Featured Category

அமெரிக்காவுக்குத் துணை போகிறாரா ஸுதைஸி ? ஜெனிவாவில் சலசலப்பு!

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பா இஸ்லாமிய மத்திய நிலையத்தின் அழைப்பின் பேரில் வெள்ளிகிழமை ஜும்மாத் தொழுகை நிகழ்த்துவதற்காகவும் அதனைத் தொடர்ந்து ‘இஸ்லாத்தில் பாதுகாப்பும்-நடைமுறையும் அதனை பேணிப் பாதுகாத்தலும்’ என்ற தொணிப் பொருளில் உரை நிகழ்த்துவதற்காகவுமே அவர் அங்கு வருகை தந்திருந்தார்.
மக்கா இமாம் அஷ்ஷெய்க் சுதைஸி அவர்கள் உரை நிகழ்த்திய பின்னர் அவரை நோக்கி பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. அதில் கத்தார் முற்றுகை, யெமன் மீது தொடுக்கப்பட்டுள்ள பேராட்டம், பொதுமக்கள் மீதான அத்துமீறல்கள் மற்றும் இது குறித்து சவுதி அரசின் நிலைப்பாடுகள் பற்றிய கேள்விக் கணைகள் பாட்டமாய் பெய்யும் மழையாய் அவர் மீது பொழிந்தன.

அப்போது சபையில் பலத்த சலசலப்பும் இரைச்சலும் ஏற்பட்டது. மக்ரிப் வரை நிகழ்ச்சி நடைபெற திட்டம் இருந்தும் கூட சங்கடமான நிலை தோன்றவே மக்கா இமாம் மத்திய நிலையத்தை விட்டும் உடனே வெளியேறிவிட்டார்.

நிர்ப்பந்த நிலையில் இமாம் அவர்கள் அவமானப்பட்டு வெளியேறும் துன்பியல் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக உலாவருவதை அவதானிக்க முடியும். மக்கள் கோபத்தை வெளிக்காட்டும் இந்தப் பதிவுகள் தலைமைகளுக்கு நல்தொரு பாடத்ததை கற்றுத்தருவதால் அந்த நிகழ்வுகள் குறித்த பதிவுகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மக்கா இமாம் கலந்து சிறப்பித்த கூட்டத்தின் இறுதியில் மொரக்கோவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் எழுந்து நின்று,
இமாம் அவர்களை நோக்கி பேசுகையில் : ‘எதிர்வரும் 2026 உலகக்கோப்பை நடத்துவதற்கான சவுதியின் பூரண ஆதரவும், அணுசரனையும் அமரிக்காவுக்கு உண்டு என சவுதி பகிரங்கமாக அறிவித்தது. அத்துடன் மொரோகோவிற்கு எதிராகவும் அமெரிக்காவிற்குச் சார்பாகவும் சவுதி வாக்களித்தது. சவுதி அரசு ஏ
ன் இந்த நிலைப்பாட்டை எடுத்தது அதற்கு என்ன காரணம் என அவர் கேள்வி எழுப்பினார்.

மொரோக்கோ சகோதரனை தொடர்ந்து ஆல்ஜீரிய சமூக ஆர்வலர் ஸலாஹுத்தீனின் தொடுத்த கேள்விக் கணைகள் அனல் பறக்கும் தணலாய் இமாம் அவர்களை சரமாறியாக தாக்கியவண்ணம் இருந்தன.

ஆனால் மக்கா இமாம் சுதைஸி அவர்கள் கேள்விகளுக்கு பதில் தரவில்லை. அவசரமாக அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.

இதோ சமூக ஆர்வலர் ஸலாஹுத்தீன் அவர்கள் மக்கா இமாமிடம் முன்வைத்த ஆவேசமான கேள்விகள்:

மக்கா இமாம் அவர்களின் உரை முடிவடைகிறது. கேள்வி-பதில்களுக்கான அவகாசம் கொடுக்கப்படவில்லை. இமாம் சுதைஸி திரும்பிச் செல்கிறார்.

அப்போது சபையில் இருந்த அல்ஜீரிய நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸலாஹுத்தீன் அவர்கள் குறுக்கிடுகிறார்.

“கேள்வி பதில்களுக்கான நேர அவகாசம் இலையா இமாம் அவர்களே! என்னிடம் கேள்விகள் உண்டு. பதில் தரமாட்டீரோ?” என ஸலாஹுத்தீன் கத்திக் கேட்கிறார்.

“இமாம் அவர்களே! உலக நாடுகளின் சாமாதானத்திற்காக அமரிக்க நிர்வாகம் எப்படி தலைமை தாங்க முடியும்?

இமாம் அவர்களே! நீங்கள் எப்படி சமாதானம் பாதுகாப்பு பற்றி பேச முடியும்!? யெமனில் உங்கள் சகோதரர்களை பட்டினியில் வாட்டுகிறீர்கள். கத்தாரில் உங்கள் உடன்பிறப்புக்களை முற்றுகையிட்டு வதைக்கிறீர்கள்.

இந்நிலையில் பாதுகாப்பு பற்றி பேச உங்களுக்கு என்ன
யோக்கியதை உண்டு?

1992ல் அல்ஜீரிய புரட்சி, 2013ல் எகிப்திய சதிப்புரட்சி, 2016ல் துருக்கிய ராணுவப் புரட்சி என அத்தனை புரட்சிகளுக்கு பின்னாலும் உங்கள் மறைகரம் இருந்ததல்லவா!

இப்புரட்சிகளுக்கு நீங்கள் ஆதரவளித்து உதவினீர்கள் தானே!

உங்கள் ஆதரவோடு புரட்சிகள் யாவும் இனிதே நடந்து முடிந்தன.

நாளை மறுமையில் அல்லாஹ் முன்னிலையில் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்.

யெமன் படுகொலைக்கு பத்வா வழங்கிய இமாமே!
அமெரிக்காவின் அடிவருடியே! பாதுகாப்பு, சுதந்திரம் பற்றி உபதேசம் செய்வதற்கு எந்த முகத்துடன் இங்கு வந்தீர்கள்.

நாம் பாதுகாப்பு சுதந்திரம் நிறைந்த இந்த பூமியில் வாழுகிறோம். நீங்கள் சர்வாதிகளின் செருப்பாய் இழிந்து போயுள்ளீர்கள். உங்கள் பேச்சை எவன் கேட்பான்? நாசாமாகிப் போங்கள்!

அல்லாஹ்வின் சாபம் மறுமை மட்டும் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும்.

சதிப் புரட்சிகளின் போது சிந்திய ரத்தங்களுக்காக நீங்கள் பதில் சொல்ல காத்திருங்கள்.

நான் ஒரு இக்வான் அல்ல. ஆனால் எல்லா முஸ்லிம்களும் எனது இக்வான்களே!”

இந்தப் பதிவில் ஆவேசப்பட்டு கத்தும் அந்த சமூக ஆர்வலரை யாரும் திட்டவில்லை. அவரை அமைதிப்படுத்த முயற்சித்தார்களே தவிர அவரை கண்டித்து அல்லது பிடித்து அடித்து கட்டி போலீசுக்கு பாரம் கொடுக்கவில்லை.

உண்மையில் அவர் எதை பேசினாரோ அவை அனைவரும் சொல்ல விரும்பியவைதான். எல்லோரது உள்ளங்களிலும் மௌனித்துப்பபோன வார்த்தைகளை அவர் தைரியாமாக பேசினார்.

எடிட்டோரியல்

error: Content is protected !!