Featured Category

மோடியின் இஸ்ரேல் பயணம் – ஆபத்தின் அடுத்த கட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பய-ணம் மேற்-கொண்டு வருகிறார். அத்த-கைய பயணங்களில் முக்-கியப் பயணமாக இஸ்ரேல் நாட்-டின் பயணம் கவனத்தைப் பெ-று–கின்-றது. ஏனென்றால் இந்தியா இஸ்-ரேல் உறவுகளில் இது மிக முக்-கிய-மான கட்டம் ஆகும். இதனை ஆரம்ப கட்டங்களில் இருந்து பார்க்-கும் போது பாசிச, சியோனிச அரசியலின் நரிமுகம் நாட்டு மக்களுக்கு வெளிச்சமாகும்.
இஸ்ரேல் – இந்திய நேசத்தின் ஆரம்பக்கட்டம்

பாலஸ்தீன் நாட்டின் மீது இந்திய உறவு என்பது ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் அரபுநாடுகளில் ஒன்-றான பலஸ்தீன மண்ணை அபகரித்து உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல் ஆகும். அந்தக் காலகட்டத்தில், யூதர்களுக்கென்று மதரீதியாக ஒரு நாடு உ-ரு-வாக்-கப்-பட்டதை கொள்கை அடிப்படையில் பகிரங்கமாக இந்தியா எதிர்த்தது என்பது வரலாறு.

இந்தியாவின் தேசத்தந்தை காந்தியடிகளும் மத ரீதியாக இஸ்ரேல் நாடு உருவாக்-கப்-பட்டதை எதிர்த்தார். யூதர்கள் மீது நெருங்கிய நட்புறவு கொண்ட அவர், இதனை எதிர்க்க முதல் காரணம், பாகிஸ்தான் அன்றைய காலங்களில் மத ரீதியாக பிரிக்கப்பட்டதே ஆகும். அடுத்து இந்தியா, பாகிஸ்தான் என்ற நாடுகள் பிரிந்தும் தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்னை ஆகும். காஷ்மீர் பிரச்னையால் இரண்டுநாடுகளுக்கு இடையிலும் முறுகல் நிலை தோன்றி பேச்சுவார்த்தைக்கு ஐ நா சபை சென்றனர்.

காஷ்மீர் பகுதி முஸ்லிம்கள் வாழும் பகுதி என்பதாலும், இதில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாலும், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தால், முழு அரபுலகமும் காஷ்-மீ-ர் விவகாரத்திற்கு பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவைத் தரலாம் என அரசியல் நிபுணர்கள் கருதிய-தால் இஸ்ரேலுக்கு ஆதரவு ஆரம்பத்தில் தெரிவிக்க வில்லை.
இந்தியத் தலைவர்கள் பலரும் தனிப்பட்ட ரீதியில் இஸ்ரேல் என்ற நாடு அபகரித்து உரு-வாக்-கப்-படும் சூழ்ச்சியை விரும்பினர். குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள் மற்றும் அதன் சித்தாந்த ரீதி-யாக தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் இதனை விரும்பினர். இதன் வெளிப்பாடாகவே 1950 ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் இஸ்ரேல் நாட்டின் துணை தூதரகம் அமைத்திட இந்தியா ஒப்புக்-கொண்-டது.

அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு 1954 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கம் ஒரு சர்வதேச விதிமீறல் என்ற சட்ட முன்வடிவை ஒருகட்சி என்ற ரீதியில் ஆதரிக்க மாட்டோம்’ என்று பகிரங்கமாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கை தெளிவாக வடிவமைக்கப்பட வேண்டும் என்ற வாதத்தின் அடிப்படையில் முதலாளித்துவ வல்லரசு சாராத சுதந்திரமான அணிசேரா கொள்கை உருவாக்கப்பட்டது.
கட்சியிலும், இந்திய அளவிலும் ஏற்பட்ட நெருக்கு-தல் காரணமாக பாலஸ்தீன நாட்டின்
உரிமைப்-போராட்டத்திற்கு இந்தியா பகிரங்க ஆதரவு தெரிவித்-தாலும், இஸ்ரேல் ஆட்சியாளர்களுடன் மறை-முகத் தொடர்பு- வைத்து இருந்தனர். பாசிச இந்துத்-துவ சக்திகள் பகிரங்கமாக தொடர்பு வைத்து இருந்தனர்.

உறவுகளை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர்கள்

1969 ஆம் ஆண்டில் அன்றைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தி “ரா” என்ற உளவு அமைப்பை உரு-வாக்-கினார். மேஷ்வர் நாத்காவோ என்ற அதிகாரியை அதற்குத் தலைவராக நியமித்து இஸ்ரேல் நாட்டின் மொசாத் உளவு அமைப்புடன் இரகசிய உறவுகளைப் பேணுவதற்கு உத்தரவிட்டார் என்பது வரலாறு.

1977 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் மோசே தயான், அன்-றைய வெளியுறவுத்துறை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பேயியை சந்தித்துச் சென்றார் என்பதும் இவர்கள் உறவிற்குச் சான்று ஆகும்.

1986 ஆம் ஆண்டுகளில் Oஐஇ என்ற இஸ்லாமிய கூட்ட-மைப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கை அடிப்-படையில் இந்திய அரசைக் கண்டித்து ஒரு கடிதம் எழுதியது. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய அரசு, இது பாகிஸ்தான் சுமத்தும் குற்றச்
சாட்டு என்று சப்பைக் கட்டியது. இதனைத் தொடர்ந்து இந்தியா, மத்தியக்கிழக்கு மீது தனது பார்வையை அதி தீவிரமாக மாற்றியது.

பாதை திறந்த சோவியத் யூனியனின் வீழ்ச்சி

இந்திய அரசு ஆரம்பக்கட்டத்தில், தனது இராணுவத்-திற்குத் தேவையான ஆயுதங்களை ரஷ்ய அரசிட-மிருந்து பெற்றுவந்தது. இந்திய முப்படைகளின் 70 சதவிகித ஆயுதங்கள் ரஷ்ய தயாரிப்புகளே ஆகும். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பிறகு, அதன் உற்பத்தி, விற்பனை தேங்கியது. மேலும் ரஷ்யா இந்தியாவை விட சீனா, பாகிஸ்தான் நாட்-டிற்-கும் அதிகளவில் ஏற்றுமதி செய்துவந்தது.

இதனால் ரஷ்யாவை விட நவீன ரக ஆயுதம் உற்பத்தி செய்யும் நாட்டின் தேவை இந்தியாவிற்கு ஏற்-ப-ட்டது. ரஷ்யாவுடனான நட்பால் அமெரிக்கா மீதான உறவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேற்-கத்திய நாடுகளும் ஆயுதம் வழங்குவதற்கு முன்வரவில்லை. அமெரிக்காவின் தயவால் இஸ்ரேல் மீது இந்தியாவின் கவனம் திரும்பியது.

இஸ்ரேலுடன் இரகசிய உறவு வைத்து இருக்கும் இந்திய அரசிற்கு இது பகிரங்கமாக நட்பை தொடரு-வதற்குச் சரியான வாய்ப்பாக அமைந்தது.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா-வின் ஆதரவு கிடைப்பதன் மூலம் சர்வதேச அங்கீ-காரத்தை இஸ்ரேல் பெற முடியும்.
அதன் பிறகு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் காரணமாக இந்தியாவிற்கு இராணுவத் தளவாடங்கள் விற்பதில் இஸ்ரேல் உலகின் முதன்மை நாடாக இருக்-கின்றது.

இஸ்ரேல் இந்திய உறவின் முக்கிய கட்டம்

1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் முதல் இஸ்-ரேல் தூதரகம் ஏற்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் மே மாதம் இந்திய தூதரகம் இஸ்ரேலில் உரு-வாக்-கப்-பட்டது. இவர்களின் உறவிற்கு மிக முக்கிய கட்டங்கள் ஆகும். இதன் பிறகுதான் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ள-வேண்டி-யவை ஆகும்.

1997 ஆம் ஆண்டில் இஸ்ரேல் பிரதமர் ஐஸர் வொய்ஸ்-மென் இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வருகை தந்தார். முதன்முறையாக ஆயுத ஒப்பந்தங்கள் போடப்பட்டு பராக்- 1 போன்ற ஏவுகணை வாங்கப்-பட்-டது. இதனால் பாகிஸ்தான் மேலும் வலிமையான ஏவுகணைகளை அமெரிக்காவிடம் வாங்கியது.

அதன் எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு அணு ஆயுத விஞ்ஞானி அப்துல் கலாம் இஸ்ரேலின் அடுத்த கட்ட தொழில்நுட்பத்தை அறிய இஸ்-ரேலுக்கு அடிக்கடி பயணம் செய்தார். அதன் பிறகே பிருத்வி, அக்னி ஏவுகணைகளை வெற்றி-கரமாக சோதனை யிட்டது என்பது வரலாற்றுக் குறிப்புகளாகும்.

1997 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஆளில்லா உளவு விமானங்கள் வாங்கப்பட்டன. மேலும் ராடார் போன்ற கருவிகள் வாங்கப்பட்டன. இதன் அடிபப்டையில் பாகிஸ்தான், சீனா எல்லை-களை 400 கி.மீ வரை துல்லியமாக அறிய முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால், இஸ்ரேல்

மொசாத் உடன், இந்திய ‘ரா’ உளவு அமைப்பு தொடர்-பைப் போலவே, பாகிஸ்தான் நாட்டின் ‘ஐ.எஸ்.ஐ’ மொசாத் உடன் கூட்டணி வைத்துள்ளது என்பதும் வியப்பு ஆகும்.

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது சரக்கு கப்பல் மற்றும் கடல் போக்குவரத்தை கட்ட-மைக்க இந்திய கடற்படையுடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்தியப்-பெருங்-கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும்நீர் மூழ்கிக்கப்பல் மூலம் ஏவுகணை சோதனைகளை இஸ்ரேல் அரசு செய்து வருகின்றது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உடன் இஸ்ரேல் நெருங்கிய தொடர்பு வைத்-துள்-ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில் ஜனவரி 22 ஆம் நாள் இந்தியாவில் இருந்து இஸ்ரேல் கூஉஇகுஅகீ என்ற உளவு சாட்டிலைட்டை ஏவியது. மும்பையில் நடந்த பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து கீஐகுஅகூ – 2 அதிநவீன சாட்டிலைட்டை இந்தியா ஏவியது.

இந்துமயமாக்கும் மோடியின் இஸ்ரேல் பயணம்

சியோனிச இந்துத்வா உறவின் 70 ஆண்டு கால காத்திருப்பின் முடிவாக மோடியின் பயணம் இருக்-கின்றது. இஸ்ரேலின் பெங்குரியன் விமான நிலை-யத்-தில் மோடி வந்திறங் கிய தரு-ணம் அவரை வர-வேற்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்-யாஹூ, இஸ்-÷-ரலின் உயர்-மட்ட அணியும் அதில் உள்ள மதத்-தலைவர்களும், சில முஸ்லீம் உட்பிரிவின் தலை-வர்–களும் காத்து இருந்தது வியப்பை உண்-டா-க்கியது.

பொதுவாக இதுபோன்ற ஒரு வரவேற்பு இஸ்-ரேல் நாட்டில் போப்புகளுக்கும், அமெரிக்க ஜனாதி-பதி-களுக்கும் மட்டும்தான் வழங்கப்படும். இப்படிப்-பட்ட ஒரு வரவேற்பு மோடிக்கு வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியம் ஆகும். ‘மோடியின் இஸ்ரேலிய வருகை முன் உதாரணம் இல்லாத வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று இந்தியாவின் இஸ்ரேலிய தூதர் டேனியல் காரோன் கூட இதனை வர்ணிக்கின்றார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிரச்-னைகளில் இந்தியாவின் பாரம்பரியமான நடுநிலைப் பாட்டை அறிந்திருந்தும் மோடி இஸ்ரேலுக்கு பய-ணம் மேற்கொண்டார் என்பது அனைவரின் கோபத்-தை-யும் பெற்றுத் தந்தாலும், உண்மையில் மோடியின் இஸ்ரேலிய பயணமானது இது முதல் முறையல்ல.

குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது 2006 ஆம் ஆண்டில் ஒரு முறை இஸ்ரேலுக்கு சென்-றுள்-ளார். மேலும் அங்கு சென்று டெல் அவி-வில் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஒரு தலைமை-யிடத்-தையும் அடித்தளமிட்டார். 2014 ஆம் ஆண்டின் தேர்தலுக்குப் பின் பாரதப்பிரதமர் மோடியை அனை-வரும் இஸ்ரேலின் நெருங்கிய நண்பர் என்றுதான் அழைக்கத் தொடங்கினர்.

மோடி மூன்று நாள் இஸ்ரேலியப் பயணத்தின் போது இஸ்ரேலிய பிரமர் நெதன்யாஹூவுடன் பல்–வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். அவை அனைத்-தும் திட்டமிடப்பட்டவை ஆகும். இஸ்ரேல் இந்தியா-விற்கு இடையே நாட்டின் வளர்ச்சி, தொழில் நுட்பம், விண்வெளி சம்பந்தமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெ-ழுத்-தாகி இருக்கின்றன. மோடியின் இஸ்ரேலிய பயணத்-தில் ரமல்லாவிற்கு செல்-வது அவரது பய-ணத் திட்டத்தில் இல்லை. ஆனால் சியோனிசக் கொள்-கை-யின் தந்தை என அழைக்-கப்-படும் தியோடர் ஹெர்சலின் கல்லறையை தரிசிக்கச் சென்றார். இது மோடி அரசின் இரட்டைத் தன்மையைக் காட்டுகின்றது.

வர்த்தக பயன்பாடு

இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட மற்ற நாட்டு பிரதமர்களுக்கு வழங்காத கவனிப்புகளும் உப-சரிப்பு-களும் நம் நாட்டு பிரதமருக்கு மட்டும் ஏன் வழங்க வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி எழாமல் இல்லை.மோடியின் வருகைக்காகவே இஸ்ரேலிய அரசு 79.6 மில்லியன் பட்ஜெட் உட்பட 23 பக்க ஆவ-ணத்தை உருவாக்கி அங்கீகரித்துள்ளது. இது இந்திய அரசின் சமூக பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதன்படி மோடி அங்கே செல்லவில்லை. இஸ்ரேல் தான் மோடியை வரவைத்துள்ளது.
இஸ்ரேலைப் பொருத்தவரை, இந்தியா 1.3 பில்லி-யன் மக்கள் தொகை கொண்ட மிகச் சிறந்த வியா-பாரச் சந்தை ஆகும். இந்த வியாபாரச் சந்தையில் இஸ்ரேலிய பண முதலைகள் பெரும் பங்கை அடைய முயல்கின்றனர். இஸ்ரேல் நீண்ட காலமாக பிர-தான-மான துறையில் இந்தியாவின் வியாபாரச் சந்தையை முழுமையாக அடைய முயற்சி செய்து வருகின்றது.
கடந்த ஆண்டு இந்தியாவிற்கான இஸ்ரேலின் ஏற்றுமதியின் அளவு 1.1 பில்லியன் டாலர். ஆனால் இஸ்ரேலுக்கான இந்தியாவின் ஏற்றுமதியின் அளவு வெறும் 17 மில்லியன் டாலர் என்பதில் இஸ்ரேலின் வர்த்தகத்தில் இந்திய அரசின் ஆதரவு எந்த அளவு இருக்கின்றது என்பதை உணர முடியும்.
விவசாய, இராணுவ ஏவுகணை ஒப்பந்தம்

வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி ஒப்பந்தங்களைத் தவிர இஸ்ரேல் அதன் ஏவுகணை பாதுகாப்பு முறை-களை விற்பனை செய்ததன் மூலம் 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்-பந்-தம் செய்துள்ளது.

ஏற்கனவே மோடியின் இஸ்ரேலிய பயணத்திற்கு முன்பாகவே 250 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தத்தை இந்தியாவுடன் இஸ்ரேல் நிறை-வேற்றியது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆயுத விநியோகிப்பாளராக ரஷ்யாவிற்கு பிறகு இராணுவ இயந்திரங்களுக்காக 250 பில்லியன் டாலர் வரவு செலவு திட்டத்தை நவீனமயமாக்கும் பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுள்ளது .

மேலும் கங்கை நதியை சுத்தம் செய்தல், நீர் சுத்திகரிப்பு, சொட்டு நீர் பாசன உபகரணங்களை வழங்குதல், விவசாயத்திற்கான தொழில் நுட்-பத்தை வழங்குதல் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி முன்னுரிமை அளித்துள்ளார். இந்தியாவில் வேளாண்மை நுட்பம் சார்ந்து அறிந்து-கொள்ள இந்தியா-வின் விவசாயிகள் மோடி அரசில் அவ்-வப்-போது இஸ்-ரேல் பயணம் மேற்-கொள்-கிறார்கள்.

மோடி பயணம் குறித்து மஹ்மூத் அப்பாஸ் அரசின் பார்வை

2014 ஆம் ஆண்டு மோடி தனது புதிய பதவிக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது இந்திய அரசு ஐ.நா வில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது. ஆனால் ஓர் ஆண்டிற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டில் காஸாவில் போர்க்குற்றங்களை மேற்கொண்டதற்காக ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட தீர்மானம் குறித்து டெல் அவிவுக்கு எதிராக வாக்-களிக்-காத ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது ஆகும்.

இன்னொரு புறம் மஹ்மூத் அப்பாஸின் பாலஸ்-தீன அரசு, மோடியின் இஸ்ரேலிய பயணத்தை சம நிலையான ஒரு பார்வையால் பார்க்கின்றது.இந்தியா-வின் பாலஸ்தீன தூதர் அட்னன் அபூ அல்ஹைஜாவின் கூற்றுப்படி “பாலஸ்தீனத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு தொடர்ந்து மாறா-மல், இஸ்ரேலிய இந்திய உறவுகளை விட ஆழமாக வேரூன்றி உள்ளது” எனக் கூறுகிறார்.

இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அந்தந்த நாட்-டின் அதிகாரிகள் பல முறை சந்தித்து பேசி வரு–கின்-றனர். சமீபத்தில் கூட பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இரு தரப்பும் மகிழ்ச்சியான முடிவுகளையே வெளி-யி–ட்-டனர். மேலும் பாலஸ்தீனின் தனி நாடு கோரிக்-கைக்கு இந்தியாவின் வலுவான ஆதரவு உண்டு என்றும் இந்திய தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் மோடியின் இஸ்ரேலிய பயணம் இந்திய முஸ்லிம்களிடத்தில் வெறுப்பை ஏற்-படுத்தி-யுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான உவைஸி கூறுகையில் ‘இஸ்ரேலுக்கு நரேந்திர மோடி சென்றால் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துக் கொள்-வார்’ என்றார்.

ஆபத்தின் அடுத்த கட்டம்

மோடியின் இஸ்ரேலியப் பயணத்தின் பிரதான காரணம், மோடியின் தேசியவாத பார்வை, இந்தியா-வின் பாதுகாப்புக் கொள்கைக்கான எதிர்காலப் பார்வை ஆகும்.

மோடி இந்து தேசியவாதியாகவும், சுதந்திரச் சந்தை பொருளாதாரத்தின் ஆதரவாளராகவும் அறியப்-பட்-டவர். இந்தியாவின் உலகளாவிய வடிவமைப்பு, உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றியமைக்கும் நோக்கத்தில் மோடி அறிமுகப்படுத்திய ‘Mஅஓஉ ஐN
ஐNஈஐஅ‘ திட்டம் சுதந்திர பொருளாதாரத்தை உருவாக்-கக் கூடியது.

மேலும் இது உலகெங்கிலும் உள்ள வணிகத் தலைவர்களையும், கூட்டாளிகளையும் இலக்காகக் கொண்டது. இந்த திட்டத்தில் இருந்து மிகப்பெரிய பங்கை இஸ்ரேல் பெற விரும்புகிறது. இத்தகைய திட்-டமே 2014 – 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்ததற்கு காரணம்.

அதே போல மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வியை வெளிக்கொண்டு வர காங்-கிரஸ் தலைமையிலான ஒரு அணி தயாராகிக் கொண்-டிருக்கிறது. மோடி இந்த சவால்களை ஒரு வலிமையான இராணுவத்தைக் கொண்டு முறியடிக்-கத் திட்டம் தீட்டியுள்ளார். அந்தத் திட்டம் இஸ்-ரேலிய பாதுகாப்புடன் நடக்கப் போகிறது.

பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்னையில் இஸ்ரேல் ஒரு சமநிலைப் போக்கினை கையாளும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகின்றது. ஆனால் அங்கு பாலஸ்-தீனத்தின் நிலப்பகுதியில் உள்ள துயரத்தின் உச்சம் காணப்படுகின்றது. இஸ்ரேல் கடுமையாக பாலஸ்-தீனத்தை மறைமுகமாக சாடுகின்றது. ஆனா-லும் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்குமான உறவு வலு-வா-கின்றது. இது எவ்வளவு பெரிய முரண்.

70 ஆண்டு கால மறைமுக, பகிரங்க இந்திய இஸ்-ரேல் உறவில் இந்தியா தனது இந்துத்துவ அரசை விரி-வாக்கும் முயற்சியில் கொள்கை, ராணுவம், வர்த்த-கம், அரசியல், சந்தையிடல் என்று அத்துணை பெரும்-பான்மை இடத்தைத் தக்க வைத்து விட்டது.

இனி இந்திய மக்கள் இஸ்ரேலிய பொருள்களின் நுகர்வு அடிமைகளாக மாறுவர். கொள்கை ரீதியாக எதிர்ப்பவரை இராணுவ ரீதியாக எதிர்க்கும் சூழல் உருவாகும்.
கனிம வளங்கள் போன்ற அதி முக்கிய இயற்கை வளங்கள் கார்ப்பரேட் நிறு-வனங்-களால் சுரண்டப்பட்டு போராடும் வேளையில், விவசாயம், நீர்ப்பாசனம் போன்றவற்றை இஸ்ரேலிய அரசு முழுமையாக மோடி அரசால் கபளீகரம் செய்யும்.

மோடியின் இஸ்-ரேலிய பயணம் இந்தியாவின் கொள்கையை இஸ்-ரேலுக்கு சாதகமாக மாற்ற முற்படு-வது தெளிவாகத் தெரிகிறது.மிகச் சாதுர்யமாக பாசிச, சியோனிச அரசியல் நகர்வு இருந்தாலும், இவற்றை செயற்கையாக உடனடி-யாக செயல்படுத்த முடியாது. ஒவ்வொரு இலக்கை அடைவதற்கும் ஒவ்வொரு காலங்கள் உண்டு. மக்கள் பார்வையில் அவர்களின் நம்புதலுக்கு தகுந்-தாற் போல நடத்துவது அரசியல் சூட்சமம் ஆகும்.

மக்கள் எதையும் ஏற்றுக் கொள்ள பழகிவிடும் மனோ-நிலையில் மக்கள் புரட்சி ஏற்படாத வண்ண-மும், அவற்றை அடக்கும் வண்ணமும் கொள்கை ரீதி-யான அரசுகள் தயாராகவே இருக்-கின்-றன. அதன் யதார்த்த அரசியல் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு மக்கள் எதிர்கொள்ளத் தயாராவது அறி-வார்ந்த அணுகு-முறை என்பதில் மிகை இல்லை.

 

அபூஷேக் முஹம்மத்

அபூஷேக் முஹம்மத்

error: Content is protected !!