Featured Category

அஸ்ஸாமில் பன்றிக்கறியை உண்ணுமாறு கட்டா யப்படுத்திய காவிக்கும்பல்கள்!

அசாமில், 68 வயதான சௌகத் அலி மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்கு காரணமாக, அவரை அடித்து துன்புறுத்தி,கட்டாயமாக பன்றி இறைச்சி சாப்பிட வைத்துள்ளார்கள்.

அசாம், பிஸ்வநாத் சாரியலியில் திங்களன்று திட்டிக்கிடும் சம்பவமாக 68 வயதான சௌகத் அலியின் மீது ஒரு கோபம் கொண்ட கூட்டம் சரமாரியாக தாக்குதல் நடத்தியும் பன்றி இறைச்சியை சாப்பிட கட்டாயத்துக்கு உட்படுத்திவுள்ளனர்.

35 வருடமாக இவர் நடத்தி வரும் line ஹோட்டலிற்கு செல்லும் வழியில் இந்துத்துவ கும்பலால் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் தாக்குதலின் போது இஸ்லாத்தை இழிவுபடுத்துயும் அவரை படமும் பிடித்துள்ளனர்.

தாக்குதல் மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிட கட்டாயப்படுத்திய பிறகு, அவரை அங்குள்ள மக்கள் சுற்றி சூழ்ந்துக் கொண்டக் காரணத்தினால் அங்கு நிலைமை பதட்டம் அடைந்தது.

பின்னர் காவல் துறை அந்த கூட்டத்தை கலைத்துவிட்டு சௌகத் அலியை பிஷ்வநாத் சாரலியலில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்

அஸ்ஸாமில் 10-க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூகங்கள் இறைச்சி சாப்பிடுவதால், மாட்டிறைச்சி சட்டவிரோதமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஸ்வாக்

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!