Featured Category

ஃகூவ்தா தாக்குதலின் உள் அரசியல் -சிரியா ரிப்போர்ட்!

இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பிரதேசம் அஷ் ஷாம் என்று அழைக்கப்படும் சிரியா, பாலஸ்தீனம்,
ஜோர்டான் ,லெபனான் போன்ற பகுதிகள் ஆகும்.  இஸ்லாம் அங்கு பரவுவதற்கு  முன்பிருந்தே  இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சிரியாவின் சிறப்பை பற்றி பல செய்திகளின் வாயிலாக  நமக்கு அறிவித்துள்ளார்கள் மேலும் குர்ஆனிலும் சிரியாவைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது ” மஸ்ஜிதுல்  அக்ஸாவையும் அதன் சூழவுள்ள பகுதிகளையும் (சிரியாவையும் ) அபிவிருத்தி அடைய செய்துள்ளோம்” (I7:1)  என்று கூறிகிறான்.
மேலும் சிரியாவைப் பற்றி கூறும் இப்னு அசாக்கிர் என்ற வரலாற்று அற்ஞர்  தனது தாரிகுல் திமிஷ்க் ( சிரியாவின் வரலாறு) என்ற 60 பாகங்களை கொண்ட தனது நூலில் ” கிட்டத்தட்ட 10,000 நபித்தோழர்கள் வாழ்ந்த பூமி என்றும்  நாம் எந்த இடத்தை அகழ்ந்தாலும் அங்கு கிடைக்கும் மக்கி போன எலும்புகள் நபித்தோழர்களின் எலும்பாக இருக்க வாய்ப்புள்ளது” என்று குறிப்பிடுகிறார்.
மேலும் ஷியாக்களுக்கு உலகிலேயே வெறுப்பான பூமியும் சிரியா ஆகும். சிரியாவை பற்றி நம்மை விட கிறிஸ்தவ உலகம் நன்கு அறிந்து வைத்துள்ளாதாலோ சிலுவைப் போர்கள் தொட்டு ஒவ்வொரு  முறையும்  ஃபாலஸ்தீனை அடுத்ததாக குறி வைப்பது சிரியா ஆகும்.
எனவே முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் என்ன நடக்கிறது என்பது Uற்றி நாம் தெரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
கிழக்கு ஃகூவ்தாவின் நடப்பு நிலைகள்:
திமிஷ்க் – ன் மேற்கே 27 கி.மீ தொலைவில் லெபனானின் கிழக்கு மலைத் தொடரிலிருந்து உற்பத்தி ஆகும் நதி பராதா என்று அழைக்கபடுகிறது  அந்த நதிக்கு கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு பசுமையான பாலைவனச்சோலைகள்  இருக்கின்றன. அந்த நதிக்கு கிழக்கு பக்கத்தில் உள்ள சோலைக்கு கிழக்கு ஃகூவ்தா  என்று அழைக்கப்படுகிறது. அது ஓர் விவசாய பூமியாகும். ஏறக்குறைய  20 லட்சம் மக்கள் வாழ்ந்த  நகரின் தற்போதைய மக்கள் தொகை வெறும் 4 லட்சம் ஆகும்.  பலர் போரினால்  கொல்லப்பட்டும் பலர் அகதிகளாகவும் வெளியேறி இருக்கின்றார்கள்.
அந்த கிழக்கு ஃகூவ்தா பகுதி தற்பொழுது குழந்தைகளை துடிக்க துடிக்க  கொல்வதில் பெயர் போன  பஸருல் அசாத்தை  எதிர்க்கும் போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.அதை அவர்களிடமிருந்து மீட்பதாக கூறிக் கொண்டு  2013 ஆம் வருடத்தில் இருந்து  கிழக்கு ஃகூவ்தா பகுதிகள்  முழுவதும் பயங்கரவாத ரஷ்ய ஆதரவு அரசப் படையால் சுற்றி வளைக்கப்பட்டு  தினம் தினம் குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள். பயங்கரவாத ரஷ்ய ஆதரவு அரசால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளிவர பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.  அதே நேரம் மக்கள் வெளியேறுமாறு  துண்டுப்பிரசுரங்களை அரசு  படை விமானங்கள் மூலமாக விநியோகிக்கிறது .
உதாரணமாக , கடந்த 8 மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபை
போரினால் காயப்படுத்தப்பட்ட 500  க்கும் மேற்பட்ட நபர்களை வெளியேற அனுமதி கேட்டும் மறுத்து விட்டது. இதனால்  நோய்வாய்ப்பட்ட 22  பேரும் இறந்து போனார்கள். இரண்டு தரப்பும் மக்களை  பேச்சுவார்த்தை நடத்த துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.
இதுவரை அசாத்தின் அரசை விமர்சித்து வந்த மக்கள் வெளியேற  நினைத்தாலும்  அதற்கு பிறகு ஏற்படும் அரசு தரப்பு காவல் துறை தரும் தொல்லைகள்,  சிறைச் சித்திரவதை, மற்றும் சிறை  மரணத்திற்கு  ஆளாவர்.  இவற்றை எல்லாம் விட்டு தப்பினால் கூட , தங்கள் ஆண் மக்களை கட்டாய ராணுவச் சேவைக்கு நிர்பந்திக்கும் அரச பயங்கரவாதத்திற்கு  பயந்து வெளியேறும்  எண்ணத்தை மாற்றிக் கொண்டுளார்கள்.
அதே நேரத்தில் புரட்சியாளர்களும்  மக்களை வெளியேற அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும்  லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அம்னெஸ்டி என்ற
மனிதநேய அமைப்பால் முன் வைக்கப்படுகிறது.
மருத்துவ உதவிகள் அத்தியாவசிய உணவுகள் கிடைப்பதில் பெரும் தட்டுபாடு நிலவுகிறது. சிரிய அரசுப் படைகள் உதவிகள் கிடைக்கும் அனைத்து வழிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து  தடுத்து விட்டன. சில நேரங்களில் அனுமதி அளிக்கப்பட்டாலும் தேவைக்கும் மிகக் குறைவான உணவுகள் மற்றும் மருந்துகள்  அனுமதிக்கப்படுகின்றன. மேலும் சில நேரங்களில் அவை  அரசு சோதனைச் சாவடிகளில் திருடப்படுவதாகவும்  திருப்பி அனுப்ப படுவதாகவும் அரபு நாடுகளை மையமாக கொண்டு  செயல்படும்
ரெட் கிரஸண்ட் என்ற மனித நேய சேவை அமைப்பு தெரிவித்துள்ளது
2017 – ஆம் ஆண்டு முன்பு வரை கிளர்ச்சியாளர்கள்  சுரங்கள்  மூலமாக மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் , மருந்துகள், மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களைக் கடத்தி கொண்டு வந்து விநியோகித்தனர். ஆனால் பயங்கரவாத ரஷ்ய ஆதரவு அசாத்தின் அரசுப் படைகள்  கடந்த ஆண்டில் அவ்வழியைக் கண்டறிந்து அடைத்து விட்டன. வேறு வழியின்றி அனைத்து பொருட்ககளும் வஃபியுத்தீன் சோதனை சாவடி வழியாகவே கொண்டு வரப் படுகின்றன.
எனவே, அவற்றிற்கான மொத்த அதிகாரமும் அதிபர் அசாத்தின் தொடர்புடைய வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் நிர்ணயிப்பதே பொருட்களின் விலை ஆகும். இதில் சில கிளர்ச்சியாளர்களும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. திமிஷ்கில் 10-ரூபாய் மதிப்புள்ள சிரியன் ரொட்டி துண்டு இங்கு 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக ஐ.நா சபை கூறுகின்றது.
கிழக்கு ஃகூத்தாவில் இயங்கும் போராளி ஆயுத குழுக்களும் உள்முரண்பாடுகளும்:
ஜாயிஸ் அல் இஸ்லாம் (JAI) எனப்படும் போராளி குழுவே இந்த பகுதியில் சிரியா அரச படைகளுக்கு எதிராக இயங்கும் மிகப்பலமான ஆயுத கிளர்ச்சி குழுவாகும். JAI சிரியாவில் வேறு எந்தபகுதியில் இயங்குவதும் இல்லை. இந்த போராளி குழுவை உருவாக்கிய சஹ்றான் அல்லூஷ் 2015 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை ஃகூத்தா ஜாயிஸ் அல் இஸ்லாத்தின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக பைலைக் அர் ரஹ்மான் (FAR) எனும் மற்றுமொரு ஆயுத போராளி குழு பலமான இரண்டாம் நிலையில் இந்த பகுதியில் இயங்குகிறது. இதற்கு மேலதிகமாக அஹ்றார் அஷ் ஷாம் மற்றும் அல் காயிதாவின் ஹயாத் தஹ்ரீர் ஷாமும் (HTS) இந்த பகுதியில் இயங்கும் ஆயுத குழுக்களாகும்.
முற்றுகைக்குள் இருந்தாலும் பலமான முன்னரங்குகளால் பாதுகாக்கப்பட்ட கிழக்கு ஃகூத்தா அல்லூஷின் மறைவின் பின்னர் போராளி குழுக்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளால் பலமிலக்க தொடங்கியது. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒவ்வொரு வருடம் எதோ ஒரு காலத்தில் ஏதாவது இரண்டு குழுக்களுக்கு இடையில் யுத்தம் ஆரம்பிப்பதும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முடியுமான அளவு ஒரு பகுதியை சிரியா இராணுவம் கைப்பற்றுவதுமாக தொடர்ந்து வந்தது. முற்றுகைக்குள் இருக்கும் வெவ்வேறு நகரங்களையும் , முன்னரங்கு காவல் நிலையங்களை வெவ்வேறு போராளி குழுக்களின் கட்டுப்பாடில் இருந்து வந்தாலும் பெரும் பகுதி இன்று வரை ஜாயிஸ் அல் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. நல்லநேரம் ஃகூத்தாவில் ஐஸ்ஐஸ் இயங்கியிருக்கவில்லை. இல்லை என்றால் ஹாமா மற்றும் தென் இத்லிபில் நடந்ததை போல இந்நேரம் முற்றுமுழு ஃகூத்தாவும் சிரியா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்.
ஏன் கிழக்கு ஃகூத்தா இலக்கு வைக்கப்பட்டது.
ஆறு வருடங்களாக தொடரும் சிரியா யுத்தத்தில் தற்போதைய நிலவரம் சிரியா இராணுவத்திற்கு வாய்பாகவே இருக்கிறது. துருக்கிய எல்லையில் இருக்கும் இத்லீப் மற்றும் ஜோர்தான் எல்லையுடன் இருக்கும் தர்ரா தவிர்ந்த சிரியா மத்தியில் போராளிகளின் கட்டுப்பாட்டில் இரண்டே இரண்டு பகுதிகள்தான் எஞ்சியிருக்கின்றன. ஒன்று ஹோம்ஸ் நகருக்கு வடக்கில் இருக்கும் ஒரு பகுதி. அது போர் நிறுத்த உடன்படிக்கையில் இருக்கிறது. மற்றையது தற்போது பிரச்சினையாகியிருக்கும் கிழக்கு ஃகூத்தா.
நெருங்கிய கட்டிடங்களின் கீழ் நிலக்கீழ் சுரங்கப்பாதைகளை (underground tunnel) கொண்டு அமைக்கப்பட்ட பலமான முன்னரங்குகளுடன் போராளிகள் இருப்பதால், East Ghouta is a tough nut to crack. அதன் காரணமாகவே பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை தொடர்ச்சியாக சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய ஒரு களமாக இனங்காணப்பட்டு , ஏனைய பல பகுதிகள் தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை பொறுமையாக இருந்து, அது சாத்தியமாகியதன் பின்னர் இறுதி களமாக தற்போது ஃகூத்தாவை கைப்பற்றுவதற்காக முடிவை சிரியா அரசு எடுத்திருக்கிறது.
அதேநேரம் முழு டமாஸ்கஸ் நகரமும் போராளிகளின் செல் வீச்சு இல்லைக்குள் இருப்பதால், ஃகூத்தாவை என்ன விலை கொடுத்தேனும் கைப்பற்றிவிட்டால் , தலைநகர் பாதுகாப்பாக மாறும் அதேநேரம் துருக்கிய ஜோர்தானின் எல்லைப்பகுதிகள் தவிர்ந்த மத்திய சிரியாவின் ஏனைய அனைத்து பகுதிகளும் தமது கட்டுப்பாடுக்குள் வந்துவிடும். அப்படியான ஒரு நிலையில் இந்த வருடம் (2018) இறுதிக்குள் யுத்தத்தை முடித்துவிட்டோம் என்று அறிவிப்பதற்கு ரஷ்யா மற்றும் சிரியா அரசுகள் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிகின்றனது. ஆனால் அதற்காக கொடுக்கப்படும் விலை பல ஆயிரம் அப்பாவிகளின் உயிர்கள் என்பது மட்டும் இப்போதே உறுதியானது.
பிரச்சார யுத்தம்
சிரியா யுத்தம் என்பது உள்நாட்டு மோதல் என்று அழைக்கப்பட்டாலும் அது உண்மையல்ல. சிரியா யுத்தம் சர்வதேச பிராந்திய நாடுகளின் பலப்பரீட்சை களம் என்பதே உண்மையாகும். பொதுமக்கள் மதம், மொழி, இன ரீதியாக பிரிக்கப்பட்டு மோதலுக்கு உந்தப்பட்டிருந்தாலும் என்ன விலை கொடுத்தேனும் தமது பூகோள அரசியல் நகர்வை கொண்டு நடத்தவேண்டும் என்பதற்காக சர்வதேச மற்றும் பிராந்திய வல்லரசுகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதும் அவர்களின் வெவ்வேறு அஜெண்டாவுக்கு அமைவாகவே பிஞ்சு குழந்தைகள் உட்பட பல லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் குருதிகள் ஒட்டப்படுகிறது என்பதே கசப்பான உண்மையாகும்.
சிரியா யுத்தத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அப்பாவி மொதுமக்கள் ஏதாவது ஒரு தரப்பினால் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சிரியா யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினதும் கைகளிலும் அப்பாவி பொதுமக்களின் குருதி படிந்திருக்கிறது. எனினும் நாம் யாருக்காக எப்போது அழனும் என்பதையும் அதே ஏகாதிபத்திய வல்லரசுகளே தீர்மானிக்கிறார்கள் என்பதை உணரும் போது அருவருப்பாக இருக்கிறது.
போர்நிறுத்தம்
கிழக்கு ஃகூத்தாவில் 30 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாயிஸ் அல் இஸ்லாம் அமைப்பு போர் நிருத்தத்திற்குள் வரமாட்டார்கள் ஆகவே அவர்கள் எங்களுக்குரிய Legitimate target என்று ரஷ்யாவும் , ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் மக்கள் வெளியேறுவதற்கான மனிதாபிமான இடைவெளி என்று சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்து இருந்தாலும் மக்கள் வெளியேறுவதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன.
1. தாம் வெளியேறும் போது சிரியா இராணுவத்தால் பலி வாங்கப்படுவோம் என்ற அச்சத்தில் பல இருக்கிறார்கள்.
2. சிலர் வெளியேற விரும்பினாலும் தாம் தனித்துவிடப்படுவோம் என்று போராளிகள் வெளியேற அனுமதிக்க போவதும் இல்லை.
ஆகவே இந்த போர் நிறுத்தம் எப்படியும் வெற்றியளிக்க போவதும் இல்லை, அப்பாவி சிரியா பொதுமக்களின் அவலங்களும் இலகுவில் தீர்ந்து விடப்போவதும் இல்லை.
– தில்ஷன் முஹம்மத் & அபூஷேக் முஹம்மத்.

எடிட்டோரியல்

error: Content is protected !!