Featured Category

GST-நள்ளிரவில் தொடுக்கப்பட்ட போர்!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax – GST) ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடை-முறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது இந்திய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தவுள்ள மாற்-றங்-களையும் சீர்திருத்தங்களையும் கணக்கில் எடுத்துக்-கொள்ளும்போது, இந்தப் புதிய வரி விதிப்பு முறை இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த வரலாற்றுச்
சிறப்பு-மிக்க அந்த நேரத்தைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுவே மத்திய அரசின் வாதம்.

அதனால்தான் GST குறித்த அறிவிப்புப் பிரகட-னத்தை ஜூன் 30 அன்று நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

1947 ஆகஸ்ட் 14 அன்று ஜவஹர்லால் நேரு நள்-ளிர-வில் நடத்திய விடுதலைப் பிரகடன உரையை நினைவுகூரவே இந்த நேரம் தேர்வு செய்யப்படது. ஆனால், இந்த வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்க்-கட்சி-களுக்கு உணர்த்துவதில், ஆளுங்கட்சி தோல்வி-யடைந்து விட்டது. காங்கிரஸ், திரிணாமூல் காங்-கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணித்தன.
ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை என்பதுதான் எகுகூ முன்வைக்கின்ற முத்திரை முழக்கம். இனி

சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் பல்வேறு வகையான வரிகள் இருக்காது. இத்தனை காலம் நடைமுறையில் இருந்த உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி போன்ற முக்கிய 17 மறைமுக வரிகள் இத்துடன் இல்லாமல் ஆகிவிடும். அதற்கேற்ப 5%,12%, 18%. 28% என வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்-களுக்கு இடையேயான சோதனைச் சாவடி-களும் அகற்றப்பட்டு விட்டன.

கறுப்புப்பணத்தை தடை செய்து, வரி ஏய்ப்பை ஒழித்து, உண்மையாக வரி செலுத்துவோருக்கு நிம்மதி அளிப்பதற்காகவே இந்தப் புதிய வரி விதிப்பு முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தப் புதிய பிரகடனத்தின் மூலம் பொருளாதாரத் துறையில் பெரும் குழப்பங்களே நிலவுகின்றன. யானைச் சிலையைத் தொட்டுப் பார்த்து ஒவ்வொரு விதமாக விளக்கமளித்த பார்வையற்ற மனி-தர்க-ளைப் போல, இன்று வணிகர்களும் தணிக்கையாளர்களும் நுகர்வோர்களும், அரசும்கூட குழப்-பத்-தில்தான் உள்ளனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் போ-து-மான முன்தயாரிப்புகள் எதுவும் மேற்-கொள்-ளா-மல், அதிரடி-யாய், அடாவடித்தனமாய் நடை-முறைப்-படுத்-தப்-பட்-ட-தைப் போலவே, இதற்கும் தேவையான முன் தயாரிப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஒவ்-வொரு நாளும் பில்லியன் ரூபாய் கணக்கில் வணிகம் நடைபெறுகின்ற இந்தியாவின் சந்தையில், இதனால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.

GST நடைமுறைக்கு வந்த அடுத்த நாளே மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாய் அதிகரித்தது. குடிநீர் கேன்களின் விலை 5 ரூபாய் உயர்ந்துவிட்டது. நோட்டுப் புத்தகங்கள், சானிட்டரி நாப்கின்கள் மீது 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன்-படுத்தும் கருவிகள் உள்பட இதுவரை வரி விதிக்-கப்படாமல் இருந்த 509 பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 4% வரி விதிக்கப்பட்டிருந்த கிரைண்-டர்-களுக்கு 28% வரியும், பம்புகளுக்கு 18% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. சாயமேற்றுதல், தையல், காஜா எடுத்தல் முதலிய சில்லறை வேலைகளில் ஈடு-படும் கடைகளும் நிறுவனங்களும் வரிவிதிப்பு வரம்-பில் இல்லை. தற்போது இவற்றுக்கு 18% வரி விதிக்-கப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து வந்தவர்கள் கலால் வரி வரம்புக்குள் வரவேண்டும் என்றிருந்ததை மாற்றி, 20 இலட்சம் வர்த்தகம் செய்தாலேGST வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம் வரிச்சுமை ஏற்றப்-பட்டுள்ளது.

பெட்ரோல் விலையில் 57 விழுக்காடும், டீசல் விலை-யில் 55 விழுக்காடும் வரிகள் என்பதை மாற்ற-வில்லை. அடக்கவிலையைவிட அதிகமான வரி போட்டு உறிஞ்சுவது தொடர்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை ஏன் GST வரம்புக்குள் கொண்டுவரவில்லை என்ற கேள்விக்கு அரசு பதில் அளிக்கத் தயாராக இல்லை.

GSTயிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி நாடு முழுவதும் சிறு வணிகர்கள், ஜவுளித் துறையைச் சார்ந்த-வர்கள் சில நாள்களாகப் போராட்டத்தில் ஈடு-பட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற போராட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்களால் ஏற்கனவே முதுகெலும்பு முறிந்து கிடக்கின்ற விவசாயிகளும் இதன் மூலம் கவலையில் மூழ்கியுள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்று, கிராமப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் மற்-றொரு பேரிடியாக இது அமைந்து விடுமோ என ஐயம் கொள்வோரும் உள்ளனர். இந்த வரிச் சீர்-திருத்த நடவடிக்கையின் மிகப் பெரிய பலவீனம், இத-னால் பயன் பெறுபவர்கள் யார் என்பது எங்குமே தெளி-வாக்-கப்-படவில்லை என்பதாகும்.

சாதாரண மக்கள்தாம் இதன் மூலம் பயன-டை-வார்கள் எனில், எந்த அளவுக்கு அவர்களுக்குப் பயன் கிட்டும்? இதுவும் தெளிவாக்கப்படவில்லை. செல்-வந்-தர்களுக்கும் ஏழைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒரே வரி விதிப்பு முறை வருகின்றபோது, அது இந்தியாவில் ஏழைகளை எந்த வகையில் பாதிக்-கும் என்பதை இனி ஏற்படும் அனுபவங்களின் மூலமே அறிய வேண்டியுள்ளது.

5 முதல் 28 விழுக்காடு வரை ஐந்து நிலைகளில் வரி விதிக்கப்பட்டுள்ளது. என்னென்ன பொருள்-களுக்கு எவ்வளவு வரி என்பதை ஓர் உயர்நிலை அதி-காரிகள் குழு முடிவு செய்யும். அமைச்சர்கள் உள்பட கார்ப்பரேட் முதலாளிகளின் ‘அன்புக்குரியவர்கள்’ மட்-டுமே இக்குழுவில் இடம் பெறுவர் என்பதை யாரும் சொல்லத் தேவையில்லை. இக்குழு எடு-க் கும் முடிவுகள் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதக-மாக இல்லாமல் இருந்தால்தான் வியப்படைய வேண்-
டு-ம். இக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து வணி-கப் பெருமக்களும் சிறு, குறு வணிகர்களும் நீதி-மன்-றங்களை நாடத் தொடங்கினால், வரி சுமத்தும் நட-வடிக்கை பல்வேறு வகையான சட்டச் சிக்கல்களைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
158 நாடுகளில் ஒரே விதமான வரி விதிப்பு முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது யதார்த்த உண்மையாகும். அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து காணப்படுவதும் வெற்றிக்கு ஒரு காரணமாகும். மிக பயங்கரமான பொரு-ளாதாரச் சமத்துவமின்மை நிலைபெற்றுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், சாதாரண மக்களை இது எவ்வாறு பாதிக்கும் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேள்வி ஆகும். வரிச் சீர்திருத்த நடவடிக்-கைகளுக்குப் பின்னால் கார்ப்பரேட்டுகளின் திட்-டங்கள் உள்ளனவா என்பதையும் நாம் காண வேண்-டி-யுள்ளது.

ஜி.எஸ்.டி.யின் பெயரால் தமிழகத்தில் மக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர். வரி குறைக்கப்பட்-டுள்-ளதால் விலை குறையும் என அறிவிக்கப்பட்ட பொருள்-களின் விலை குறையவில்லை என்பது மட்டு-மல்ல, பல பொருள்களின் விலைகள் அதிகரித்-துள்-ளன.

சுங்கவரி, வாட், இதர வரிகள் அனைத்-தை-யும் கொண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த மொத்த விலை-யுடன் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து பலர் விற்பனை செய்கின்றனர். உணவகங்கள் ஜிஎஸ்டியின் பெயரால் தான்தோன்றித்தனமாக விலைகளை நிர்ண-யி-த்-துள்ளன.

உண்மையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரி-களைக் குறைத்தே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வரிகளைக் குறைக்காமல் மொத்த விலையின் மீது ஜிஎஸ்டியையும் சேர்த்து வ-சூ-லிக்-கப்-படுகிறது. சில துணிக்கடைகள் சலு-கையை வழங்-காதிருக்க, விலையின் ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி-யுள்ளன. வாகன நிறுத்தக் கட்டணமும் கார் வாடகை-யும்கூட அதிகரித்துள்ளன.

ஜிஎஸ்டியின் பெயரால் உற்பத்தியாளர்களும் விநி-யோகஸ்-தர்களும் வணிகர்களும் நுகர்வோரை கசக்கிப் பிழிவதைத் தடை செய்ய எந்த ஏற்பாடும் இல்லை. ஜிஎஸ்டி சட்டப்படி ‘ஆன்டி பிராஃபிட்டியரிங்’ கமிட்டிக்குத்தான் இதற்கான உரிமை உள்ளது. அந்தக் கமிட்டி இன்னும் அமைக்கப்படவில்லை. மாநில விற்பனை வரித் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், ஆவணங்கள் மூலம் புகார் அளித்-தால் ஏற்றுக்கொள்ளப்படும். அந்தக் கமிட்டி அமைக்கப்பட்டவுடன் அவற்றிடம் ஒப்படைக்-கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GSTயில் எல்லாச் சேவைகளுக்கும் வரி விதிக்-கப்-பட்டுள்ளதால் மக்களின் பணப்பை கிழிந்துவிட்டது. பெரும்பாலான சேவைகள் ஏற்கனவே உள்ள சேவை வரியான 15%லிருந்து GSTயின் மூலம் 18%க்கு உயர்ந்துள்ளது. இதனால் சேவை தொடர்பான பொருள்-களின் விலைகள் நிச்சயம் அதிகரிக்கும். GST நடைமுறைப்படுத்தப்பட்ட இடங்களில் விலை-யேற்றம் ஏற்பட்டுள்ளது.

விலை குறையும் என அறிவிக்கப்பட்ட பல பொருள்களின் விலை அதிகரித்துள்ளன. ஏ.சி உணவகங்களில் 18 விழுக்காடு வரி விதிக்கப்-பட்-டுள்-ளது. 75 இலட்சம் வரை வரவு செலவு கொண்ட ஏ.சி இல்லாத உணவகங்களுக்கு ஐந்து விழுக்காடு வரி. ஏற்கனவே செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த மத்திய, மாநில அரசுகளின் வரிகள் குறைந்தது போக உள்ள தொகையும், இன்புட் கிரடிட்டும் கழித்-தால் வருகின்ற தொகைக்குத்தான் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும்.

ஆனால் முழுத் தொகைக்கும் ஜிஎஸ்டி விதிக்கின்றனர் உணவக உரிமையாளர்கள். உண-வகப் பொருள்களுக்கு அதிகபட்ச விற்பனை விலை (MRP) இல்லாதது, இவர்களுக்கு எளிதாக உணவு விலையை அதிகரிக்க உதவியாய் இருக்கிறது. பேக்கரி பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளன. ஒரு சமோசாவுக்குக் கூட இரண்டு ரூபாய் அதி-கரித்-துள்ளது.இரயில்வே காண்டீன்களில் விற்பனை செய்-யப்-படும் உணவுப் பொருள்களின் விலையும் அதி-கரித்-துள்-ளன. அதுமட்டுமல்ல, இப்போது நடுத்-தர உண-வகங்-களில்-கூட ஏ.சி பொருத்தப்பட்டு வரு-கின்றன.

செல்போன் நிறுவனங்கள் தாங்கள் வழங்கி வந்த சலுகைகளைப் பறித்துக் கொண்டுள்ளன. 110 ரூபாய்க்கு முழு டாக்டைம் கொடுத்த செல்போன் நிறு-வனங்கள் 10 ரூபாயை அபேஸ் செய்து 100 ரூபாய் ஆக்கி விட்டன. 143 ரூபாய்க்கு 7 எஆ நெட் வழங்-கிய செல்போன் நிறுவனங்கள் அதற்கு 20 ரூபாய் அதிகப்படுத்தி 163 ஆக விலையை உயர்த்தி விட்-டார்கள். 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இதுவரை 7.50 கொடுக்கப்பட்ட டாக்டைம் இனி 6 ரூபாயாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 ரூபாய் மதிப்பில் விற்கப்படும் பேனாக்கள் 50 கொண்ட பார்சலுக்கு 10 பேனாக்களை இலவசமாக வழங்கிய நிறுவனங்கள் இப்போது அந்த 10 இலவச பேனாக்களை நிறுத்தி விட்டன.ஊறுகாய் பொட்டலத்தின் உற்பத்திச் செலவு 50 பைசா. அது ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சாதா-ரண பொட்டல ஊறுகாயை உற்பத்தி செய்வது
சாமானிய குடிசைவாழ் மக்களே!

ஆனால் அவர்-களுக்கு 18% வரி என்பது அநீதியானது. கடலை மிட்-டாய், தேன் மிட்டாய், சிறு கேக், மிக்சர் என ஏழைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு GST அபாய மணி அடிக்கிறது.

தீப்பெட்டிக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்-தியத் தீப்பெட்டி இனி 2 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் தீப்பெட்டி 1 ரூபாய்க்கு விற்கப்படலாம்.

கார், ஏசி, ராயல் என்ஃபீல்டு பைக், டிவிஎஸ் பைக், பீட்சா போன்ற பொருள்களுக்கு 5% வரி விதிக்-கப்-பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு புல்லட்டும், டிவிஎஸ் கம்பெனியும் முன்கூட்டியே 5 ஆயிரம் வரை விலைக்குறைப்பு செய்து விட்டது குறிப்பிடத் தக்கது.

எகுகூ வரி விதிப்பை நடைமுறைப்படுத்த பாஜக ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. ஏற்கனவே வேகமாக வள-ரும் நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா
நீக்-க-ப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி விகிதம் வீழ்ச்சி-யடைந்துள்ளது. GST மூலம் மாநிலத்துக்கு வரிப் பங்காக இலட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன.

GST தொடர்பான சட்டம் மாநிலங்களின் வரி நிர்ணய உரிமைகளை முழுவதுமாகப் பறித்து, GST கவுன்சிலிடம் ஒப்படைத்துள்ளது. இந்தக் குழு எடுக்கும் முடிவுகளை நாடாளுமன்றத்தில் விவா-திக்-கவும், இறுதி முடிவுக்கு உட்படுத்தவும் வழியில்லாமல் செய்திருப்பது, சட்டப்பேரவைகளையும், நாடாளு-மன்-றத்-தையும் பலவீனப்படுத்தும் ஜனநாயக விரோத-த் தன்மையாகும். ஊழல் நிறைந்த அதிகார வர்க்க–த்தால் GST முறையை எந்த அளவுக்கு நன்மை தரும் விதத்தில் கொண்டு செல்ல முடியும் என்ற கேள்விக்கு, இனி காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் பிரதமர் நேரு ஆற்றிய உரை இந்திய விடுதலைப் பிரகடனமாக அமைந்தது. இன்றைய பிரதமர் மோடியின் நள்ளிரவு உரை, சாமானிய மக்கள் மீது நள்ளிரவில் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே அமைந்துள்ளது.

ஏ .ஆர். செய்யத் சுல்தான்

செய்யத் சுல்தான்

error: Content is protected !!