Featured Category

நியூசிலாந்து நாட்டின் இரட்டை மசூதி தாக்குதல்-அல்ஜஸீரா ரிப்போர்ட்!

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்த்சர்ச் நகரில் தொழுதுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து வயது குழந்தை உட்பட 50 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று மதியம் ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு நியூசிலாந்து உள்ள இரு மசூதிகளில் 10-15 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூட்டை கிறிஸ்துவ பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். டீன்ஸ்அவெ நகரில் இருக்கும் அல் நூர் மசூதி மற்றும் லின்வூட்அவெ நகரில் இருக்கும் லின்வூட்மசூதி ஆகிய இரு மசூதிகளிலும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். அல்நூர் மசூதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்ரெண்டன்டர்ரன்ட் (Brenton Tarrant) என்ற பயங்கரவாதி மசூதியின் பின்புறமாக நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டை டிவிட்டரில் நேரடியாக பதிவு செய்துள்ளான்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நியூசிலாந்து நாட்டின் பிரதம மந்திரி ஜஸின்டா ஆர்டெர்ன், “மசூதித்தாக்குதல் ஒரு திட்டமிட்ட ‘தீவிரவாதத் தாக்குதல்’ என்று கூறியுள்ளார். இது நியூசிலாந்து நாட்டின் இருண்ட நாட்களின் ஒன்றாகும் என வருத்தத்துடன் தனது கருத்துக்களை பதிவு செய்தார். மேலும் வெடிபொருட்கள் நிறைந்த இரு வாகனங்கள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க செய்ததாகவும் தெரிவித்தார்.

TVNZ ரிப்போர்ட்டர் சாம் க்ளார்க் அல்ஜஸீராவிடம் கூறுகையில்,
“தலைக்கவசம் மற்றும் முழுவதும் கருப்பு உடை அணிந்து தானியங்கி துப்பாக்கி உடன் நூர் மசூதியின் பின் வழியாக வந்த தீவிரவாதி, தொழுதுக் கொண்டிருந்தவர்களை சரமாரியாகச் சுட ஆரம்பித்தான்.

பிறகு பெண்கள் மற்றும்குழந்தைகள் உட்பட 30 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது அறியக் கிடைத்தது. விசாரணையில் இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்டவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூர் மசூதியில் 41 நபர்கள், லின்வூட் மசூதியில் 7 நபர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி ஒருவர் என மொத்தம் 49 முஸ்லிம்கள் இத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நியூசிலாந்து காவல்துறை ஆணையர் மைக்புஷ் கூறுகையில், “நன்றாகவே திட்டமிட்டு இந்த தாக்குதலைநடத்தியுள்ளனர்” என்கிறார்

இச்சம்பவம் குறித்து ஒரு பெண் உட்பட நான்கு பயங்கரவாதிகளை நியூசிலாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் தாக்குதல் நடத்திய போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்த்சர்ச் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தொழுவதற்கு கூட நியூசிலாந்தில் இருக்கும் எந்த மசூதிக்குச் செல்ல கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு நபர்களிடமும் நியூசிலாந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். “இத்தாக்குதலில் சில முழுமையான துணிச்சலான செயல்கள் இருக்கிறது என சுருக்கமாக புஷ் தெரிவித்தார். இதில் மற்றவர்களின் தலையீடுகள் நிச்சயம் இருக்கலாம். இதுப் பற்றி வேறு எந்த தகவலும் என்னிடம் இல்லை” என செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்காட்மோரிசன் இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் ஆஸ்திரேலியக் குடிமகன். அவன் “வலதுசாரி”, “பயங்கரவாதி” மற்றும் “கொடுமையான தீவிரவாதி” என தன்னைத் தானே முன்னிலைப்படுத்திக் கொண்டான். நியூசிலாந்தில் நடந்த இத்துயரமானசம்பவத்திற்கும் நாட்டிற்கும் இடையே ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என கூறிய அதேநேரத்தில் துப்பாக்கி ஏந்திய நபரைப் பற்றி கூடுதல் தகவல்கள் தருவதற்குமறுத்துவிட்டார்.

“மிகவும் துயரமான நிலைகுலைய செய்த இத்தாக்குதல்எங்களை ஒரு தீய சக்தியாக நினைவு கூர்ந்து கொண்டே இருக்கும்” என உருக்கமாக பதிலளித்தார் ஸ்காட்மோரிசன்.

கருப்புஉடைஅணிந்திருந்தனர்

கருப்பு உடையணிந்த ஒருவன் அல் நூர் மசூதியின் வளாகத்தில் நுழைந்த பிறகு எண்ணற்ற துப்பாக்கி சுடும் சத்தமும்அதைத் தொடர்ந்து நிறைய நபர்கள் மசூதியில் இருந்து அதிர்ச்சியுடன் வெளியேறினர் என சம்பவத்தை நேரில் பார்த்த லென்பெனெஹா கூறுகிறார். அவசர உதவியாளர்கள் வருவதற்கு முன்பே “துப்பாக்கி ஏந்திய அந்நபர் தப்பிச் செல்ல முயன்றார்” எனவும் அவர் தெரிவித்தார்.

பெனெஹா மசூதிக்கு அருகே வசித்து வருகிறார். மசூதியின் உள்ளே சென்று உதவலாம் எனச் சென்ற போது “இறந்தவர்களின் சடலங்களே எங்கு பார்த்தாலும் தெரிந்தது என்கிறார் பெனெஹா. ஆடை முழுவதும் இரத்தக் கரையுடன் மசூதியின் இருந்த ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய பொழுது மேஜையின் கீழ் மறைத்துக் கொண்டதாக செல்கிறார். மசூதியின் உள்ளே 50 நபர்கள்இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொழுகையாளிகள் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியே தப்பிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர் ஆனால் “அவர்களில் பெரும்பாலானோர் சுடப்பட்டிருந்தனர், சிலர் 16 வயதுக்கு உட்பட்டிருந்தனர்” என சாம்க்ளார்க் கூறுகிறார். 10 முதல் 15 நபர்கள் மசூதிக்கு வெளியே இருந்து “சிலர் இறந்ததையும் உயிர் பிழைத்ததையும்” பார்த்ததாக அவர் கூறுகிறார்.

கிறிஸ்த்சர்சில் சக்கர நாற்காலியில் நடமாடும் ஃபரீத் அஹ்மத் அல்ஜஸீரா ஊடகத்திற்கு கூறுகையில், “சம்பவம் நடந்த பொழுது மசூதிக்குப் பின் இருந்ததாகவும் ஏழு நிமிடங்கள் வரை துப்பாக்கி சூட்டின் சத்தம் கேட்டுக் கொண்டேஇருந்தது. அடுத்தடுத்து துப்பாக்கி சூட்டின் சத்தம் கேட்ட பொழுது , பார்கிங் செய்யப்பட்டிருந்த தனது காருக்கு பின்னே தவழ்ந்து ஒளிந்துக்கொண்டேன்” என ஃபரீத் கூறுகிறார்.

“10 நிமிடங்களுக்கு பிறகு, துப்பாக்கி சூடு நடத்தியவன் வெளியேறியதாக நினைத்துக் கொண்டு மசூதிக்குள் சென்ற போது என்னால் நம்பவே முடியவில்லை வலது பக்கம் இருந்த முக்கிய அறையில் 20 ற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அதில் சிலர் கதறிக் கொண்டும் சிலர் இறந்தும் இருந்ததை நான் பார்த்தேன்” என்றும் அவர் கூறுகிறார்”.

மேலும் அவர் கூறுகையில் “அந்த தளத்தில் நூற்றுக்கணக்கான தோட்டாக்களின் கூடுகள் கிடந்ததை பார்த்தேன். கிறிஸ்துசர்சின் இரண்டாம் நேரடி சாட்சியாளர் ரம்ஸான் அலி, ஒரு பெண் இறந்து போனதை செவியுற்றதாக கூறுகிறார். மசூதி பல உட்பிரிவுகளைக் கொண்டது. உங்களுக்கு தெரியும், அவன் உள்ளே இருந்து சுட்டுக்கொண்டிருக்கிறான், அடுத்த அறைக்கு சென்று அங்கும் சுடுகிறான். அது பெண்களுக்கானஅறையாகும், அங்கு சென்று அவர்களை சுடுகிறான். அவர்களில் ஒரு பெண் இறந்து போனதாக நான் கேட்டேன். அவர் இறந்து இருக்கக் கூடாது என நம்புகிறேன்” என்று ரம்ஸான் அலி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் சர்வதேச முஸ்லிம்கூட்டமைப்பைச் சேர்ந்த தாஹிர் நவாஸ், மசூதியின் செயல்பாடுகளை முடக்குவதற்கே அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார். ஒட்டுமொத்தச் சமூகமும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது அமைதியான நாட்டில் இப்படியொரு அசம்பாவிதத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தாக்குதலின் விளைவாக, மசூதிகள் எங்களின் செயல்பாடுகளைமுடக்கியுள்ளனர்; மேலும் முன்பைவிட அதிக பாதுகாப்பைப் பெற முயல வேண்டும்” என்றார்.

சமூக வலைதளங்கள் ஊடாக பகிரப்பட்ட தாக்குதல் வீடியோ!

துப்பாக்கி ஏந்தியவர்களில் ஒருவன் தாக்குதல் நடத்திய வீடியோவை நேரலையாகஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளான். பிறகு இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளான். அந்த வீடியோவை முகநூலில் இருந்து குறைந்ததாகவும் பின்னர் அந்த பயங்கரவாதியின் பதிவுகளை நீக்கியதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. நியூசிலாந்து இரட்டை மசூதி தாக்குதல் தொடர்பான 1.5 மில்லியன் வீடியோக்களை முகநூல் தடை செய்துள்ளது

“இத்தாக்குதல் தொடர்பான காணொளி கிறிஸ்த்சர்ச் சுற்று வட்டாரத்தில் சமூக வலைத்தளத்தில் பரவியது வேதனைக்குரிய ஒன்று என காவல்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர் என காவல்துறையினரின் அறிக்கை குறிப்பிடுகிறது.

“இணையதள முகவரிகள் பகிராமல் இருப்பதற்கு நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். ஒவ்வொரு காணொளிகளையும் நீக்குவதற்காக கடுமையாக வேலை செய்தோம்”

அறிக்கையில், தாக்குதலின் ஒரு காட்சியில் “ஆக்கிரமிப்பு செய்தவர்கள்” என்ற உச்சரிப்பில் தீவிரவாதியின் மொழி நடை இருந்துள்ளது. தாக்குதல்கள் நடத்தியவர்களின் வாகனங்களில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற வெடிப்பொருட்கள் செயலிழக்க செய்ததாக காவல் துறை ஆணையர் மைக்புஷ் தெரிவித்துள்ளார். நவீன வெடிபொருள் உபகரணங்கள் மூலம் “IED வெடிமருந்து பொருத்தப்பட்ட வாகனங்களின் சில புகார்களை குறிப்பிட்டு, நாங்கள் அவைகளை பாதுகாத்தோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை தொழுகையில் நடந்த இத்தாக்குதல் “தீவிரவாதத்
தாக்குதல்களாக இருக்குமா?” என பத்திரிகையாளரின் கேள்விக்கு “விசாரணைகள் நடந்துக் கொண்டிருக்கிறது” என பதிலளித்தார் புஷ்.

ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான கோபம்

2017 ஆம் ஆண்டு 16,000 புதிய நியூசிலாந்து மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி, ஊடகங்களில் “முஸ்லிம்கள் குறித்த தவறான சித்திரிப்பு” சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடா கோ பல்கலைக்கழ தலைமை ஆய்வாளர் டாக்டர். ஜான்சவார் அல்ஜஸீராவிடம்பேசிய போது, “பொதுவாக உயர் கல்வி பயின்றவர்கள் மற்றும் இடதுசாரி சிந்தனை உடையவர்களால் முஸ்லிம்கள் என்றில்லாமல் நாட்டில் இடம்பெயர்தல் குறித்து நேர்மறையான எண்ணங்களையேகொண்டுள்ளனர்” என்கிறார்.
“எங்களது ஆய்வின் மூலம் உயர் கல்வி பயின்றவர்கள், வலது சாரி சிந்தனையாளர்கள் ஊடகங்கள் மூலம் முஸ்லிம்கள் குறித்து கோபமடைகின்றனர். அவர்கள் அதிகமாக ஊடகச் செய்திகளை பார்க்கின்றனர், அதன் மூலம் தவறான அபிப்ராயத்தை பெறுகின்றனர்”

மேலும் அவர் கூறுகையில் நியூசிலாந்து பல தரப்பட்டகலாச்சாரங்களை உள்ளடக்கிய சமூகமாக இருக்கிறது. “முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சில தொந்தரவுகள் மற்றும் சொத்துக்களை சூறையாடுதல் நடக்கின்றது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது மேற்குலகில்நடப்பதைப் போல இங்கு அவர்கள் எண்ண முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது “எந்தவொரு பின்னணியும் இல்லாமல் வழங்கப்படும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தி வெளியீடுகளையே நியூசிலாந்து செய்தி நிறுவனங்கள் உள்வாங்க முனைகின்றன.மேற்கத்திய ஊடகங்கள் யாவும், மேற்குலக பிரச்சினைகளை மட்டுமே கவனித்து வருகின்றது” என டாக்டர். ஜான்சவார் கூறுகிறார். நாட்டின் பலதரப்பட்ட மற்றும் வரலாற்றில் நூறு வருடங்களுக்கு பழமையான முஸ்லிம் ஜனத்தொகைப் பற்றிய குறைந்த விவரங்களையே நியூசிலாந்து நாட்டின் ஊடகங்கள் அளிக்கின்றன.

உள்நாட்டு முஸ்லிம்களைகவனத்தில்கொள்வதற்கு பதிலாக, அச்சமூகத்தைப்‌‌ பற்றிய மேற்குலக ஊடக பூதக் கண்ணாடியின் வழியே பார்க்கும் பார்வையையும் வன்முறைகளையும் மட்டுமே கவனத்தில்கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நூலிழையில் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

ESPN செய்தியாளர் முஹம்மது இஸாம், சனிக்கிழமை அன்று கிறிஸ்த் சர்சில் நடைபெற விருந்த டெஸ்ட்போட்டியில் கலந்து கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் மஸ்ஜித்தாக்குதலில் எவ்வித காயங்களும் இல்லாமல் தப்பித்தனர். பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் மரியோ வில்லாவராயென் “துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு அருகாமையில் கிரிக்கெட் வீரர்கள் இருந்தனர், ஆனால் பாதுகாப்பாக இருந்துள்ளனர்” என கூறியதை நியூசிலாந்துஹெரால்டு செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது. விளையாட்டு வீரர்கள் அதிர்ந்து போயிருந்தாலும் தற்போது நலமுடன் உள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். கிறிஸ்த்சர்சில்நடைந்தஇத்தாக்குதலை தொடர்ந்து நடக்கவிருந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ்இடையேயான‌ கிரிக்கெட் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குற்றம் செய்தவர்களுக்குநியூசிலாந்தில் இடமில்லை!

அல்நூர் மசூதியில் நடந்த காட்சிகள் “நம்பமுடியாதவை” என நேரடி சாட்சிகளில் ஒருவரான பெனெஹா கூறுகிறார். “எனக்கு புரியவில்லை! இம்மக்கள் மீது எப்படி ஒருவரால் இதை செய்யமுடியும். இது அபத்தமானது. நான் கடந்த ஐந்து வருடங்களாக மஸ்ஜிதிற்கு அருகாமையில் வசித்து வருகிறேன், அவர்கள் எல்லாரும் சிறந்தவர்கள்! என்னுடன் நட்புடன் பழகுபவர்கள். என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்றும் அவர் கூறுகிறார்.

முஸ்லிம்களின் எண்ணிக்கைகள் 1 சதவீதம் ஆகும் என 2013 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. “இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரும் இடம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம்” என்று‌ ஆர்டெர்ன் கூறுகிறார்.

இங்கு பலர் அகதிகளாக இருக்கலாம். அவர்கள் நியூசிலாந்தை தங்கள் வீடாக தேர்வு செய்துள்ளனர் மற்றும் அவர்களின் வீடும் இது தான்… அவர்கள் நம்மில் ஒருவர் தான். எங்களுக்கு எதிரான வன்முறைகளால் குற்றம் செய்தவர்களுக்கு நியூசிலாந்தில் எங்கும் இடமில்லை!”

இதுபோன்ற பாரிய அளவு துப்பாக்கி சூடு நியூசிலாந்தில் மிகவும் குறைவு ஆகும் நவீன வரலாற்று மரண பட்டியலில் 1990 ஆம் ஆண்டில் அரமௌனா எனும் சிற்றூரில் நடந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. டேவிட்க்ரே என்பவன் அண்டை வீட்டார்களுடன் நடந்த தகராறில் 13 நபர்களைச் சுட்டு கொன்றுள்ளான்.

தமிழ் ரிப்போர்ட் – அபூஷேக் முஹம்மத், ரபியூல் ஆஸிக்

மூலம் – Al Jazeera News

அபூஷேக் முஹம்மத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!