடந்த இரண்டு வாரங்களாக நடக்கும் போராட்டங்களுக்கு முன்பும் அனைத்து முஸ்லிம்களும் அல் அக்ஸாவிற்குள் அனுமதிக்கப்பட வில்லலை . 40 வயதிற்கு மேலுள்ளவர்கள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பிறகு அல் அக்ஸாவிற்குள் நுழைய முடியும்.

Temple Mount Faithful என்ற இந்த யூத பயங்கரவாத அமைப்பு 1990 ஆம் ஆண்டில் யூத கோவிலுக்கான அடித்தளமாக ஒரு மைல்கல்லை அல் அக்ஸா வளாகத்திற்குள் வைக்க முயற்சித்த போது மிகப்பெரும் கலவரம் வெடித்து 20 முஸ்லிம்கள் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஸா வளாகம் தாக்கப்படுவதும் அவ்வப்போது யூத ஆக்கிரமிப்பாளர்கள் பெரும் படையோடு உள்ளே நுழைந்து தங்களின் தல்மூது பாடல்களை பாடி சடங்குகளை செய்து தொந்தரவுகளை ஏற்படுத்துவதையும் ஜெருஸல மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்.

உலக முஸ்லீம் நாடுகளின் கண்டனங்கள் 

முஸ்லிம் நாடுகளான துருக்கி, ஜோர்டான் அரசு இஸ்ரேலிய நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் லெபனான் நாட்டின் அதிபர் மிசேல் அவுன் அவர்களும் தனது எதிர்ப்பை தெரிவித்தார். குறிப்பாக சவுதி அரேபியா எங்கே முஸ்லிம் உலகம் தங்களை பழி சுமத்திவிடுமோ என்ற அச்சத்தில் மன்னர் சல்மான் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் பேசுவதன் மூலம் இஸ்ரேலுக்கு அழுத்தத்தை கொடுத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
ஆனால், உண்மை என்னவெனில் நெதன்யாஹூவின் அரசு மிக அழுத்தமாக சவுதி அரசிற்கு, மெட்டல் டிடெக்டர்களை அப்புறப்படுத்த முடியாதென்றும் சவுதி அதிகாரிகள் இஸ்ரேலுக்கு விஜயம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பற்றி பார்வையிடலாம் என்று பதில் தந்தது

இவை எல்லாம் ஒரு புறம் நடக்க மக்கள் தங்களின் போராட்டத்தை பின்வாங்காமல் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து போராட்டம் நடத்துகிறார்கள். கடந்த ஞாயிறு அன்று பெத்லஹமில் உள்ள Nativity Church ற்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆச்சார அரபு கிருஸ்தவ இளைஞர் குழுவின் பேச்சாளர் கூறுகையில் “இதோ இயேசு கிருஸ்து பிறந்த இடத்தில் நின்று நாங்கள் முழங்குகிறோம் நாங்கள் ஒரே சமுதாயமாக இருக்கிறோம், எங்கள் வரலாறு ஒரே வரலாறுதான் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த அக்கிரமத்தை எதிர்த்து ஒன்றாக போராடுவோம்” என்றார்.
போராட்டத்தின் உக்கிரத்தைக் கண்டு மெட்டல் டிடெக்டர்களை எடுத்துவிடுவோம் எனினும் அதிக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும் முயற்சிகளை எடுத்துவருவதாக புதிய செய்தி தகவல் கிடைக்கின்றது . இஸ்ரேலிய கேபினெட் கூறுகையில், 28 மில்லியன் டாலர்கள் இந்த சோதனை சாதனங்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் ஷேக் ராயீத் ஸலாஹ் கூறுகையில் ஜூலை 14 ஆம் திகதிக்குப் பிறகு பொருத்தப்படும் எந்த சோதனை சாதனங்களையும் நாங்கள் அறவே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தடாலடியாக பதில் தந்தார்.

உரத்த சிந்தனை
ஹைக்கல் சுலைமானியை கட்டுவதற்கு இஸ்ரேலியர்கள் சர்வதேசத் துணையுடன் திட்டமிட்டு செயல்படுத்துகின்றார்கள். ஆனால் அவர்களை எதிர்க்கும் பாலஸ்தீனியர்கள் திறந்த வெளி சிறையில் தனிமையில் உலக முஸ்லிம்கள் துணையின்றி போராடுவது எத்துணை கொடுமையான விடயம் ஆகும்.

பைத்துல் முகத்தஸ் என்பது பாலஸ்தீனியர்களுக்கான இடம் மட்டும் அல்ல . அது உலக முஸ்லிம்களின் சொத்துக்கள் ஆகும். அதில் அத்துணை பேருக்கும் உரிமை இருக்கின்றது.

அரபியில் ரிபாத் என்ற வார்த்தை போராட்ட பூமியாக பாலஸ்தீனை உருவாக்கப்படுத்துகின்றது. ஏனென்றால் முராபிதாத் என்ற என்ற பாலஸ்தீன வீர மங்கைகள் மஸ்ஜித் அல் அக்ஸாவை சுற்றி என்றும் முகாமிட்டு இருப்பார்கள். எப்பொழுதெல்லாம் இஸ்ரேலிய யூதப்படைகள் அல் அக்ஸாவை ஆக்கிரமிக்க பள்ளியின் உள்ளே வருவார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை வழிமறித்து போராடுவார்கள் என்பது உலகம் அறிய வேண்டிய ஆச்சரியமான உண்மை ஆகும். இதில் ஆண்களும் அடங்குவர்.
போருக்கு பெண்களும். குழந்தைகளும், வயதானவர்களும் விதிவிலக்கணவர்கள் என்று இஸ்லாம் தடை செய்த போதும் கூட தங்கள் உரிமையை, வாழ்வியல் நெறியை பாதுகாக்க உயிரை துச்சமென மதிக்கும் பாலஸ்தீன பெண்கள் வீதிக்கு இறங்கும் வேளையில், மனிதநேயமக்கள் மற்றும் நீதிக்கான சமூக ஆர்வலர்கள்
பாலஸ்தீன மக்களுக்காக களம் காண்பதும், குரல் கொடுப்பதும் காலத்தின் தேவை ஆகும்.

Temple Mount Faithful போன்ற யூத பயங்கரவாத அமைப்புக்கள் பாலஸ்தீனத்தில் ஹைக்குள் சுலைமானை கட்டத் துடிக்கின்றார்கள் என்றால் , இந்தியாவில் ராம ஜென்ம பூமி போன்ற அமைப்புகள் பாபர் மஸ்ஜிதைக் கட்டுவதற்கும் இந்திய முஸ்லிம்களை வேற அறுக்க நினைப்பதற்கும் திட்டமிடல் ஒன்றே என்பது ஏழாம் அறிவிற்கு எட்டிவிடும்.

தமிழகத்தில் நெல்லை ஏர்வாடியில் 90 வயது மூதாட்டி, தங்கள் பள்ளிவாசலும் பாங்கு கொடுக்கும் ஒலிப்பானை அதிகார வர்க்கம் அகற்றிய போது மோடி அரசை விமர்சித்தும், தங்களின் உரிமையை காக்க ஒரு ஆண்மகன் கூட இல்லையா என வெகுண்டு எழுந்தார்களாம் அந்த மூதாட்டிக்கு உண்டான ரோஷத்தை விட ஆயிரம் மடங்கு ரோஷத்தை இனி உணர்ந்தால் தான் இஸ்ரேலிய அரசையும், இந்தியக் காவி அரசையும் வரும் காலங்களில் சர்வதேச முஸ்லிம்கள் எதிர்த்து வெல்ல முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நன்றி -நவமணி  நாளிதழ் , இலங்கை.

அபூஷேக் முஹம்மத்

அபூஷேக் முஹம்மத்

error: Content is protected !!