Featured Category

இலங்கை முஸ்லிம்களின் வாழ்வுதனை சூது கவ்வுமா ?

1.உலகில் எந்த மூளையில் எந்த நேரத்தில் என்ன நடக்க வேண்டும் என்று திட்டங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன ..
2.நபிகளார் கார்ட்டூன் படம் பிரச்சினை , நபிகளார் பற்றிய திரைப்படம்,பர்மா கலவரம், சிரியா போர், எகிப்து கலவரம், எகிப்து மக்கள் சிறையில்அடைப்பு,குஜராத்கலவரம்,முசாபர்நகர்கலவரம், லண்டன்குண்டுவெடிப்பு,இதுபோன்றஏராளமானசம்பவங்களுக்கும்
உலகஅரசியலுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கின்றது …

3.ஏகாதிபத்திய அமெரிக்கா அல்லது சீன நேச நாடுகள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டாலும் ஒரு விடயத்தில் விழிப்பாகவே இருக்கின்றது.

4.அது உலக அரங்கில் இஸ்லாமியர்களின் தலைமைத்துவம் மீண்டும்எழுச்சிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது
என்பது வாசிக்கும் பொது மக்களுக்கு வியப்பைத் தரலாம்

இலங்கை முஸ்லிம்கள் மீது கலவரத்திற்கு முன்னால் சில யூகங்கள்
*******************************************************************************..
1.பர்மா இன சுத்திகரிப்ப்புக்கு முன்னமே இலங்கையில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சிண்டு மூட்டி விடும் சிறு சிறு நிகழ்ச்சிகள் நடந்தன.ஹலால் உணவு பற்றிய சட்டத்தில் அரசு தலையிட ஆரம்பித்தது.. பௌத்தர்கள் இந்த சிறு விடயத்தை வைத்து பெரிய பிரச்சினைகளை உருவாக்கவே அவ்வபோது தலையிட்டனர் .இலங்கை முஸ்லிம் மக்களின் ஒற்றுமை நடக்க விருந்த பெரிய ஆபத்துகளை விவேகமாக தடுத்து நாட்டில் அமைதியை காப்பாற்றியது.

2.அடுத்த கட்ட கலவரமாக ஆசியாவில் மிகப்பெரும் இனப்படுகொலைகள் பர்மாவில் பௌத்தர்களால் அரகேற்றப்பட்டது. பௌத்தர்களின் பாசிச வெறியாட்கள் அதிகமான மக்களை கொன்று ஒழித்தனர்…

3.பர்மா கொலையில் கண்ட ரத்த வெறி பௌத்தர்களுக்கு மீண்டும் தலைக்கனத்தை ஏற்றியது.இலங்கை முஸ்லிம்கள் மீது மீண்டும் கலவரத்தை உருவாக்கி அவர்களை நாதியற்ற அனாதைகளாக மாற்ற இலங்கை பாசிஸ்ட்களும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சீனா கைக்கூலி அரசியல்வாதிகளும்முன்னமே திட்டம் தீட்டியது போல இருக்கின்றது. இவர்களது கலவர யுக்தி ஹிந்துத்வாக்க்ளின் அதே பாசிச வழிமுறையை போலவே உள்ளது

4.சென்னையில் எழும்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் இலங்கை முஸ்லிம் ஒருவன் தீவிரவாதியாக பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி பலருக்கும் நினைவிருக்கலாம் .இதுவரை இந்தியாவில் முஸ்லிம்கள் தீவிரவாதியாக உடனடியாக சித்தரிக்கப்பட்டு பத்திரிக்கையில் போடப்பட்ட நிலை தாண்டி , “இலங்கை முஸ்லிம் தீவிரவாதி” என்பது இலங்கையில் வெட்டி பழி சுமத்தி விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தின் அமைதியை எதிர்காலத்தில் குலைக்க இந்த நிகழ்வில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டமிடல் போலவே தோன்றுகின்றது ..

5.முஸ்லிம்களின் உணர்வை தூண்டி விட்டு வகுப்பு கலவரம் செய்து விட்டு முஸ்லிம்களை கொலை செய்வதும், கூட்டத்தில் முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடுவதும் பாசிசத்தின் தீவிரவாத சிந்தனை ஆகும்.

6.இதை பயன்படுத்தி பாசிச சக்திகளுக்கு உதவும் காவல் துறை மற்றும் ராணுவ அதிகாரிகளும் முஸ்லிம்களை வேறு அறுக்க உதவலாம் …பாசிச சிந்தனை ஆளும் வரக்கங்கள் கலவரத்தை கண்டு கொள்ளாமல் வழக்கிற்கு மூடு விழா நடத்தலாம்

7.இதன் மூலம் புத்த பேரினவாதம் தன் ராணுவ பலத்தை இலங்கையில் நிறுவி தமிழகத்தை அச்ச மூட்ட கூட எண்ணலாம்..

8.நடக்கும் நிகழ்வை வைத்து பாருக்கும் போது இஸ்லாமியர்களை அழிப்பதன் மூலமே உலக அரசியலில் வலிமை பெறலாம் என்பது அவர்கள் நீண்ட கால திட்டம் ..

9..மேலும் மோடி ராஜ பக்சே சந்திப்பும் விருந்தும் முஸ்லிம்களை காவு கொள்ளும் ஒத்திகை கூட்டமோ என்று நடந்த சம்பவங்களை வைத்து அப்பொழுதே யூகிக்க முடிந்தது

10 .சீன நாடு என்பது அமெரிக்கா எதிர்ப்பான நாடு என்ற என்ற பிம்பத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை .மாறாக சர்வதேச கார்ப்பரேட் கையகப்படுத்தி உலகை ஆளும் ஏகாதிபத்திய அதிகார வர்க்கங்கள் உடைய கிளையாகவே சீன புத்த அரசு அவர் தம் மாகாணங்களில் செயல்பாடு கின்றது என்பதை உற்று நோக்க முடிகின்றது .

11..மைத்திரி அரசு இலங்கைக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தரும் எதிர் வினைகள் .எல்லாம் திட்டமிட்ட ஒன்றாக தான் இருக்கின்றது..

12.சிறு நாடோடி கூட்டங்கள் கூட தங்கள் சமூகங்களை காக்க எதிர்த்து போராடும் போது முஸ்லிம் சிறுபான்மை நாட்டு மக்கள் இன்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டு தயங்கி நிற்கின்றார்கள் .

13.ஏகாதிபத்திய அமெரிக்க மற்றும் கம்யுனிஷசீ ன நேச நாடுகள் சிறுபான்மை முஸ்லிம் நாட்டு மக்களின் போராட்ட உணர்வை தன் சூதினால் மழுங்கடித்து விட்டனரோ என்றே என்ன தோன்றுகின்றது ?

அபூஷேக் முஹம்மத்

error: Content is protected !!