Featured Category

கதிராமங்கலம் களத் தொகுப்பு!

ஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமம் வாயுக் கசிவினால் தீப்பற்றி எரிகிறது என்ற சேதி கேட்டு சமரசம் குழுமம் கதிராமங்கலம் நோக்கிப் பயணித்தது. சமரசம் குழுமத்துடன், வெல்ஃபேர் பார்ட்டியின் தஞ்சை மாவட்டத் தலைவர் ஷபீகுர் ரஹ்மான், செயலாளர் அப்துல் ரஹ்மான்,சிராஜுதீன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் வேல்முருகன் ஆகியோர் களம் நோக்கி விரைந்தனர்.

திருவிடைமருதூர் அருகிலுள்ள கதிராமங்கலத்தை நெருங்க நெருங்க காவல்துறையினர் நீக்கமற நிறைந்திருந்தார்கள். பத்து நாள்கள் தொடர்ந்த கடையடைப்பிற்குப் பின் அன்றுதான் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனாலும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அய்யனார் கோவிலில் ஒன்று கூடி அறவழிப் போராட்டத்தை ஊர்மக்கள் முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். ஊரே திரண்டு வந்து பொழுதன்றும் போராடினால் வயிற்றுக்கு என்ன செய்வது? மொத்தம் பத்து தெருக்கள் உள்ள சிறு கிராமம் அது. தெருவுக்கு நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் வீதம் எண்பது பேர் தினமும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள். மற்ற-வர்கள் அன்றாட கூலி வேலைக்குச் செல்கின்-றனர். ஒருபுறம் பணிகள் ஒருபுறம் போராட்டம் என திட்டமிட்டிருக்கின்றார்கள்.

அங்கேயே மொத்தமாய் பொங்கிச் சாப்பிடுகின்றார்கள். பிஞ்-சுக் குழந்தையையும் மரத்-தடியில் தொட்டில் கட்டித் தாலாட்டு-கின்-றார்-கள். தள்ளாத முதியவர்களும் போராட்-டக்-களத்தில் நிற்கின்றார்கள். எல்லாரிடமும் கோபம் கண-லாய்த் தெறிக்கிறது. ’ONஎஇ’யைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பாட்டி-கூட ‘ஓஎன்சீ’க்காரன் போவணும். அவன் போறவரைக்கும் நா வீடு போ மாட்டேன். யாரால உங்களுக்கு பதவி வந்திச்சி. நாங்க போட்ட ஓட்டு எங்கள  பாதுகாக்குறதுக்குத்தான தவிர எங்கள நசுக்றதுக்கு இல்ல.. எங்க மனசு கொதிக்குது. நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க’ என்று குமுறுகிறார். அவரை இடைமறித்த தாத்தா ‘எம்பேரு குட்டி. ஊரோட சனம் இங்க தண்ணிக்காக மாஞ்சிட்டிருக்கு. நீங்க என்ன பண்றீங்க? என்று சீறத் தொடங்கினார். எங்கள என்ன வேணும்னாலும் செய்ங்க… இனிம என்ன இருக்கு. இது எங்க மண் விட்டுத் தர-மாட்-டோம்’ என்கிறார்.
தொடக்கத்தில் தஞ்சை பகுதிகளில் மீத்தேன் திட்டத்திற்காகவும், எண்ணெய் எடுப்பதற்காகவும்Great Eastern Energy Corporation Limited (GEECL) நிறுவனம்தான் கால்பதித்தது. அங்கிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக அவர்கள் நடையைக் கட்டி-னார்கள். நிறுவனம் வெளியேற்றப்பட்டதற்கான கார-ணத்தை அரசு சொல்லும்போது, அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிடவில்லை அதனால் இரத்து செய்ததாகக் கூறினார்கள். சரி-யாகக் குறிப்பிட்டால் ‘வர்லாம் வர்லாம் வா’ என்-பது-தான் அதன் பொருள். ஆனால் அதே பணியை மேற்கொள்ள இந்திய பொதுப்-பணித்துறை நிறு-வன-மான எண்ணெய் மற்-றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Great Eastern Energy Corporation Limited (GEECL) கள-மிறங்-கியது. ‘மாப்பிள்ளை அவர்தான் சட்டை என்னு-டை-யது’ என்ற கதையில் இந்திய அரசு நிறுவனமாக இருந்-தாலும் இதன் பங்கு-கள் தனியார் கைவசமே உள்ளன.
காவிரி டெல்டா பகுதியின் பிரச்னை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. நம்மாழ்வார், ஜெய-ராமன் போன்ற சுற்றுச்சூழலியலாளர்கள் தொடர்ந்து போரா-டினர். ஒரு கட்டத்தில் இது மக்கள் போராட்ட-மாக மாறியது. நெடுவாசலில் ஏற்பட்ட விபத்-திற்-குப் பிறகு மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்-டம் பெரும் கவனக்குவிப்பைப் பெற்றாலும் ஒரு தீர்வை நோக்கி நகரவில்லை. இதனை பெரும் போராட்-டமாக உருவாக்கும் சக்தியை அந்த எளிய மக்கள் பெற்றிருக்கவில்லை. அவர்களைச் சரியான முறை-யில் வழி நடத்தும் தலைமையும் இல்லை.

கதிராமங்கலம் மக்களிடம் அங்கு உள்ள பிரச்னைகளைக் குறித்து கேட்டோம்.
கதிராமங்கலத்தில் என்னதான் நடக்கிறது?

1999 ஆம் ஆண்டு வாக்கில ONGC நிறுவனம் வட-நாட்டிலிருந்து ஆட்களைக் கொண்டு வந்து மண்-ணெண்ணெய் எடுக்கப்போறதா சொல்லிக்கிட்டு வந்-தாங்க. கேட்ட கேள்வியில்லாம நட்ட விவசாய நிலத்துல பெரிய பெரிய மிஷின்களைக் கொண்டுவந்து 10, 20 அடி அகலத்துல குழி தோண்டி ஒயர்லாம் போட்டு வெடியெல்லாம் வெடிச்சாங்க. நம்ம ஊருல மண்-ணெண்ண எடுத்தா நம்ம கதிராமங்கலமும் துபாய் மாதிரி மாறிடும்ணுதான் அவங்களுக்கு ஆடு, கோழி, காய்கறியெல்லாம் கொடுத்தோம்.

எந்தெந்த நிலத்துல மீத்தேன், ஹைட்ரோ கார்-பன் வாயு இருந்துச்சோ அவங்களை ONGCகாரங்க கூப்பிட்டு அவங்க நிலத்துக்கு விலை பேசி—யிருக்-காங்க. கால் காணி, அரைக்காணி நிலம் வச்-சி-ரு-க்–கவங்ககிட்டக்கூட நல்ல விலைக்கு கவுர்-மெண்டு தருதுண்ணு ஆசைய காட்டி வாங்கி-யிருக்-காங்க. தரமுடியாது இது எங்க விவசாய பூமின்னு பாரம்பரியம் பேசினவங்களை மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்காங்க. நாள்கள் ஓடிடுச்சு. இப்ப என்ன பிரச்னைன்னா நிலத்தடி நீர் குறைஞ்சிட்டே வருது. நாங்க திருப்பியும் போர் போட வேண்டிய சூழ்நிலை வந்திடுச்சு. அங்கிட்டும், இங்கிட்டும் இதுபத்தி பேசிட்–டிருந்தப்பதான் நெடுவாசல் பிரச்னை வந்ததும் எங்க வயித்துல அடிச்சிட்டாங்களேன்னு புரிஞ்சுது.இப்ப கொஞ்சகாலமா எண்ணெய் கலந்து வருது. தண்ணீ கெட்டுப்போயிடுச்சு. ONGCகாரங்க போட்ட குழாய் தரமில்லாம துருப்பிடிச்சு ஆயில் கசிய ஆரம்பிச்சிடுச்சு. ஜூன் 30 ஆம் தேதி ஸ்ரீராம் என்பவரின் விவசாய நிலத்துல குழாயிலிருந்து கச்சா எண்ணெய் பீச்சியடிச்சிடுச்சு.

(ஸ்ரீராம் நம்மிடம்
சொன்ன செய்திகளுக்கு பெட்டிச் செய்தி பார்க்க…)

அதுக்காக என்னன்னு கேட்ட எங்க கிராமத்து மக்களைத்தான் போலீஸ்காரங்க விரட்டி விரட்டி அடிச்ச-தோட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்-கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது செஞ்சிருக்காங்க.

‘வானத்துல கருமேகம் வட்டமிடுது. மழை-பெய்-றதுக்-கான எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனா மழை பெய்ய மாட்டேங்குது. ONஎஇ போட்ட குழாய்-களிலிருந்து துரப்பண வேலை பார்த்து வெப்பச்-சலனத்தை ஏற்படுத்தி மழைய பெய்ய விடாம பண்ணுறாங்க..’

மழை பெய்ய விடாம பண்றதுல அவங்-களுக்கு என்ன இலாபம்?
மழை பெஞ்சா நிலத்தடி நீர் மட்டம் உயரும். நீர் உயர்ந்தாலே வாயுவை எடுக்க முடியாது. விவ
சாய நிலம்ங்றதுனாலதான நாம கத்திட்டிருக்கோம். இங்க விவசாயம் செத்து பொட்டல் பூமியாச்சுன்னா.. அவங்க வேலை லேசாயிடும்..

மயிலாடுதுறை ஆசாத் பள்ளிக்கூடத்துக்கு பக்கத்-துல ரெண்டு வருஷத்துக்கு முந்தி குழாய்ல துரப்-பண வேலை செஞ்சிட்டு சரியா மூடாம போயிட்-டாங்க. நான்கு பள்ளி மாணவிங்க மயங்கி விழுந்து ஆஸ்பத்திரில சேர்த்தோம். அதுபோல உடல் முழுவதும் திடீர்னு தீப்பிடிச்சு இறந்தவங்க இந்தப் பகுதியில உண்டு. மரபு வழியில் செய்யாம நீரியல் விரி-சல் முறையில் (ஏதூஞீணூச்தடூடூடிஞி ஊணூச்ஞிtணூதணூடிணஞ் குதூண்tஞுட்) செய்-யப்-படுகிறது.

இந்த முறை பல்வேறு நாடுகளில் துரத்தி-யடிக்கப்பட்ட ஒரு முறை. குழாய் செங்குத்தா 2 கிலோ மீட்டர் கீழே போகும். தஞ்சை சமவெளிப் பகுதி-யின் குறுக்கு நெடுக்காக பல கிலோ மீட்டர் தூரத்-திற்குப் போகும். பூகம்பம், நில நடுக்கம் வரவும் வாய்ப்-பிருக்-கிறது. பொதுத்துறை நிறுவனம் நீர்ல எதும் கலக்-கலன்னு நிரூபிக்கணும்ல…!

பன்னாட்டு நிறுவனங்கள், பெருமுத-லாளிகள், ஆட்சி, அதிகார வர்க்கத்தை எதிர்த்து நீங்கள் வெல்ல முடியுமா?

எங்களுக்கு ஆயுதம் தாங்கும் வலிமை இல்லை. பொருளாதாரப் பின்புலம் இல்லை. எங்களுக்கு தெரிஞ்ச ஒன்னு இந்த விவசாயம். இந்த நிலத்தையும் பிடிங்கும்போது நாங்க என்ன பண்ண முடியும்?’ அய்யோ அடிக்-கிறாங்-கன்ணு கத்த முடியும் இல்ல… அதுதான் எங்க போராட்டம்.
கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்த நிறுவனத்தை வெளியேறு என்று சொல்வது சரியாகுமா?
அணு உலை அமைச்சிட்டோம். செயல்படுத்த விடமாட்டேங்கறாங்கன்னு சொல்றீங்கன்னு கூடங்-குளத்தில கேட்டப்ப அந்த மக்கள் சொன்னாங்க.  ‘விடிஞ்சா கல்யாணம். இரவுதான் மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ்னு தெரியுது; செலவழிச்சாச்சின்னு கல்-யாணம் செய்ய முடியுமா?’ அதேதான் நாங்களும் கேட்-கிறோம்.

தற்சார்பு பொருளாதாரத்தின் தந்தை  தேசி. குமரப்-பன் சொல்வாரு.. ‘நான் ஒரு திட்டத்தை அமுல்-படுத்தப் போறேன்னா அங்குள்ள விவசாயி கையத் தூக்கச் சொல்லி விலா எலும்பை எண்ணுவேன். அடுத்த வருசம் அந்த விலா எலும்பில் ஒரு எலும்-பாவது சதை கொண்டு மூடியிருந்தால்தான் அத்திட்-டம் வெற்றி என்று பொருள்.

வீடுவாசல விட்டுட்டு, ஆடுமாட விட்டுட்டு, பிள்ளைங்கள படிக்க அனுப்பாம.. சொந்த மண்ணுல அகதி மாதிரி நிக்கிறோம்.சோத்துக்கும், மண்ணுக்கும் போராடிட்டிருக்கோம். ONஎஇ இந்த மண்ணுல இருந்து போற வரைக்கும் நாங்க போராடுவோம். கைது பண்ணுன 10 பேர்ல ஒருத்தரோட மனைவிக்கு காதும் கேட்காது, வாய் பேசவும் முடியாது. அவங்-களுக்கு தல பிரசவம். ஒரு வாரமா சரியா சாப்-பிடாம மனநலம் பாதிக்கப்பட்டிருக்கா. பிரசவ வேதனை வந்தா கத்திக்கூடச் சொல்ல முடியாது. தன் கணவர் எப்போ வருவான்னு துடிச்சிட்டிருக்கா.. அந்தப் பொண்ணுக்கோ, வயித்தில இருக்கிற குழந்-தைக்கோ ஏதாவது ஆச்சுன்னா இங்க இருக்கற அதி-காரி-களும், மாநில அரசும், மத்திய அரசும்தான் கார-ணம். எல்லாத்துக்கும் நாங்க தயாராக இருக்கோம்.

நல்லா இருக்கற மண்ணை ஏன் இப்படி நாசம் பண்றீங்க…. ரெண்டு இலட்சம், மூணு இலட்சம் நஷ்ட ஈடு தந்து சரிக்கட்டலாம்னு மட்டும் நினைக்-காதீங்க… நாங்க பணங்காசுக்காக வந்து இங்க உட்-காரல.. உயிருக்கு விலை பேசுனா தஞ்சை ஜில்-லாவே கொதிச்சு எழும். எங்க மண்ண காக்க உக்-காந்-திருக்கோம்.

உங்களைக் கேட்டுத்தான் செய்தார்கள் இல்-லையா? 

எங்களுக்கு அப்பவெல்லாம் எதுவும் தெரியாது. நம்ம ஊர்ல மண்ணெண்ணெய் எடுக்கப் போறாங்க. கிராமத்துல எல்லாருக்கும் வேலை கிடைச்சிடும்னு சொன்னாங்க. நம்பினோம். ஏமாந்து நடுத்தெருவுல நிக்கிறோம்.

கருத்துக்கேட்புக் கூட்டம் முறையாக நடை-பெறவில்லை. அதில் போதிய விளக்கமும் இல்லை. திரு-வண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலை-யி-ல ஜிண்டால் நிறுவனம் இரும்பு எடுக்கக் கேட்ட-போது விழிப்பு உணர்வோட விரட்டி அடிச்சோம். இந்தப் பகுதியில மண்ணெண்ணைன்னு
சொல்லி மண்ணள்ளிப் போட்டுட்டாங்க. தஞ்சை சம–வெளி-யில பிளாஸ்டிக் குடங்களுடன் தண்-ணீருக்-காக அலைவோம். அதுவும் நம் காலத்தில் என்பது நாங்கள் கற்பனை செய்தும் பார்க்காத ஒன்று. கேன்சரால சாவுறது அரிதிலும் அரிதாகத்தான் இருப்-பாங்க. தெருவுக்கு ரெண்டு பேர் இப்ப
கேன்சரால சாவுறாங்க. தண்ணீ, காற்று எல்லாமே மாசுபட்டிருச்சு.மக்களை அழித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் செழிக்க பொதுத்துறை நிறுவனம் துணைபோவது வேடிக்கைக்குரியது.  முன்  திட்டத்தோடுதான் போராட்டம் வந்தால் தடுப்பதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையை வைப்பதற்காக அரசுத்துறை நிறுவனங்கள் எல்லாமே போலீஸ் ராணுவம் வந்து தங்குவதுபோல் தஞ்சை சமவெளி பகுதியில் கட்டமைத்திருக்கின்றார்கள்.

இத்திட்டத்தினால் பாதிப்பு இல்லை என்று ONஎஇ  தரப்பில் சொல்கிறார்களே…?

பாதிப்பு இல்லாமலா சார் நாங்க விவசாயத்த விட்-டுட்டு நடுத்தெருவுக்கு வந்திருக்கோம். எங்க மண்-ணோட நிலத்தடி நீர் எப்படி குறைஞ்சிருக்குன்னு விவசாயம் பண்ற எங்களுக்குத்தான் தெரியும். 6 மாசத்-துக்கு ஒருதடவை பத்து அடி இறக்குனாத்-தான் தண்ணி கிடைக்குது. அந்த அதிகாரிங்க காசு கொடுத்து பாட்டல் தண்ணி குடிப்பாங்க… அவங்க இந்-தத் தண்ணிய குடிப்பாங்களா… நாங்க என்ன பாடு படுறோம்னு வந்து பாருங்க.. எந்த அதிகாரியும் வந்து எட்டிப் பார்க்க-லேங்க… எங்க இரத்தமெல்லாம் கொதிக்கிது.

மக்களிடம் விடை பெற்று திரும்பினோம்.

இந்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். ஆனால் மீண்டும் தஞ்சை பூமியின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து இந்தக் குரல் மீண்டும் எழலாம். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும். இந்தப் பிரச்னை அரசியல்மயமாக வேண்டும். அரசியல் சார்ந்த பெரும் போராட்டமாக ஒரு புதிய திசையை நோக்கி இது நகர வேண்டும். பன்னாட்டு நிறுவங்களுக்கு சேவகம் செய்யும் மத்திய அரசு இருக்கும் வரை இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. இது மக்களுக்கான அரசு அல்ல. பன்னாட்டு, ஏகாதிபத்திய முதலாளி-களுக்-கான அரசு. இந்த அரசிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. எத்தகையை அடக்கு முறையை மேற்கொண்டும் இதனை அடக்-கத்-தான் அரசு முனைப்புக் காட்டுமே தவிர மக்கள் பிரச்னையை இப்-போது இருக்கும் அரசு தீர்த்து வைக்காது.

ஊடகங்களுக்கு இலாபம் இல்லாத எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள். கூவத்தூரில் தவம் கிடந்த ஊடகம் எது-வும் இந்த கிராமத்தில் இல்லை. இப்போது பிக்பாஸ் விவாத-மாகிக் கொண்டிருக்கின்றது. மக்கள் கவனத்தைச் சிதறடிக் கும் கட்டளைகளை ஊடகங்கள் மிகக் கச்சிதமாகச் செய்து கொண்–டிருக்-கின்றன. இது ஏதோ ஒரு கிராமத்தின் பிரச்னை போல சுருங்கிக் கிடக்கிறது. இது கதிராமங்கலத்தின் பிரச்னை அல்ல. இது நம் மண்ணின் பிரச்னை.

கதிராமங்கலத்திலிருந்து அறு-வடை-யாகும் நெல் எங்கு அரிசியாகி எங்கு சோறாகி எவர் வாயிலெல்லாம் படுகிறதோ அவர்கள் அத்தனை பேருக்கு-மான பிரச்னை. உணவு உண்ணும் ஒவ்வொருவரின் பிரச்னை. மெரினாவில் கூடிய மக்கள் திரள் இங்கு இல்லை. அது-போன்ற கவனக்குவிப்பு இதில் இல்லை. ஆனால் அதனைவிடவும் முக்கியத்துவப்படுத்த வேண்டிய பிரச்னை இதுதான். ஆனால் அரசு இத்தகைய போராட்டங்களை இரும்-புக் கரம் கொண்டு நசுக்குகிறது. வளர்மதி என்ற மாணவி துண்டுப்-பிரசுரம் கொடுத்ததற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்-பட்-டிரு-க்கின்றார். இது போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.

போராட்டத்தை முன்னெடுத்த அந்த மக்கள் ஜாமீனில் வெளி-வராத படி கைது செய்யப்பட்டுள்ளார்கள். 10 பேர் இன்னும் உள்ளே இருக்கின்றார்கள். இந்தப் போராட்டம் கைவிடப்படலாம். ஆனால் இந்தப் பிரச்னை முடிந்துபோய் விடுவதில்லை.
சன்னமாய் ஒலிக்கும் இந்த எளிய மக்களின் குரல்வளை நசுக்-கப்-படலாம். ஆனால் இந்த மக்களின் மனக்குமுறல் எத்தகைய சதிகார அரசையும் வீழ்த்திவிடும். இந்த எளிய மக்களின் போராட்டம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெல்லும். அது வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

முருகானந்தம் என்பவரின்  ரிப்போர்ட் 
கதிர் வேய்ந்த மங்கலம் கதிர் வேய்ந்த மங்கலம் என்பதுதான் மருவி கதிராமங்கலமாய் மாறிற்று.  விளைச்சல் அதிகமாகி கதிர் அடிச்சு மாள முடியாம  நெல்லோட உள்ள கதிரை எடுத்து கூரை வேய்ஞ்-சாங்க. அப்படிப்பட்ட நெற்கதிர் வேய்ந்த மங்கலத்தைத்தான் இன்னைக்கு பொட்டல் நிலமா மாத்தறதுக்கு வேலை நடந்திட்டிருக்கு. இத எதிர்த்து குரல்கொடுத்தா எங்கள அடிச்சி விரட்டி கைது பண்றாங்க. என் மண்ணை, நிலத்தை, நீரை, விவசாயத்தைக் காக்க போராட வேண்டிய கொடுமையான காலத்தை நெனச்சுக்கூட பாக்கலேங்க.. கதிராமங்கலம் இனிமே கதிர் இல்லாத மங்கலமாக மாறிடும்மோன்னு பயமா இருக்கு. அப்பவும் வருத்தம்தான் தெரிவிப்பீங்களா?

 

நாங்க கஷ்டத்துலதான் வாழ்ந்திட்டிருக்கோம். வறுமையிலதான் வாழ்ந்திட்டிருக்கோம். அத-னால எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. இன்-னிக்கு எங்களுக்கு ஏற்பட்டிருக்க பாதிப்பு
சாதா-ரணமானதல்ல. இந்தத் தண்ணியினாலதான் பாதிப்புன்னு எங்களால ஆதாரத்தோட சொல்ல முடியும். பெங்களூர் லேப் டெஸ்ட் வந்திருக்கு. இன்னொரு பையன் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் ஆஸ்பத்திரில இருக்கான். கோடியில ஒருத்த-ருக்கு வரக்கூடிய சதைச்சிதைவு நோயினால் பாதிக்-கப்பட்ட ஒரு பையன் எங்க ஊர்ல இருக்கான். அவனுக்கு வயசு 13. இந்தத் திட்டம் இங்க வந்து 17 வருஷம் ஆவுது. இந்தப் பையனுக்கு வந்த நோய் மரபணு சார்ந்த வியாதி. ஆனா அவங்களோட ஐந்து தலைமுறை வரை யாருக்கும் இந்த நோய் வந்தது இல்லை. இதனாலதான்னு இப்ப உணரமுடியுது. ஆனால் இதனாலன்னு தெரியாம ஐந்து குழந்தைங்க இறந்திருக்காங்க.
குழாய்களுக்கு வயசாயிடுச்சு. உலகத்தரத்துல குழாய் போட்டதாச் சொன்னாங்க. ஆனா அவங்க-தான் குழாய்கள் செரிச்சுப்போயிடுச்சுன்னு சமீபத்துல குழாயை மாத்தினாங்க. அதே காலத்துல போடப்பட்ட கிடப்பு குழாய்களும் அரிச்சுப்போய் எந்த நேரமும், எங்கு வேணும் னாலும் எண்ணெய்க் கசிவு ஏற்படலாம். இது ஒரு இடத்துல மட்டும் போகல. இங்கயும் போக-லாம், அங்கேயும் போகலாம். டீக்கடைக்கு கீழே போகிற குழாயில எண்ணெய் கசிஞ்சா தீப்-பிடுச்சு ஊரே பத்தி எரியற வாய்ப்பும் இருக்கு. நரி-வ-ழியில இதே மாதிரி பாதிக்கப்பட்டப்ப
சார் ஆட்சியர் வருத்தம் தெரிவிச்சாரு. இப்பவும் வருத்-தம் தெரிவிக்கிறார். ஊரே அழிஞ்சாலும் வருத்-தம் தெரிவிச்சிட்டே போயிட்டிருப்பார். ஸார் ONGC இந்த மண்ணிலிருந்து போயிடணும். அது ஒன்னுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு.

பத்து வருஷமா விவசாயம் பண்றேன். இந்த வருஷம் பயிர் கருகிப்போயிடுச்சு. முதல்ல பயிர் நல்லா கிளம்புச்சு அப்டியே கருகிடுச்சு. என் வயலுக்குள்ளாரயும் குழாய் போகுது. அதிலிருந்து எண்ணெய் கசியப்போய்தான் இந்தப் பகுதியில மட்டும் பாதிப்பு. வைக்கல்லாம் தீஞ்சு போயிடுச்சு. அந்தாண்ட நல்லாத்தான் இருக்கு. கதிராமங்கலத்திலேயே என் நிலத்துலதான் நெல் நல்லா விளையும். ஏக்கருக்கு இருபத்தஞ்சு களம் எடுப்பேன். இந்த வருஷம் ஐஞ்சு களம் கூட தேறல.. என்று கைவிரிக்கிறார் விவசாயி நடராஜன்

பதைபதைப்புடனேயே வாழ முடியுமா?
ஸ்ரீராம் என்பவரின்  ரிப்போர்ட் 

2004 ஆம் ஆண்டிலிருந்து போர்வெல் வேலை நடந்திட்டிருக்கு! கடைத்தெரு பக்கத்தில- ஒருபக்கம் பள்ளிகூடம் இருக்கு. ஒருபக்கம் காவேரி ஆறு இருக்கு. ஒருபக்கம் குளம் இருக்கு, ஒரு பக்கம் மக்கள் வாழற பகுதி இருக்கு. இந்த ஊரின் மையப்பகுதியில ONஎஇ பைப்லைன் இருக்கு. பராமரிப்புப் பணின்னு தளவாடங்களை இறக்கினாங்க. சும்மா முணுமுணுப்பு இருந்துச்சு. அய்யனார் கோவில்ல கூட்டம் போட்டோம். மாவட்ட நிர்வாகம் வந்தது. இப்போதைக்கு இந்த வேலையை நிப்-பாட்டி-டு-றோம். தளவாட சாமான எடுத்தர்றோம்னு சொன்னாங்க. இரண்டு நாள்ல பேரிகார்ட் வந்துச்சு . மக்களுக்கு அச்சம் இருந்துச்சு. திரவுபதி அம்மன் கோவில்ல உக்காந்து பேசினோம். சிலபேரை கைது செஞ்சாங்க. அவங்கள வெளிய விட்டுட்டாங்க. இது நடந்து 2 மாசம் இருக்கும்.

இப்ப கடந்த 30 ஆம் தேதி பைப்லைன் உடைஞ்சு ஆயில் வந்துச்சு. அதுக்கு முத நாள்தான் சப் கலக்டர் வந்து எதுவும் நடக்காதுண்ணு உறுதி தந்தார். கலக்டர கூப்டுவோம்னு கூடுனோம். காலையில 8 மணியிலிருந்து மாலை 5 வரை இருந்தோம். வீட்டில கறுப்புக் கொடி ஏத்தினோம். அதிகாரிங்க வந்தாங்க. யாரோ குப்பையை கொளுத்தி விட்டாங்க. ஆயில் காத்துல பரவிடும்னு முதல்லே சொன்னாங்க. அதனால் மக்கள் சிதறி ஓடினாங்க. போலீஸ் விரட்டியடிச்சுச்சு.
பைப் எந்த நேரம் வெடிக்கும்னு தெரியாது. டிராக்டர் போன்ற கனரக வாகனங்களை இயக்குகிறோம். கன்னிவெடிக்கு மேல நிக்கிற பதட்டத்துடன் இருக்கோம். இது வளமான பூமி. மழை இல்லாத காரணம் என்ன என்பதுதான் முக்கியம். சுற்றுச் சூழல் மாசு. ONஎஇ ஏற்படுத்துற மாசு. இங்கு ரீ சார்ஜ் வாட்டர் வரும். ஆனா இப்ப தண்ணீ குடிக்கிற நிலையில கூட இல்லீங்க. ONஎஇ வர்றதுக்கு முந்தி
பருவ மழை தப்பாது. எல்லா இடத்தையும் போல இங்க இல்ல. மழை வரல… ஏன் வரல? அத
யோசிக்கணும்.

கூரைவீடு, குடிசை வீடு இருக்கு, மாடு இருக்கு சோலார் பேனல் செய்றோம். மின்சாரம் நாங்க தர்றோம். கோபர் கேஸ் நாங்க மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கிறோம். நல்லாதான் எரியுது. அதிலிருந்து ஜெனரேட்டர் இயக்கலாம். ரீ சைக்கிள் சம நிலை ரொம்ப அவசியம். வயசான மாட்டை வெச்சி என்ன செய்றது? விவசாயிக்கு மாடு சுமையாச்சுன்னா என்ன செய்றது? இறைச்சிக்காக வித்தாத்தான் புதிய மாடு வாங்க முடியும். விக்க கூடாதுன்னா என்ன பண்றது? மாடுன்னா பாடுன்னு பேர். அவ்வளவு ஈஸியா பராமரிக்க முடியாது. அது மாட்டுக்கு செய்ற பெரிய கொடுமை.
ஒரு ஏக்கர் நிலம் என் நிலத்தில் குழாய் வெடிப்பு ஏற்பட்டுச்சு. கலக்டர்ட மணு கொடுத்தேன். 60 ஆயிரம்னு அறிவிச்சாரு. வாங்கப் போகல. 60 ஆயிரம் செக் அனுப்பியிருக்காங்க. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு…

 

V.S.முஹம்மத் அமீன்

நன்றி -சமரசம்

வி.எஸ். முஹம்மத் அமீன்

error: Content is protected !!