Featured Category

GREAT RETRUN MARCH- நில மீட்பு தினம் ஒருவருட நினைவுகள்!

ஃபலஸ்தீன் எல்லைப்புற பகுதிகளில் தங்கள் நிலங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஃபலஸ்தீன் மக்களால் நடத்தப்படுகின்ற பேரணி தான் கிரேட் ரிட்டர்ன் மார்ச்!

2018 மார்ச் 30 ம் தேதி துவங்கப்பட்ட இப்பேரணியின் வாயிலாக,
70 வருடங்களாக அரங்கேறி வரும் இஸ்ரேலின் பயங்கரவாத செயல்களால் அபகரிப்பட்ட ஃபலஸ்தீன் மக்களின் நிலங்களை திரும்ப பெற ஆயத்தம் செய்கின்றனர். காஸா பகுதியின் எல்லையில் Palestinian Legislative Council (PLC) ஐ சேர்ந்தவர்களால் இஸ்ரேலிற்கு எதிரான மாபெரும் இப்பேரணியை “Great Return March” என அறிமுகப்படுத்தப்பட்டது.

PLC யின் துணை பிரதிநிதி அஹ்மத் பஹர் “1948 களில் ஆக்கிரமிக்கப்பட்ட எங்களது நிலங்களை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் (இஸ்ரேலின்) எல்லைப்புறத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து அணிவகுப்பை ஏற்பாடு செய்துள்ளோம்” என கூறிய அவர் மேலும், “ஃபலஸ்தீன் உரிமைகளின் புனிதத்துவத்தை உறுதிப்படுத்தவதை நாம் ஒருபோதும் கைவிட மாட்டோம்” எனவும் தெரிவித்தார்.

இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய ஆறு ஃபலஸ்தீன் மக்களை 1978 ம் ஆண்டு மார்ச் 30 ம் தேதி இஸ்ரேலிய படைகள் கொலை செய்தது. இச்சம்பவத்தை “Land Day” என ஃபலஸ்தீன் மக்களால் நினைவுக் கூறப்படுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த தேதியிலேயே மீள் வருகைக்கான பேரணியையும் நடத்துகின்றனர்!

30 மார்ச் 2018-19 வரையில் மீள் வருகைக்கான பேரணியில் கலந்து கொண்ட ஃபலஸ்தீன் மக்கள் மீதான இஸ்ரேலிய அட்டூழியங்கள்,

இறந்தவர்கள்

270 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 50 சிறார்கள், 06 பெண்கள், 02 பத்திரிகையாளர்கள் மற்றும் 03 மருத்துவ உதவியாளர்கள் அடங்குவர்.

பத்திரிகையாளர்கள் நிலை

இரண்டு ஃபலஸ்தீன் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாசர் மூர்துஸா மற்றும் அஹ்மத் அபூ ஹூசைன்.

340 ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்!

மருத்துவ உதவியாளர்களின் நிலை

பேரணியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் போதே 665 நபர்கள் தாக்குதல்களில் படுகாயமடைந்துள்ளனர்.

மூன்று மருத்துவ உதவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மூஸா அபூ ஹஸனின், ரஸான் அஷ்ரஃப் அல் நஜ்ஜார் மற்றும் அப்துல்லாஹ் கதாதி.

112 ஆம்புலன்ஸ்கள் இஸ்ரேலிய தாக்குதல்களினால் சேதமாகியுள்ளன.

படுகாயமடைந்தவர்கள்

3175 குழந்தைகள் மற்றும் 1008 பெண்கள் உட்பட 30,398 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஏறக்குறைய 136 ஃபலஸ்தீன் மக்கள் தங்களின் கைகால் உறுப்புகளை இஸ்ரேலிய துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகியுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் 536 நபர்கள் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உட்படுத்தப்பட்டவர்கள்.

படுகாயங்கள் ஏற்படுத்திய காரணிகள்

நேரடி துப்பாக்கி சூட்டால் 6857
ரப்பர் குண்டுகளால் 844
மூச்சு திணறல்களால் 2331
சிதறும் உலோகத் குண்டுகளால் 1989 பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடலில் ஏற்பட்ட காயங்கள்

1503 தலை மற்றும் கழுத்துப் பகுதிகள்
732 மார்பகம் மற்றும் முதுகு பகுதிகள்
624 அடிவயிறு மற்றும் இடுப்பெலும்பு பகுதிகள்
2232 மேல் மூட்டுகள்
7731 கீழ் மூட்டுகள்
2831 பலதரப்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள்

3469 வடக்கு காஸா பகுதிகள்
5235 காஸா
5456 மத்திய காஸா பகுதிகள்
3054 ஃகான் யூனிஸ்
1776 ரஃபா ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உறுப்புகளை இழந்தவர்கள்

136 ஃபலஸ்தீன் மக்கள் தங்களின் கைகால் உறுப்புகளை இழந்துள்ளனர். குறிப்பாக 25 குழந்தைகளின் உறுப்புகள் காயங்களால் வெட்டி எடுக்கப்பட்டது. அவைகளை இரண்டாக பிரிக்கலாம்.

122 சிறார்கள் கால்களை இழந்துள்ளனர்!
14 சிறார்கள் கைகளை இழந்துள்ளனர்!

Source – ஷிஹாப் செய்தி நிறுவனம் மற்றும் காஸா போஸ்ட்.

தமிழில் – ரஃபியூல் ஆஷிக்

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!